பாடம் 7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
பாடம் 7. > காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
- வஹாபி கிளர்ச்சி
- ஃபராசி இயக்கம்
- பழங்குடியினர் எழுச்சி
- கோல் கிளர்ச்சி
விடை ; ஃபராசி இயக்கம்
2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோஇறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
- டிடு மீர்
- சித்து
- டுடு மியான்
- ஷரியத்துல்லா
விடை ; டுடு மியான்
3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
- சாந்தலர்கள்
- டிடு மீர்
- முண்டா
- கோல்
விடை ; சாந்தலர்கள்
4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
- தாதாபாய் நௌரோஜி
- நீதிபதி கோவிந்த் ரானடே
- பிபின் சந்திர பால்
- ரொமேஷ் சந்திரா
விடை ; பிபின் சந்திர பால்
5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
- 1905 ஜூன் 19
- 1906 ஜூலை 18
- 1907 ஆகஸ்ட் 19
- 1905 அக்டோபர் 16
விடை ; 1905 அக்டோபர் 16
6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
- கோல் கிளர்ச்சி
- இண்டிகோ கிளர்ச்சி
- முண்டா கிளர்ச்சி
- தக்காண கலவரங்கள்
விடை ; முண்டா கிளர்ச்சி
7. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
- அன்னிபெசன்ட் அம்மையார்
- பிபின்சந்திரபால்
- லாலா லஜபதி ராய்
- திலகர்
விடை ; திலகர்
8. நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
- தீன பந்து மித்ரா
- ரொமேஷ் சந்திர தத்
- தாதாபாய் நௌரோஜி
- பிர்சா முண்டா
விடை ; தீன பந்து மித்ரா
II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-
1. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான _________________ 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை ; வஹாபி கிளர்ச்சி
2. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி _________________
விடை ; கோல் கிளர்ச்சி
3. _________________ குத்தகை சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது
விடை ; சோட்டா நாக்பூர்
4. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு __________
விடை ; 1908
5. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டஆண்டு _____________
விடை ; 1885
III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:-
1. i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது
ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
- (i) (ii) மற்றும் (iii) சரியானவை
- (ii) மற்றும் (iii) சரியானவை
- (iii) மற்றும் (iv) சரியானவை
- (i) மற்றும் (iv) சரியானவை
விடை ; (i) (ii) மற்றும் (iii) சரியானவை
2. i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
- (i) மற்றும் (iii) சரியானவை
- (i), (iii) மற்றும் (iv) சரியானவை
- (ii) மற்றும் (iii) சரியானவை
- (iii) மற்றும் (iv) சரியானவை
விடை ; (i) மற்றும் (iii) சரியானவை
3. கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்று தவறு காரணம் சரி.
விடை ; கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
4. கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச் கண்டது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
- கூற்று தவறு காரணம் சரி.
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
விடை ; கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
IV) பொருத்துக:-
- வஹாபி கிளர்ச்சி – லக்னோ
- முண்டா கிளர்ச்சி – பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
- பேகம் ஹஸ்ரத் மகால் – டிடு மீர்
- கன்வர் சிங் – ராஞ்சி
- நானாசாகிப் – பீகார்
விடை 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
V) சுருக்கமாக விடையளிக்கவும்
1. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
- மறு சீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
- சமய இயக்கங்கள்
- சமூகக் கொள்ளை
- மக்களின் கிளர்ச்சி
2. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
- சாரதா
- சம்பல்பூர்
- பஞ்சாபின் சில பகுதிகள்
- ஜான்சி
- நாக்பூர்
3. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா இங்கிலாந்து தொழிலகங்களுக்கு மூலப்பொருள்களை அனுப்பும் நாடாக இருந்தது.
- இந்த மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்த பொரு்களை விற்பனை செய்யும் சந்தையாக இந்தியா இருந்தது.
- இதன் மூலம் இந்திய செல்வ வளங்கள் சுரண்டப்பட்டது.
4. தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோளை விவரிக்கவும்.
- அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
- டொமினியன் அந்தஸ்து அடைவது. எ.கா. : ஆஸ்திரேலியா, கனடா
- இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.
5. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து வழங்கவும்
- தன்னாட்சி இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு லக்னோ ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டது.
- லக்னோ ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டது. லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது.
- இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
VI) விரிவாக விடையளிக்கவும்
1. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து வரிவாக ஆராயவும்
மேலதிகாரக் கெள்கை
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகளை இணைத்துக் கொண்டனர்.
வாரிசு இழப்புக் கொள்கை
அரசு கட்டிலில் அரியனை ஏற நேரடி ஆண் வாரிசு இல்லையெனில் அவர்கள் இறப்பிற்கு பின் அப்பகுதி ஆங்கிலேய ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்படும். இதன் மூலம் சாரதா, சம்பல்பூர், ஜான்சி, நாக்பூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
இந்திய கலாச்சார உணர்வுகள்
- சமயக்குறியீடுகளை தடைவிதிக்கப்பட்டதது
- தலைப்பாகைகளுக்கு பதிலாக தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
- ஆடைக் கட்டுப்பாடுகள் மதம் மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக கருதப்பட்டது.
- ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டது.
- தரக்குறைவாக நடத்தப்பட்டன.
- கலகம் என்பது புதி ரக என்பீல்டு ரக துப்பாக்கியின் கீழ் வடிவில் வந்தது.
- பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்கள், விலங்குகள் தோலில் செய்யப்ட் உறைகளும் காரணமாக அமைந்தது.
2. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?
வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்களத்தை இரண்டாகப் பிரித்தார்.
வங்காள மக்கள் நடத்து கொண்ட விதம்
- மத அடிப்படையில் வங்காள மக்களைப் பிரிக்க நினைத்த பிரிவினைச்செயலானது அவர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைத்தது.
- போராட்டக் குழுக்கள் மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் என இரண்டாக பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டன.
- வேண்டுகோள்கள், செய்திப் பிரச்சாரங்கள், மனுக்கள், பொதுக்கூட்டங்க் மூலமாக மக்கள் எதிர்ப்பு நடந்தது.
- பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது என மக்கள் முடிவு செய்தனர்.
- சுதேசி இயக்கக் கொள்கைக வங்காள மக்களிடம் வேகமாக பரவியது.
- 1905 அக்டோபர் 16, பிரிவினை நாள் துக்க நாளாக மாறியது.
- ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடி வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தா சாலையின் அணிவகுத்து வந்தனர்.
- புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது.
- சுதேசி இயக்கங்கள் நான்கு வழிகளில் மக்கள் வெளிப்படத்தினர். அவைகள் முறையே மிதவாதப் போக்கு, தீவிர தேசியவாதம், ஆக்கப்பூர்வ சுதேசி, புரட்சிகர தேசியவாதம்.
சில பயனுள்ள பக்கங்கள்