பாடம் 26. அரசாங்கமும் வரிகளும்
பாடம் 26. > அரசாங்கமும் வரிகளும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்
- மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
- மைய, மாநில மற்றும் கிராம
- மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
- ஏதுமில்லை
விடை : மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
2. இந்தியாவில் உள்ள வரிகள்
- நேர்முக வரிகள்
- மறைமுக வரிகள்
- இரண்டும் (அ) மற்றும் (ஆ)
- ஏதுமில்லை
விடை : இரண்டும் (அ) மற்றும் (ஆ)
3. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
- பாதுகாப்பு
- வெளிநாட்டுக் கொள்கை
- பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
- மேற்கூறிய அனைத்தும்
விடை : மேற்கூறிய அனைத்தும்
4. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
- சேவை வரி
- கலால் வரி
- விற்பனை வரி
- மத்திய விற்பனை வரி
விடை : விற்பனை வரி
5. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
- மதிப்புக் கூட்டு வரி (VAT)
- வருமான வரி
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
- விற்பனை வரி
விடை : பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
6. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
- 1860
- 1870
- 1880
- 1850
விடை : 1860
7. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது.
- வருமான வரி
- சொத்து வரி
- நிறுவன வரி
- கலால் வரி
விடை : சொத்து வரி
8. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
- பண்டங்களின் பற்றாக்குறை
- அதிக வரி விகிதம்
- கடத்தல்
- மேற்கூறிய அனைத்தும்
விடை : மேற்கூறிய அனைத்தும்
9. வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது, மூலம் வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
- தனி நபர்கள்
- பெரு நிறுவனங்கள்
- அறக்கட்டளைகள்
- மேற்கூறிய அனைத்தும்
விடை : மேற்கூறிய அனைத்தும்
10. கட்டணங்கள் என்பது
- கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள்
- அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள்
- எதுவுமில்லை
- (அ) மற்றும் (ஆ)
விடை : (அ) மற்றும் (ஆ)
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _____________________ மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது
விடை : வரி
.
2. “வரி” என்ற வார்த்தை _______________ சொல்லிலிருந்து பெறப்பட்டது
விடை : வரி விதிப்பு
3. ______________ வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை : நேர்முக
4. __________________ பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
விடை : நிறுவன வரி
5. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி _________________ ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது
விடை : 1 ஜூலை 2017
6. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ________________________ என்று அழைக்கப்படுகிறது.
விடை : கருப்பு பணம்
III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
1. GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
- (i) மற்றும் (ii) சரி
- (ii), (iii) மற்றும் (iv) சரி
- (i), (iii) மற்றும் (iv) சரி
- மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை : (i), (iii) மற்றும் (iv) சரி
IV. பொருத்துக
1. வருமான வரி | மதிப்புக் கூட்டு வரி |
2. ஆயத்தீர்வை | ஜூலை 1, 2017 |
3. VAT | கடத்துதல் |
4. GST | நேர்முக வரி |
5. கருப்பு பணம் | மறைமுக வரி |
விடை : 1 – ஈ, 2 – உ , 3 – அ, 4 – ஆ, 5 – இ |
V கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி
1. வரி வரையறுக்க.
- “வரி” என்ற சொல் “வரிவிதிப்பு” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
- வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும்.
- வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும்.
2. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு வரி செலுத்த வேண்டும்.
- சில அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மாத வருமான போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காவும், நாட்டின் வறுமையை குறைப்பதாற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசிற்கு நீதி அவசியப்படுகிறது.
- அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது.
- நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன.
- இதன் மூலம் அரசாங்கம் அதன் “நிதி ஆதாரங்களை” திரட்டுகிறது.
3. வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
வரிகள் இரு வகைப்படும்
நேர்முக வரிகள்
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும்.
- வருமான வரி
- சொத்து வரி
- நிறுவன வரி
மறைமுக வரிகள்
ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
- முத்திரைத் தாள் வரி
- பொழுதுபோக்கு வரி
- சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி
4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
- இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி” என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.
5. வளர்வீத வரி என்றால் என்ன?
- வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத் தளம் அதிகரிக்கும்போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
- ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது.
6. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
- கருப்பு பணம் கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
- வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.
7. வரி ஏய்ப்பு என்றால் என்ன?
தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
8. வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
வரி (Tax) | கட்டணம் (Payment) |
1. வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகை ஆகும். | கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவது ஆகும். |
2. பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கி உள்ளது. | கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமம் ஆகும். |
3. வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும். | கட்டணம் (Fee) என்பது தன்னார்வமாக செலுத்துவது ஆகும் |
4. ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார். | பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. |
வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. | கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள், நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர். |
உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT). | உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம். |
VI கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி
1. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
நேர்முக வரிகள்
- நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும்.
- வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.
வருமான வரி
- வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
- இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
- இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.
சொத்து வரி
- சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
- ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
நிறுவன வரி
- இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
- இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
- இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது
மறைமுக வரிகள்
- ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
- சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்
முத்திரைத் தாள் வரி
- முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.
பொழுதுபோக்கு வரி
- எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
- உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.
சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி
- சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.
- இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
- இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி” என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.
2. GST யின் அமைப்பை எழுதுக.
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)
- மதிப்புக் கூட்டு வரி (VAT)
- விற்பனை வரி
- கொள்முதல் வரி
- பொழுதுபோக்கு வரி
- ஆடம்பர வரி
- பரிசுச்சீட்டு வரி
- மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.
மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)
- மத்திய சுங்கத்தீர்வை
- சேவை வரி
- ஈடுசெய்வரி
- கூடுதல் ஆயத்தீர்வை
- கூடுதல் கட்டணம்
- கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).
ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
- நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%)
- காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
3. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக
- கருப்பு பணம் கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
- வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.
1. பண்டங்கள் பற்றாக்குறை
- கருப்பு பணம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மூலகாரணமாக உள்ளது.
- கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கு அடுத்தடுத்து தடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
2. உரிமம் பெறும் முறை
- கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்கள் அமைப்பு, பொருட்களின் குறைான அளிப்பினால், தவறான விநியோகத்துடன் தொடர்புடையது என்று உறுதியாக நம்பப்படுகிறது.
- இதன் விளைவாக கருப்பு பணம் உருவாகிறது.
3. தொழில் துறையின் பங்கு
- கருப்புப் பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்குவகிப்பது தொழில் துறையாகும்.
- உதாரணமாக வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்வதுடன், அப்பொருளுக்கு அதிக கட்டணம் வசூலித்து அவ்வித்தியாசத்தை தனிப்பட்ட முறையில் பாண்பிப்பத்தில்லை.
4. கடத்தல்
- கருப்புப் பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்தியா கடுமையான பரிமாற்ற முறைகளை கொண்டிருந்தபோது, விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, ஜவுளிகள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சுங்கத்தீர்வை அதிகமாக விதிக்கப்பட்டது.
- அதிகாரிகளை மீறி இந்த பொருளை கொண்டு வருவது கடத்தலாகும்.
5. வரியின் அமைப்பு
- வரி விகிதம் அதிகமாக இருக்கும்போது கருப்பு பணம் தோன்றக் காரணமாக அமைகிறது.
சில பயனுள்ள பக்கங்கள்