10th Std Social Science Solution in Tamil | Lesson.6 Early Revolts against British Rule in Tamil Nadu

பாடம் 6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

10th Standard Social Science Solution - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
பாடம் 6. >
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

  1. மருது சகோதரர்கள்
  2. பூலித்தேவர்
  3. வேலுநாச்சியார்
  4. வீரபாண்டிய கட்டபொம்மன்

விடை ; பூலித்தேவர்

2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்?

  1. வேலுநாச்சியார்
  2. பூலித்தேவர்
  3. ஆற்காட்டு நவாப்
      1. திருவிதாங்கூர் மன்னர்

விடை ; ஆற்காட்டு நவாப்

3. சந்தாசாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

  1. வேலுநாச்சியார்
  2. கட்டபொம்மன்
  3. பூலித்தேவர்
  4. ஊமைத்துரை

விடை ; பூலித்தேவர்

4. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

  1. கயத்தாறு
  2. நாகலாபுரம்
  3. விருப்பாட்சி
  4. பாஞ்சாலங்குறிச்சி

விடை ; நாகலாபுரம்

5. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

  1. மருது சகோதரர்கள்
  2. பூலித்தேவர்
  3. வீரபாண்டிய கட்டபொம்மன்
  4. கோபால நாயக்கர்

விடை ; மருது சகோதரர்கள்

6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

  1. 1805 மே 24
  2. 1805 ஜூலை 1
  3. 1806 ஜூலை 10
  4. 1806 செப்டம்பர் 10

விடை ; 1806 ஜூலை 10

7. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

  1. கர்னல் பேன்கோர்ட்
  2. மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
  3. சர் ஜான் கிரடாக்
  4. கர்னல் அக்னியூ

விடை ; சர் ஜான் கிரடாக்

8. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

  1. கல்கத்தா
  2. மும்பை
  3. டெல்லி
  4. மைசூர்

விடை ; கல்கத்தா

II) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் ____________________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை ; விஸ்வநாத நாயக்கர்

2. ___________________ பாளையக்காரரைத் தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்.

விடை ; சிவகிரி

3. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக _______________ பாதுகாப்பில் இருந்தனர்.

விடை ; கோபால நாயக்கர்

4. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _____________ என்பவரை அனுப்பிவைத்தார்.

விடை ; இராமலிங்கர்

5. கட்டபொம்மன் ________________ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

விடை ; கயத்தாறு

6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ______________________________ என்று கைப்படுத்தப்பட்டுள்ளது

விடை ; இரண்டாவது பாளையக்காரர் புரட்சி

7. ________________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

விடை ; பதேக் ஹைதர்

8. _________________________ வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் ஆவார்.

விடை ; கர்னல் ஜில்லஸ்பி

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது

ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்

iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவு களில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

  1. (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
  2. (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
  3. (iii) மற்றும் (iv) மட்டும் சரி
  4. (i) மற்றும் (iv) மட்டும் சரி

விடை ; (i), (ii) மற்றும் (iii) ஆகியவை

2. i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன

ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.

iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.

iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

  1. (i) மற்றும் (ii) ஆகியவை சரி
  2. (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
  3. (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
  4. (i) மற்றும் (iv) ஆகியவை சரி

விடை ; (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

3. கூற்று :- பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் முயன்றார்.

காரணம் :- மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது

  1. கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
  2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
  3. கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
  4. கூற்று தவறானது காரணம் சரியானது

விடை ; கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

4. கூற்று :- புதிய இராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலிலான இலட்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது.

காரணம் :- தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது.

  1. கூற்று தவறானது காரணம் சரியானது
  2. கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
  3. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
  4. கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி

விடை ; கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

IV) பொருத்துக

  1. தீர்த்தகிரி – வேலூர் புரட்சி
  2. கோபால நாயக்கர் – இராமலிங்கனார்
  3. பானெர்மென் – திண்டுக்கல்
  4. சுபேதார் ஷேக் ஆதம் – வேலூர் கோட்டை
  5. கர்னல் பேன்கோர்ட் – ஓடாநிலை

விடை :- 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

  • வரிவசூலித்தல்
  • நிலப்பகுதிகளை நிர்வகித்தல்
  • வழக்குகளை விசாரித்தல்
  • சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்
  • காவல் காத்தல் (படிக்காவல் என்றும் அரசுக்காவல்)
  • நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுதல்

2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

கிழக்கு அமையப் பெற்ற பாளையங்கள்

  1. சாத்தூர்
  2. நாகலாபுரம்
  3. எட்டையபுரம்
  4. பாஞ்சாலங்குறிச்சி

மேற்கில் அமையப் பெற்ற பாளையங்கள்

  1. ஊத்துமலை
  2. தலைவன்கோட்டை
  3. நடுவக்குறிச்சி
  4. சிங்கம்பட்டி
  5. சேத்தூர்

3. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

  • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
  • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
  • மேலும் அவருக்கு கர்நாடகப் பகுதியிலிருந்த குதிரைப் படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் இருந்தது.
  • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
  • களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

4. கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?

  • பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி
    வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.
  • அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை
    வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது

5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.

  • மருது சகோதரர்கள் ஜூன் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ என்றழைக்கப்படுகிறது.
  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
  • சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார்.
  • வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
  • புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
  • ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

VI. விரிவாக விடையளிக்கவும்

1. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக

  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • கம்பெனி நிர்வாகத்திற்கும் கட்டபொம்மனுக்கும், மோதல் போக்கு வளர்ந்து கொண்டே வந்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்கரர்களை வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர். இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.
  • கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் 3310 பகோடாக்களாக இருந்தது.
  • இவற்றை வசூலிப்பதன் அதிகாரம் ஜாக்சன் என்ற கர்வமுள்ளஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது
  • 1798 ஆகஸ்ட் 18இல் இராமநாதபுரத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
  • கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனைச் சந்தித்தார்.
  • ஜாக்சனின் முன்பு கட்டபொம்மன் மூன்று மணி நேரம் நிற்க வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  • ஆபத்தை உணர்ந்த கட்டபொம்மன் தனது அமைச்சரான சிவசுப்ரமணியனாருடன் தப்பிச்செல்ல முயன்றேபாது, சிவசுப்ரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
  • பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தன்னை அவமானப்படுத்தியதை பற்றி கம்பெனி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார்.
  • சிவகங்கை மருது பாண்டியர்கள் ஏற்படுத்தியிருந்து தென்னிந்திய கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்ப்பது என முடிவெடுத்தார்.
  • 1799 மே மாதம் வெல்லெஸ்லி பிரபு கட்டளையின் படி கம்பெனி படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடையும் படி கோரின
  • கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பியோடினார்.
  • புதுக்கோட்டை அரசர்களால் கட்டபொம்மன் பிடிபட்டு திருநெல்வேலிக்கு அருகே கயத்தாறில் உள்ள புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

2. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.

  • சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலை தலைமையிடமாக கெண்டு மருது சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர்
  • பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
  • சிவகங்கை சீமைக்கு முத்து வடுகநாதர் இறப்பிற்கு பின் வேலு நாச்சியருக்கு அரசுரிமை மீட்டெடுக்க அரும்பாடுபட்டனர்.
  • கம்பெனி ஆட்சி எதிர்ப்பு மற்றும் கட்டபொம்மனுக்கு ஆதரவு என இவர்களது போக்கு சிவகங்கை விழ்ச்சிக்கு இட்டுச் சென்றது.
  • 1800-ல் மருது சகோதரர்களின் கலகம் திண்டுக்கல் கோபால நாயக்கம், மலபார் கேளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் வழி நடத்தப்பட்டது.
  • கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரை, செவத்தையா ஆகிய இருவருக்கும் மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுது்து உதவியது கம்பெனி ஆட்சிக்கு பிடிக்கவில்லை
  • இவர்கள் இருவரையும் ஒப்படைக்கும்படி கம்பெனி நிர்வாகம் வற்புறுத்தவே அவர்கள் மறுத்து ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய திருச்சிராப்பள் பேரரறிக்கை வெளியிட்டனர்.
  • தமிழக பாளையக்காரர்கள் பலரும் ஒன்று சேர்ந்து மருது சகோதரர்களுடன் இணைந்து 20,000 ஆட்கள் கொண்ட படைப்பிரிவை உருவாக்கினர்.
  • ஆனால் கம்பெனி ஆட்சி தங்களுக்கு துணையாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் எட்டையபுரம் பாளையக்காரர்களை இணைத்து பாளையக்காரர்கள் படையில் பரிவினையை உண்டாக்கியது.
  • 1801 மே மாதம் மருது சகோதரர்கள் மீது கம்பெனி நிர்வாகம் தாக்குதல் தொடர்ந்தது. மருது சகோதரர்கள் படைகள் பிரான் மலையிலும் காளையார் கோவிலிலும் தஞ்சம் அடைந்தது.
  • கம்பெனி படையினரிடம் அவர்கள் பிடிபட்டவுடன் சிவகங்கை பிரிட்டிஷ் கம்பெனியில் இணைக்கப்பட்டது.
  • 1801 அக்டேபாபர் 24இல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சிவகங்கையின் வீழ்ச்சி முடிவடைந்தது.

3. வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.

  • வேலூர் புரட்சிக்கு முன்பாகவே 1792இல் திப்புவோடு ஏற்பட்ட மோதலுக்கு பின்பு சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
  • மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தார்கள் போன்றோர் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டதே 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.
  • பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பதவி உயர்வும் குறைவாக இருந்தது.
  • சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் குறைவான மதிப்பளித்தனர். அவர்களுத வேளாண் கொள்கை சிக்கலாக இருந்தது.
  • நிலக்குத்தகை முறையின் நிலையற்ற தன்மை, 1805-ம் ஆண்டு கடும் பஞ்சம், நெருக்கடி போன்றவைகள், பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய அறிவுரைகள்
  • புதிய ரக துப்பாக்கிகளில் தடவப்பட்ட விலங்குகள் கொழுப்பு மற்றும் தோல் உறைகள்.
  • இவ்வாறு எதிரப்பு தெரிவித்த அனைத்தையுமே கம்பெனி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது.
  • 1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்த புரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த கர்னல் கில்லஸ்பியின் கொடுங்கோன்மை
  • இவ்வாறு பல கூறுகள் 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.

 

சில பயனுள்ள பக்கங்கள்