பாடம் 1.1. அன்னை மொழியே
நூல்வெளி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம். கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகமெங்கும் பரப்பியவர். உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. |
சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் க. சச்சிதானந்தன |
I. பலவுள் தெரிக
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
- எந் + தமிழ் + நா
- எந்த + தமிழ் + நா
- எம் + தமிழ் + நா
- எந்தம் + தமிழ் + நா
விடை : எம் + தமிழ் + நா
II. குறு வினா
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
III. சிறு வினா
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” |
IV. நெடு வினா
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அறிமுக உரை:- தாயே! தமிழே! வணக்கம், தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும். என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
நிறைவுரை:- இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார். |
கூடுதல் வினாக்கள்
I. பலவுள் தெரிக
1. துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
2. செந்தமிழ் பிரித்து எழுதுக.
- செந் + தமிழ்
- செம் + தமிழ்
- செ + தமிழ்
- செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
3. அன்னை மொழியே என்ற கவிதையில் இடம் பெறும் மூவேந்தருள் ஒருவர்
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்வவன்
விடை : பாண்டியன்
4. பொருந்தாதவற்றைக் கண்டறிக
- தமிழ்ச்சிட்டு
- பள்ளிப்பறவைகள்
- எண்சுவை என்பது
- உலகியல் நூறு
விடை : தமிழ்ச்சிட்டு
5. செந்தமிழ் இலக்கணக்குறிப்பு வரைக
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
விடை : பண்புத்தொகை
5. செந்தமிழ் இலக்கணக்குறிப்பு வரைக
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
விடை : பண்புத்தொகை
II. குறு வினா
1. பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
2. பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?
- உலகியல் நூறு
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- எண்சுவை எண்பது
- மகபுகுவஞ்சி
- கனிச்சாறு
- பள்ளிப்பறைவைகள்
3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
III. சிறு வினா
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத்தொகை” – இச்செய்யுளில் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க் காரணத்துடன் எடுத்துக்காட்டுக
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
|
அன்னை மொழியே-பாடல்வரிகள்
அழகார்ந்த செந்தமிழே! அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே ! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! செப்பரிய நின்பெருமை செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச் – கனிச்சாறு |
சில பயனுள்ள பக்கங்கள்