10th Std Social Science Solution in Tamil | Lesson.13 India – Agriculture

பாடம் 13. இந்தியா – வேளாண்மை

10th Standard Social Science Solution - இந்தியா - வேளாண்மை

பாடம் 13. > இந்தியா – வேளாண்மை

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. ___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

  1. வண்டல்
  2. கரிசல்
  3. செம்மண்
  4. உவர் மண்

விடை ; செம்மண்

2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

  1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
  2. இந்திய வானியல் துறை
  3. இந்திய மண் அறிவியல் நிறுவனம்
  4. இந்திய மண் ஆய்வு நிறுவனம்

விடை ; இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

  1. செம்மண்
  2. கரிசல் மண்
  3. பாலைமண்
  4. வண்டல் மண்

விடை ; வண்டல் மண்

4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

  1. ஹிராகுட் அணை
  2. பக்ராநங்கல் அணை
  3. மேட்டூர் அணை
  4. நாகர்ஜூனா சாகர் அணை

விடை ; பக்ராநங்கல் அணை

5. ____________ என்பது ஒரு வாணிபப்பயிர்

  1. பருத்தி
  2. கோதுமை
  3. அரிசி
  4. மக்காச் சோளம்

விடை ; பருத்தி

6. கரிசல் மண் _______________ எனவும் அழைக்கப்படுகிறது

  1. வறண்ட மண்
  2. உவர் மண்
  3. மலை மண்
  4. பருத்தி மண்

விடை ; பருத்தி மண்

7. உலகிலேயே மிக நீளமான அணை_______

  1. மேட்டூர் அணை
  2. கோசி அணை
  3. ஹிராகுட் அணை
  4. பக்ராநங்கல் அணை

விடை ; ஹிராகுட் அணை

8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது –––––––––––––

  1. பருத்தி
  2. கோதுமை
  3. சணல்
  4. புகையில

விடை ; சணல்

II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

1. கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.

காரணம்: உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
  3. கூற்று சரி, காரணம் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை ; கூற்று சரி, காரணம் தவறு

2. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.

காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
  3. கூற்று சரி, காரணம் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி.

விடை ; கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல

III. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:

1)

அ) கோதுமைஆ) நெல்
இ) திணை வகைகள்ஈ) காபி
விடை ; காபி

2)

அ) காதர்ஆ) பாங்கர்
இ) வண்டல் மண்ஈ) கரிசல் மண்
விடை ; கரிசல் மண்

3)

அ) வெள்ளப் பெருக்கு கால்வாய்ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம்ஈ) கால்வாய்
விடை ; ஏரிப்பாசனம்

IV. பொருத்துக

1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்மகாநதி
2. காபிதங்கப் புரட்சி
3. டெகிரி அணைகர்நாடகா
4. ஹிராகுட்உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்
5. தோட்டக் கலைஇந்தியாவின் உயரமான அணை
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ

V. சுருக்கமாக விடையளி

1. ’மண்’ – வரையறு

  • மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
  • பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
  • மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.

2. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண

3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.

உருவாக்கம்:

தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.

வேதியியல் பண்புகள்:

கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன.

மண்ணின் தன்மைகள்:

ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

வளரும் பயிர்கள்

பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு

4. ’வேளாண்மை’–வரையறு.

வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

5. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.

  • தன்னிறைவு வேளாண்மை
  • இடப்பெயர்வு வேளாண்மை
  • தீவிர வேளாண்மை
  • வறண்ட நில வேளாண்மை
  • கலப்பு வேளாண்மை
  • படிக்கட்டு முறை வேளாண்மை

6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.

  • காரிஃப் பருவம் – ஜூன்-செப்டம்பர்
  • ராபி பருவம் – அக்டோபர்-மார்ச்
  • சையத் பருவம் – ஏப்ரல்-ஜூன்

7. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

  • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
  • இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.
  • தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.

8. கால்நடைகள் என்றால் என்ன?

  • கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும்.
  • கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
  • வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிக்கின்றன.
  • நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் இவை விளங்குகின்றன.

9. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

இந்தியாவில் மீன் பிடி தொழில் இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • கடல் மீன் பிடிப்பு
  • உள்நாட்டு (அ) நன்னீர் மீன்பிடிப்பு மீன்பிடித்தல்

கடல் மீன் பிடிப்பு

  • கடற்கரைப்பகுதி, கடற்கரையை ஒட்டியபகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமாக கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது.
  • கேரளா கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.

உள்நாட்டு மீன் பிடிப்பு

  • நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.
  • நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது.
  • இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
  • இந்தியாவில் மீனவர்களால் பிடிக்கப்படும் முக்கியமான மீன் வகைகள் கெளுத்தி, ஹெர்கிங்ஸ், கானாங் கெளுத்தி, பெர்சல், ஈல்மீன் முல்லட்டை மீன் போன்றவையாகும்.

VI. காரணம் கூறுக

1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.

காரணம்:-

இந்திய வேளாண்மை 50 சதவீதத்திற்கும் மேலான மக்களக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கிறது.

2. மழைநீர் சேமிப்பு அவசியம்.

காரணம்:-

இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால் கிடைக்கும் நீரை சேமிப்பது அவசியம்

VII. வேறுபடுத்துக

1. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

ராபி பருவம்

  • விதைக்கும் காலம் அக்டோபர்
  • அறுவடை காலம் மார்ச்
  • கோதுமை, பருப்பு, நிலக்கடலை, பார்லி முதலியன விளையும் பயிர்கள்
  • குளிர்காலப் பயிர்

காரிஃப் பருவம்

  • விதைக்கும் காலம் ஜூன்
  • அறுவடை காலம் செப்டம்பர்
  • நெல், பருத்தி, மக்காச்சோளம் கம்பு முதலியன விளையும் பயிர்கள்
  • கோடைகாலப் பயிர்

2. வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்

வெள்ளப் பெருக்கு கால்வாய்

  • இவ்வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது.
  • இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

வற்றாத கால்வாய்

  • இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும்.
  • கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.

3. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு

கடல் மீன் பிடிப்பு

  • கடற்கரைப்பகுதி, கடற்கரையை ஒட்டியபகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமாக கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது.
  • கேரளா கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.

உள்நாட்டு மீன் பிடிப்பு

  • நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.
  • இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

4. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • சமவெளிப் பகுதிகள், ஆற்றுப் பள்ளதாக்குகளிலும் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • கருப்பு நிறமாக உள்ளது
  • பீடபூமி பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

VIII. பத்தியளவில் விடையளி

1. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

இந்தியாவில் 8 மண் பிரிவுகள் உள்ளன

அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

1. வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி சமவெளிப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

2. கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம்,
    தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

3. செம்மண்

  • பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுவதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
  • தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் பயிரிட ஏற்ற மண்

4. சரளை மண்

  • வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) காரணமாக உருவாகிறது.
  • இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்ஸைடுகளால் உருவானது.
  • உயரமான மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளுவதில்லை
  • அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிட ஏற்ற மண்

5. காடு மற்றும் மலை மண்

  • பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது.
  • காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
  • இம்மண்ணில் செம்மையான மணல் மற்றும் பாறைத்துகள்கள் கலந்து காணப்படுகிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

6. வறண்ட பாலை மண்

  • வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
  • வெளிர் நிறமுடையது, தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
  • இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நீர் பாசன வசதியுடன் தினை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.

7. உப்பு மற்றும் கார மண்

  • சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
  • வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை.

8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

  • அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மை உடையது
  • கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம். போன்ற பகுதிகளில் காணப்படுகிறது
  • நெல், சணல் முதலியன பயிரிட ஏற்ற மண்

2. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோகக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பக்ரா நங்கல் அணை

  • சடெலஜ் ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று
  • பக்ராநங்கல் அணை உலகின் மிக உயர்ந்த அணைகளில் ஒன்று
  • 10,000 மில்லியனுக்கு அதிகமான தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது
  • பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் பகுதிகள் பயனடைகின்றன.

ஹிராகுட் திட்டம்

  • மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று.
  • இது உலகின் மிக நீளமான அணை

அதன் நோக்கங்கள்

  • நீரின் விரவான ஓட்டத்திலிருந்து ஏராளமான நீர் மின் சக்தியை பயன்படுத்துதல்.
  • வெள்ளம்  மற்றும் அதன விளைவாக எற்படும் அழிவைக் கட்டுப்படுத்ததல்.
  • பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களுக்கு கால்வாய் வழியாக நீர்பாசனம்
  • நீர் போக்குவரத்தை மேம்படுத்துதல்
  • வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி
  • நிலையான மற்றும் உறுதியான மின்சாம் மூலம் விரைவான தொழில்மயமாக்கல்

3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.

தீவிர வேளாண்மை

  • தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகும்.
  • சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்

தோட்ட வேளாண்மை

  • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
  • இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.
  • தேயிலை, காபி, இரப்பர், மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.

4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.

நெல்

  • நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும்.
  • உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • இது அயனமண்டலப் பயிராகும்.
  • 24oC சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
  • வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

நெல் சாகுபடி இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.

  1. விதைத் தூவல் முறை
  2. ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
  3. நாற்று நடுதல் முறை

கோதுமை:

  • நெற் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.
  • நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவிகிதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கையும் கோதுமை வகிக்கிறது.
  • இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15°C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20-25°C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.
  • சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
  • இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்