பாடம் 14. இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
பாடம் 14. > இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
- சேமிப்பு மின்கலன்கள்
- எஃகு தயாரிப்பு
- செம்பு உருக்குதல்
- பெட்ரோலிய சுத்திகரிப்பு
விடை : எஃகு தயாரிப்பு
2. ஆந்த்ரசைட் நிலக்கரி ______________ கார்பன் அளவை கொண்டுள்ளது
- 80% – 95%
- 70% க்கு மேல்
- 60% – 70%
- 50%க்கும் குறைவு
விடை : 80% – 95%
3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________
- ஆக்ஸிஜன்
- நீர்
- கார்பன்
- நைட்ரஜன்
விடை : கார்பன்
4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்.
- சேலம்
- சென்னை
- மதுரை
- கோயம்புத்தூர்
விடை : கோயம்புத்தூர்
5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்.
- குஜராத்
- இராஜஸ்தான்
- மகாராஷ்டிரம்
- தமிழ்நாடு
விடை : மகாராஷ்டிரம்
6. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்
- உயிரி சக்தி
- சூரியன்
- நிலக்கரி
- எண்ணெய்
விடை : சூரியன்
7. புகழ் பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
- ஜார்கண்ட்
- பீகார்
- இராஜஸ்தான்
- அசாம்
விடை : ஜார்கண்ட்
8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
- போக்குவரத்து
- கனிமப்படிவுகள்
- பெரும் தேவை
- மின்சக்தி சக்தி கிடைப்பது
விடை : கனிமப்படிவுகள்
II) பொருத்துக
1. பாக்சைட் | சிமெண்ட் |
2. ஜிப்சம் | வானூர்தி |
3. கருப்பு தங்கம் | மின்சாதனப் பொருட்கள் |
4. இரும்பு தாது | நிலக்கரி |
5. மைக்கா | மேக்னடைட் |
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ |
III. சுருக்கமாக விடையளி
1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக
- இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது.
- காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப்படிம எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும்.
இதன் வகைகள்
- புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
- புதுப்பிக்க இயலா வளங்கள்
2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
- ஒரு குறிப்பிட்டவேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
- வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
- உலோகக் கனிமங்கள்
- அலோகக் கனிமங்கள
3. மெக்னீசியத்தின பயன்களை குறிப்பிடுக
- உருகிய இரும்புக் குழப்போடு மக்னீசியத்தை சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு பட்டறைப் பயன்பழடு மேலும் சிறப்பாகிறது.
- மக்னீசியம் அணு உலைகளின் உட்சுவர்களை கட்டமைக்கப் பயன்படுகிறது.
- தூய சிலகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்ஸைடுகளிலிருந்தும் பிரித்தெடுக்கு மெக்னீசியம் உதவுகிறது.
4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம் உண்டாக்கக் கூடிய
ஒரு வாயு.
- இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
- இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும், மின் உற்பத்திக்கும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் விளங்குகிறது.
5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக
- நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
- ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்சசிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது.
ஆந்திரசைட் | 80 முதல் 90% |
பிட்டுமினஸ் | 60 முதல் 80% |
பழுப்பு நிலக்கரி | 40 முதல் 60% |
மரக்கரி | 40%த்திற்கும் குறைவு. |
6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளை குறிப்பிடுகசணல் உற்பத்திபகுதிகள்
- மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது.
- டிட்டகார், ஜகட்டட், பட்ஜ்-பட்ஜ், ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர் முதன்மை சணல் பொருள்கள் உற்பத்தி மையங்களாகும்.
- ஆந்திரப்பிரதேசம் , பீகார், அசாம், உத்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற பிற மாநிலங்களாகும்.
7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
மேற்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்
- பேஸ்ஸைம் எண்ணெய் வயல்
- மும்பை ஹை
- குஜராத் கடற்கரை
- அங்கலேஸ்வர்
- காம்பே-லூனி பகுதிகள்
- அகமதாபாத் – கலோல் பகுதி
கிழக்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்
- பிரமபுத்திரா பள்ளதாக்கு (அசாம்)
- திக்பாய்
- நாகர்காட்டியா
- மோரான் ஹக்ரிஜன்
- ருத்ரசாகர் – லாவா
- சாமர் பள்ளத்தாக்கு
- அந்தமான், நிகோபோரின் உட்பகுதிகள்
- மன்னார் வளைகுடா
- பலேஷ்வர் கடற்கரை
IV. வேறுபடுத்துக
1. புதுபிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்
புதுபிக்க இயலும் வளங்கள்
- பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்களாகும்.
- சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரின கழிவு வாயு வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.
புதுபிக்க இயலாத வளங்கள்
- பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.
- நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை புதுப்பிக் இயலாத வளங்கள் ஆகும்.
2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்
உலோகக் கனிமங்கள்
- உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும்.
- உலோகக் கனிமப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போனற உலோகங்கள் காணப்படுகின்றன.
அலோகக் கனிமங்கள்
- அலோகக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை.
- மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், பொட்டஷ், டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகியன முக்கிய அலோகங்க கனிமங்களாகும்
3. வேளாண் சார்ந்த மற்றறும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
- வேளாண் சார்ந்த தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப்பொருள்களை பெறுகின்றது
- பருத்தி நெசவாலைகள், சணல் ஆலைகள், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள் முக்கிய சான்றுகள்
கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
- இத்தொழில்கள் உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
- இரும்பு எஃகு தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரசாயன உரத் தொழிற்சாைலைகள் இதற்கு சான்றுகளாகும்.
4. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்
சணல் ஆலைகள்
- சணல் ஆலைகள் என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சணலிலிருந்து பொருடகள் தயாரிக்கும் ஆலைகளாகும்.
- சணல் உற்பத்தியில் உலகில் வங்கதேசத்திற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
- இந்தியாவில் சணல் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் பெறுகிறது.
- மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார், அசாம், உத்திரப்பிரதேசம்,சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா முதலியன சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும்.
சர்க்கரை ஆலைகள்
- சர்க்கரை ஆலைகள் என்பது கரும்பு, சர்க்கரை கிழங்குகள் ஆகியவற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளாகும்.
- கரும்பு உற்பத்தியில் உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
- இந்தியாவில் சணல் உற்பத்தியில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பெறுகிறது.
- உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உள்ளன.
5. மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி
மரபு சார் எரிசக்தி
- மரபுசார் எரிசக்தி புதுபிக்க இயலாத வளங்களாகும்
- பெரும்பாலன வளங்கள் பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் காரணமாகின்றன
- அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியன இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
மரபு சார் எரிசக்தி
- மரபுசார் எரிசக்தி புதுபிக்க கூடிய வளங்களாகும்
- பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் வாய்ப்புகளில்லை.
- நீர்மின்சக்தி, சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரி சக்தி இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
V. ஒரு பத்தியில் விடையளி
1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக
இந்திய பருத்தி நெசவாலைகள்
- பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
- தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின எண்ணிக்கையிலும் முதன்மை நாடாகவும் உள்ளது.
- தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.
பருத்தி நெசவாலைகளின் பரவல்
- மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன
- தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்கடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகிய முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
- இந்தியாவில் இப்போது 1719 பருத்தி நெசவாலைகள் உள்ளன.
மும்பை – இந்தியாவின் மான்செஸ்டர்
- மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை இந்தியாவனின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது
- காரணம் மகாராஷ்டிரம் மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பை துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர் மின் சக்தி, சந்தை வசதி மற்றும்ச சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.
கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
2. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக
- மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
- தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
- கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
- கடனுக்கான அதிக வட்டி விகிதம்
- மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை
- ஊழியகர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்முறை பயிற்சிகள் இல்லாமை
- தொழில்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை
சில பயனுள்ள பக்கங்கள்