10th Std Social Science Solution in Tamil | Lesson.21 India’s Foreign Policy

பாடம் 21. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Standard Social Science Solution - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பாடம் 21. > இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

  1. பாதுகாப்பு அமைச்சர்
  2. பிரதம அமைச்சர்
  3. வெளிவிவகாரங்கள் அமைச்சர்
  4. உள்துறை அமைச்சர்

விடை ; வெளிவிவகாரங்கள் அமைச்சர்

2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

  1. இந்தியா மற்றும் நேபாளம்
  2. இந்தியா மற்றும் பாகிஸ்தான்
  3. இந்தியா மற்றும் சீனா
  4. இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

விடை ; இந்தியா மற்றும் சீனா

3. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச்
சட்டப்பிரிவு எது?

  1. சட்டப்பிரிவு 50
  2. சட்டப்பிரிவு 51
  3. சட்டப்பிரிவு 52
  4. சட்டப்பிரிவு 53

விடை ; சட்டப்பிரிவு 51

4. இன ஒதுக்கல் கொள்கை என்பது

  1. ஒரு சர்வதேச சங்கம்
  2. ராஜதந்திரம்
  3. ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
  4. மேற்கூறியவைகளில் எதுவுமில்லை

விடை ; ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

5. 1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

  1. வியாபாரம் மற்றும் வணிகம்
  2. சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
  3. கலாச்சார பரிமாற்றங்கள்
  4. ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

விடை ; ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

6. நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?

  1. உலக ஒத்துழைப்பு
  2. உலக அமைதி
  3. இனச் சமத்துவம்
  4. காலனித்துவம்

விடை ; காலனித்துவம்

7. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?

  1. யுகோஸ்லாவியா
  2. இந்தோனேசியா
  3. எகிப்து
  4. பாகிஸ்தான்

விடை ; பாகிஸ்தான்

8. பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி

  1. சமூக நலம்
  2. சுகாதாரம்
  3. ராஜதந்திரம்
  4. உள்நாட்டு விவகாரங்கள

விடை ; ராஜதந்திரம்

9. அணிசேராமை என்பதன் பொருள்

  1. நடுநிலைமை வகிப்பது
  2. தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
  3. ராணுவமயமின்மை
  4. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை

விடை ; தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

10. ராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது

  1. ஆற்றல் பாதுகாப்பு
  2. நீர் பாதுகாப்பு
  3. தொற்றுநோய்கள்
  4. இவை அனைத்தும்

விடை ; இவை அனைத்தும்

II) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ___________

விடை ; பெக்ரான்

2. தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ____________________________________ உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது

விடை ; உள் முதலீட்டை உருவாக்குதல், வணிகம், தொழில் நுட்பம்

3. _________________ என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்

விடை ; இராஜதந்திரம்

4. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை _______________________

விடை ; அணிசேரா கொள்கை

5. நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் _____________ நடைமுறைப்படுத்துவதாகும்.

விடை ; படை வலிமை குறைப்பு

III)  பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

i) பஞ்சசீலம்ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்iv) முதல் அணுவெடிப்புச் சோதனை
  1. i, iii, iv, ii
  2. i, ii, iii, iv
  3. i, ii, iv, iii
  4. i, iii, ii, iv

விடை ; i, iii, iv, ii

2. பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?

i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்

iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது

iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது

  1. i மற்றும் ii
  2. iii மற்றும் iv
  3. ii மட்டும்
  4. iv மட்டும்

விடை ; ii மட்டும்

3. கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா/தவறா என எழுதுக

அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.

விடை : சரி

ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது

விடை : தவறு

இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

விடை : சரி

4. கூற்று: 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.

காரணம்: இது 1962இன் பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது

  1. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  3. கூற்று சரி காரணம் தவறு
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை ; கூற்று சரி காரணம் தவறு

5. கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.

காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

  1. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
  2. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  3. குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை ; கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

6. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் ராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது

  1. கடுமையான வறுமை
  2. எழுத்தறிவின்மை
  3. குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை ; மேற்கூறிய அனைத்தும்

IV) பொருத்துக

1. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது1955
2. தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம்1954
3. பஞ்சசீலம்மாலத்தீவு
4. ஆப்பிரிக்க – ஆசிய மாநாடுவெளியுறவுக் கொள்கை
5. உலக அமைதிமியான்மர்
விடை :- 1-இ, 2-உ, 3-ஆ, 4-அ, 5-ஈ

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

  • வெளியுறவுக்கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு தரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.
  • இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க முயல்கிறது.

2. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.

  • இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது.
  • இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 1974 மற்றும் 1998 அணு சோதனைகள் போர்த்திறமை சார்ந்த
    நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவையாகும்.

இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:

  1. முதலில் பயன்படுத்துவதில்லை
  2. குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்
  • அணு ஆயுதத்தைப் போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.
  • இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

3. வேறுபடுத்துக : உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை

உள்நாட்டுக் கொள்கைவெளிநாட்டுக் கொள்கை
1. உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
2. இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டதாகும்.

4. பஞ்சீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையும், இறையாண்மையும் மதித்தல்
  • பரஸ்பர ஆக்கரமிப்பின்மை
  • உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • அமைதியாக சேர்ந்திருத்தல்

5. இந்தியா அணிசேராக் கொள்கையைத்  தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?

பனிப்போர் நிலவும் இரு துருவமான உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசுகளுடன் சேராமல் இருப்பதற்காகவும், சர்வதேச விவகாரங்களில மூன்றாவது அணியை உருவாக்கிடவும் இந்தியா அணிசேராக கொள்கையைத் தேந்தெடுத்தது.

6. சார்க் உறுப்பு நாடுகளை பட்டியலிடுக

இந்தியாபூடான்நேபாளம்
மாலத்தீவுபாகிஸ்தான்இலங்கை
ஆப்கானிஸ்தான்வங்காளதேசம்

7. அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

  • இந்தியா – ஜவகர்லால் நேரு
  • யுகோஸ்லாவியா – டிட்டோ
  • எகிப்து – நாசர்
  • இந்தோனேசியா – சுகர்னோ
  • கானா – குவாமே நிக்ரூமா

8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.

  • உடன்படிக்கைகள்
  • நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • சர்வதேச வணிகம்
  • வெளிநாட்டு உதவி
  • ஆயுதப் படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்

1. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக

  • அணிசேரா இயக்கம்’ என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
  • இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.

அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்

  • இந்தியா – ஜவகர்லால் நேரு
  • யுகோஸ்லாவியா – டிட்டோ
  • எகிப்து – நாசர்
  • இந்தோனேசியா – சுகர்னோ
  • கானா – குவாமே நிக்ரூமா

கொள்கை மாற்றம்

  • இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது.
  • வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும் தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை இன்னும் நடைமுறையில் உள்ளது

2. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?

  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை

3. அண்டைநாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கையை விவரி.

  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு

 

சில பயனுள்ள பக்கங்கள்