பாடம் 22. இந்தியாவின் சர்வதேச உறவுகள்
பாடம் 22. > இந்தியாவின் சர்வதேச உறவுகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?
- பர்மா – இந்தியா
- இந்தியா – நேபாளம்
- இந்தியா – சீனா
- இந்தியா – பூடான்
விடை ; இந்தியா – சீனா
2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
அ) ஜி 20 | ஆ) ஏசியான் (ASEAN) |
இ) சார்க் (SAARC) | ஈ) பிரிக்ஸ் (BRICS) |
- 2 மட்டும்
- 2 மற்றும் 4
- 2, 4 மற்றும் 1
- 1, 2 மற்றும் 3
விடை ; 2 மட்டும்
3. ஒபெக் (OPEC) என்பது
- சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
- ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
- எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
- ஒரு சர்வதேச நிறுவனம்
விடை ; எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
- வங்காளதேசம்
- மியான்மர்
- ஆப்கானிஸ்தான்
- சீனா
விடை ; வங்காளதேசம்
5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
i) சல்மா அணை | 1. வங்காளதேசம் |
ii) பராக்கா ஒப்பந்தம் | 2. நேபாளம் |
iii) சுக்கா நீர்மின்சக்தி | 3. ஆப்கானிஸ்தான் திட்டம் |
iv) சாரதா கூட்டு | 4. பூடான் மின்சக்தித் திட்டம் |
- 3 1 4 2
- 3 1 2 4
- 3 4 1 2
- 4 3 2 1
விடை ; 3 1 4 2
6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
- 5
- 6
- 7
- 8
விடை ; 7
7. எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
- இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
- மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
- மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
- இலங்கை மற்றும் மாலத்தீவு
விடை ; இலங்கை மற்றும் மாலத்தீவு
8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப்பிரதேசம் ஆ) மேகாலயா இ) மிசோரம் ஈ) சிக்கிம்
விடை ; அ) மற்றும் ஈ)
9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
விடை ; ஐந்து
10. புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
- மவுண்ட்பேட்டன் பிரபு
- சர் சிரில் ராட்க்ளிஃப்
- கிளமன்ட் அட்லி
- மேற்கூறிய ஒருவருமில்லை
விடை ; சர் சிரில் ராட்க்ளிஃப்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ____________ ஆகும்
விடை ; பூட்டான்
2. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக _________________ இருக்கிறது
விடை ; மியான்மர்
3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு _________________ ஆகும்.
விடை ; நேபாளம்
4. இந்தியாவிற்குச் சொந்தமான _________________ என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை ; டீன்பிகா
5. இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு ______________ ஆகும்.
விடை ; பூடான்
6. ______________ ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.
விடை ; பாக் ஜலசந்தி
III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
1. இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1. சாலை | 2. ரயில் வழி |
3. கப்பல் | 4. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- 1, 2 மற்றும் 3
- 1, 3 மற்றும் 4
- 2, 3 மற்றும் 4
- 1, 2, 3 மற்றும் 4
விடை ; 1, 3 மற்றும் 4
2. கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன.
காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.
- கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று தவறு; காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை ; கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
3. பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.
- 1, 2 மற்றும் 3
- 2, 3 மற்றும் 4
- 1, 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
விடை ; 1, 3 மற்றும் 4
4. கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது
- கூற்றுசரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- கூற்று தவறு. காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் சரி
- கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை ; கூற்று காரணம் இரண்டும் சரி
IV) பொருத்துக
1. பிராண்டிக்ஸ் | வியன்னா (Brandix) |
2. தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) | ஜப்பான் |
3. ஷிங்கன்சென் | ஷாங்காய் |
4. பிரிக்ஸ் (BRICS) | அமெரிக்க நாடுகள் |
5.ஒபெக் (OPEC) | விசாகப்பட்டினத்தின் ஆடை நகரம் |
விடை :- 1-உ, 2-ஈ, 3-ஆ, 4-இ, 5-அ |
V சுருக்கமாக விடையளிக்கவும்
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
- பாகிஸ்தான்
- வங்காளதேசம்
- ஆப்கானிஸ்தான்
- மியான்மர்
- சீனா
- இலங்கை
- நேபாளம்
- மாலத்தீவு
- பூடான்
2. போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
- இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.
- இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.
3. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- பிரேசில்
- ரஷ்யா
- இந்தியா
- சீனா
- தென்னாப்பிரிக்கா
4. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்டவேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன், பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உவருவாக்கி வருகிறது.
5. சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
- சபஹார் ஒப்பந்தம் எனப்படும் முக்கூட்டு ஒப்பந்தம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இதன்படி சபஹார் துறைமுகத்தை பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் வழித்தடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இத்துறைமுகும் பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா ஆகிய சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.
6. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
- ஐ.பி.எஸ்.எ (IBSA)
- பி.சி.ஐ.எம் (BCIM)
- எம்.ஜி.சி (MGC)
- ஆர்.சி.இ.பி (RCEP) ஒருங்கிணைந்த வர்த்தக மண்டலம்
- ஈ.எ.எஸ் (EAS) கிழக்கு ஆசிய உச்சிமாநாடு
7. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
- உற்பத்தி துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா (Make in India, Skill India) திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தி திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தளத்தை மேம்படுத்தவும் 30,000 இந்திய மக்களுக்கு பயிற்சி வழங்க ஜப்பான் – இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
- 2017ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் ஜப்பான் – இந்தியா உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
VI விரிவாக விடையளிக்கவும்
1. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
- இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாகும்.
- வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை அனைத்து நாடுகளிலும் பெற்றுள்ளது.
- புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைக்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
- பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு, அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
- இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை, அணிசேரா இயக்கம், சார்க், ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.
- இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் நாடுகளிடையே அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற ஐ.நா. சபை எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உதவுகிறது.
உலகளாவிய குழுக்களின் பெயர்கள் | உறுப்பினர் நாடுகள் | குறிக்கோள்கள் |
ஐ.பி.எஸ்.எ (IBSA) | இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா | வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது. |
பி.சி.ஐ.எம் (BCIM) | வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் | இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் வணிக நலனை பாதுகாக்கவும் |
எம்.ஜி.சி (MGC) (மீகாங்- கங்கா ஒத்துழைப்பு) | இந்தியா, கம்போடியா, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் | கங்கா-மீகாங் தாழ்நிலத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது |
2. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்
- உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குப் போட்டியாகவும், உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
- உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்ட்டது.
பிரிக்ஸின் நோக்கங்கள்
- பிராந்திய வளர்ச்சியை அடைவது
- வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது
- மனித மேம்பாட்டிற்கு மிகப்பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்
- அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்
- வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்
- உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
3. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்
- அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்
- எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்
- பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்தல்
- எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்
- பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்
ஒபெக் பிற நாடுகளுக்கு செய்யும் உதவிகள்
- பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
- புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
- இத்தகவல் மையம் பொதுமக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சில பயனுள்ள பக்கங்கள்