10th Std Social Science Solution in Tamil | Lesson.8 Nationalism: Gandhian Phase

பாடம் 8. தேசியம்: காந்திய காலகட்டம்

10th Standard Social Science Solution - தேசியம்: காந்திய காலகட்டம்
பாடம் 8. >
தேசியம்: காந்திய காலகட்டம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

  1. மோதிலால் நேரு
  2. சைஃபுதீன் கிச்லு
  3. முகம்மது அலி
  4. ராஜ்குமார் சுக்லா

விடை ; சைஃபுதீன் கிச்லு

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

  1. பம்பாய்
  2. மதராஸ்
  3. கல்கத்தா
  4. நாக்பூர்

விடை ; கல்கத்தா

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

  1. 1930 ஜனவரி 26
  2. 1929 டிசம்பர் 26
  3. 1946 ஜூன் 16
  4. 1947 ஜனவரி 15

விடை ; 1930 ஜனவரி 26

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

  1. 1858
  2. 1911
  3. 1865
  4. 1936

விடை ; 1865

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

  1. கோவில் நுழைவு நாள்
  2. மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
  3. நேரடி நடவடிக்கை நாள்
  4. சுதந்திரப் பெருநாள்

விடை ; கோவில் நுழைவு நாள்

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

  1. 1858 ஆம் ஆண்டு சட்டம்
  2. இந்திய கவுன்சில் சட்டம், 1909
  3. இந்திய அரசுச் சட்டம், 1919
  4. இந்திய அரசுச் சட்டம், 1935

விடை ; இந்திய அரசுச் சட்டம், 1935

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. காந்தியடிகளின் அரசியல் குரு ______________________ ஆவார்.

விடை ; கோபால கிருஷ்ண கோகலே

2. கிலாபத் இயக்கத்துக்கு ________________ தலைமை ஏற்றார்.

விடை ; அலி சகோதரர்கள்

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் _____________ அறிமுகம் செய்தது.

விடை ; இரட்டை ஆட்சி

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் __________________

விடை ; கான்அப்துல் கஃபார்கான்

5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் _____________________ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

விடை ; வகுப்பு வாரி ஒதுக்கீடு

6. ________________ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.

விடை ; உஷாமேத்தா

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனேவெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

  1. (i) மற்றும் (ii) சரியானது
  2. (ii) மற்றும் (iii) சரியானது
  3. (iv) சரியானது
  4. (i) (ii) மற்றும் (iii) சரியானது

விடை ; (i) (ii) மற்றும் (iii) சரியானது

2. கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி – இர்வின் ஒப்பந்தம் வழிசெய்தது.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
  2. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
  3. கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

விடை ; கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

3. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின

காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  2. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
  3. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

விடை ; கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

IV) பொருத்துக:-

  1. ரௌலட் சட்டம் – பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்
  2. ஒத்துழையாமை இயக்கம் – இரட்டை ஆட்சி
  3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் – M.N. ராய்
  4. இந்திய பொதுவுடைமை கட்சி – நேரடி நடவடிக்கை நாள்
  5. 16 ஆகஸ்ட் 1946 – கருப்புச் சட்டம

விடை:- 1-உ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஈ

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. ஜலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிககவும்.

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
  • இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் ஜெனரல் டயர்  பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன்  சுற்றி வளைத்தார்.
  • ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்கள்.
  • அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்; ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

2. கிலாபாத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

  • இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
  • இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்த காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?

  • ஒத்துழையாமை இயக்கம், ரெளலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபா் படுகொலைக்கு எதிராக குரல கொடுக்க 1920 ஆகஸ்ட் முதல் நாளில் காந்தியடிகளால் துவங்கப்பட்டது.
  • ஒத்துழையாமை இக்கம் உச்சத்தில் இருந்த போது உத்திரப்பிரதேசத்தில் செளரி செளரா என்ற இடத்தில் 1922இல் நடைபெற்ற வன்முறை நிகழ்வால் காந்தியடிகள் மனம் வருந்தினார்
  • ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமான மாறுவதை தடுக்க, அதனை 1922ஆம் ஆண்டு திரும்ப பெற்றார்.

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

  • சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலைகண்டு கொதித்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

  • டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
  • அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.

6. பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.

  • பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
  • பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
  • லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1929இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினார்கள். அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
  • ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
  • பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

7. பூனோ ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

1932ஆம் ஆண்டு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்து. இது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

  • தனித்தொகுதிகள்கள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன.
  • மாறாக ஒதுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத் தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71இல் இருந்து 148ஆக அதிகரிக்கபட்பட்டது.
  • மத்திய சட்டப்பேரவையில் 18% இடங்கள் ஒதுக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்

1. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்

  • டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலைவாரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்ககென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. மேலும் இரவு 9 மணிக்கு பிறகு அனமதியின்றி வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இத்தகைய நியாமற்ற சட்டங்களை எதிர்த்து அவர் போட்டத்தை தொடங்கினார்.
  • தென்னாப்பிரிக்காவில் குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட சத்தியாகிரக சோதனைகளை அவர் மேற்கொண்டார்.
  • குடிபெயர்ந்தோரை பதிவு செய்யும் அலுவலகங்கள் முன் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தினார். காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போதிலும் அவர் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. காவல்துறையினாரின கடுமையான நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பேராட்டத்தை தொடர்ந்தார்.
  • இறுதியாக ஒப்பத்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் காந்தியடிகளின் தொடக்ககால சத்தியாகிரகங்கள்

  • இந்திய வருைகயின் போது காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அவரையே தமது அரசியல் குருவாக ஏற்றார்.
  • கோகலேயின் அறிவுரையின் படி, அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்து கொள வழி பிறந்தது.
  • இது போன்ற ஒரு பயணத்தின்போதுதான் தமிழகத்தில் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு காந்தியடிகள் மாறினார்.

சம்பரான் சத்தியாகிரகம்

  • பீகாரில் உள்ள சம்பரானில் தீன்காதியா முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தில் இருபதில் 3பங்கு  அவுரி (இண்டிகோ) பயிரிட ஐரோப்பிய பண்ணையாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த வகையில் விவசாயிகள் அதிக சிரமங்களை சந்தித்தனர்.
  • காந்தியடிகள் சம்பரானுக்கு சென்றார். காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். இச்செய்தி பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாகக் கூடினார்.
  • ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ்கிஷோர் பிரசாத் ஆகியோர் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர். அதன் பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார். காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார்.
  • இண்டிகோ பண்ணையாளர்கள், விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீன் காதிய முறையை ரத்து செய்ய அந்தக்குழு பரிந்துரைத்தது.
  • சம்பரான சத்தியா கிரகத்தின் வெற்றியை அடுத்து 1918இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், 1918இல் கேதா சத்தியா கிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின.

2. காந்திய இயக்கதத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.

  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காாங்கிரஸ் அமர்வு நடந்தது
  • அதில் 1930 ஜனவரி 26நாள்  முழுமையான சுந்ததிரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
  • வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்றும் சட்ட மறுப்பு இயக்கதை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தியடிகள் அரசப் பிரதிநிதியிடம் அளித்தார்.
  • 1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி பதில் தெரியாத நிலையில் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.
  • உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும்.
  • காந்தியடிகம் 1930 மார்ச் 12ஆம் நாள்7 8 பேர்களுடன் சமர்பதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ் பெற்ற தண்டியாத்திரை தொடங்கினார்.
  • காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்து சட்ட மறுப்பு இயக்கம் மூலமாக நடந்த குஜராத் தண்டிய யாத்திரை காந்தியடிகளை இந்திய அளவில் வெகுவாக உயர்த்தியது

3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்

  • 1905ஆம் ஆண்டு கர்சன் பிரபுவின் வங்கப்பிரிவினை இந்திய பரிவினைக்கு முதல் காரணியாக அமைந்தது.
  • முதல் உலகப்போருக்கு பின் துருக்கி இசுலாமிய மதத் தலைவருக்கு ஆதரவாக இந்தியாவில் தனியே கிலாபாத் இயக்கம் ஆரம்பித்து போராடியது.
  • மத்திய சட்டப்பேரவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முஸ்லிம் லீக் கோரியது.
  • இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா தனது நிலைப்பாட்டை மாற்றி முஸ்லிம்களுக்கு தனி நாடு வலியுறுத்தினார்.
  • 1932-ல்  வெளிவந்த ராம்சே மெக் டொனால்டு வகுப்பு வாத அறிக்கை
  • இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய ஜின்னா 1934ல் முஸ்லிம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டி 1940ல் தனிநாடு கோரிக்கையை தீவிரப்படுத்தியது.
  • இந்து மகா சபையும்  முஸ்லிம் லீக்கும நாட்டின் ஒற்றுமை தவிர்து ஒன்றுக்கொன்று எதிரான நடவடிக்கையில் இறங்கியது.
  • இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முகம்மது இக்பால் தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்தது.
  • 1946 தேர்தல்களில் முஸ்லிம் லீக் தனது தனித் தொகுதியில் வெற்றி பெற்று தனது கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
  • 1946 ஆம்ஆண்டு, ஆகஸ்டு 16ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தது.
  • 1947ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றி இந்தியாவை, இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை அறிவித்தது.
  • இது போன்ற காரணிகளே இந்தியாவின் பிரிவினைக்கு காரணமாகும்

 

சில பயனுள்ள பக்கங்கள்