Tamil Nadu 10th Standard Tamil Book எழுத்து, சொல் Solution | Lesson 1.5

பாடம் 1.5. எழுத்து, சொல்

I. பலவுள் தெரிக

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

  1. பாடிய; கேட்டவர்
  2. பாடல்; பாடிய
  3. கேட்டவர்; பாடிய
  4. பாடல்; கேட்டவர்

விடை : பாடல்; கேட்டவர்

II. குறு வினா

I. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  • வேங்கை : வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனி மொழி)
  • வேம்+கை : வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர் மொழி)

2. “உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்”
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

  • உடுப்பதூம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

III. சிறு வினா

அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாது இவை அனைத்தையும் யாம் அறிவோம். ஆதுபற்றி உமது அறிவுரை எமக்கு தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்,

இக்கூற்றில் வண்ண எழுத்தக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

தொழிற்பெயர்எதிர்மறைத் தொழிற்பெயர்
அறிதல்அறியாமை
புரிதல்புரியாமை
தெரிதல்தெரியாமை
பிறத்தல்பிறவாமை

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. அளபெடுத்தல் என்பதை ________ ஐ குறிக்கிறது.

விடை: நீண்டு ஒலித்தல். 

2. உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிப்பது ________

விடை: உயிரளபெடை

3. உயிரளபெடை ________ வகைப்படும்

விடை: 3

4. செய்யுளிசை அளபெடை ________ என்றும் கூறுவர்.

விடை: இசைநிறை அளபெடை

5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை ________

விடை: 10

6. மொழி ________ வகையாக அமையும்

விடை: 3

7. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது ________

விடை: தனிமொழி

8. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ________ ஆகும்.

விடை: விகுதி பெற்ற தொழிற்பெயர்

9. தட்டு என்பது ________ ஆகும்.

விடை: முதனிலைத் தொழிற்பெயர்

I. குறு வினா

1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்

  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்,
  • ஐகாரக்குறுக்கம்
  • ஔகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.

2. ஒற்றளபெடை என்றால் என்ன? சான்று தருக

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீட

3. தொழிற்பெயர் என்றால் என்ன?

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

எ.கா:- ஈதல், நடத்தல்

4. எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன?

எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

எ.கா:- நடவாமை, கொல்லாமை

5. விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் விளக்குக?

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர் ஆகும்.

வினையடிவிகுதிதொழிற்பெயர்
நடதல்நடத்தல்
வாழ்கைவாழ்க்கை
ஆள்அல்ஆளல்

ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.

எ. கா.   நட என்பது வினையடி

நடை, நடத்தை, நடத்தல்

6. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்தக

தொழிற்பெயர்வினையாலணையும் பெயர்
வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்.தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்.
காலம் காட்டாதுகாலம் காட்டும்
படர்க்கைக்கே உரியதுமூவிடத்திற்கும் உரியது
எ.கா. பாடுதல், படித்தல்எ.கா. பாடியவள், படித்தவர்

I. நெடு வினா

1. உயிரளபெடை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

உயிரளபெடை மூன்று வகைப்படும்.

அ) செய்யுளிசை அளபெடைசெய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசை நிறை அளபெடை என்றும் கூறுவர்.

  • ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
  • உறாஅர்க்கு உறுநோய் – மொழியிடை
  • நல்ல படாஅ பறை – மொழியிறுதி

ஆ) இன்னிசை அளபெடைசெய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இ) சொல்லிசை அளபெடைசெய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்.

நசை – விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல் வினை அடையாக மாறியது.

2. மூவகை மொழி வகைகளை விவரி.

தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று வகையாக அமையும்.

தனி மொழி:-ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.

எ. கா.

  • கண், படி – பகாப்பதம்
  • கண்ணன், படித்தான் – பகுபதம்

தொடர் மொழி:-இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள்
தருவது தொடர்மொழி ஆகும்.

எ. கா.

  • கண்ணன் வந்தான்.
  • மலர் வீட்டுக்குச் சென்றாள்.

பொது மொழி:-
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.

எ. கா.

  • எட்டு – எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
  • வேங்கை – வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.

கற்பவை கற்றபின்…

1. தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.

  • தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது
  • நூல் – நூல் பல கல்
  • பை – பை நிறைய பணம் இருந்தது
  • மலர் – மலர் பறித்து வந்தேன்
  • வா – விரைந்து வா

2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

  • காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை
  • சிரி –  சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை
  • படி – படிப்பு, படித்தல், படிக்காமை
  • தடு – தடுப்பு, தடுத்தல், தடுக்காமை

3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர் மொழி )

தம்பி : கடைக்கு (தனி மொழி)

அண்ணன் : இப்போது என்ன வாங்குகிறாய்? (தொடர் மொழி)

தம்பி : பருப்பு வாங்குகிறேன். (தொடர் மொழி)

அண்ணன் : எதற்கு? (தனி மொழி)

தம்பி : பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச்சொன்னார்கள் (தொடர்மொழி)

அண்ணன் : இன்று பருப்பு சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர் மொழி)

தம்பி : சரி இன்று அம்மாவை பிரியாணி செய்து தரச்சொல்வோம் (தொடர் மொழி)

4. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.’

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

வினைமுற்றுதொழில் பெயர்
அழைக்கும்அழைத்தல்
ஏறுவேன்ஏறுதல்
அமர்வேன்அமர்தல்
பார்ப்பேன்பார்த்தல்
எய்தும்எய்தல்

5. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

  • கட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • சொட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • வழிபாடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
  • கேடு – முதனிலைத் தொழிற்பெயர்
  • கோறல் – விகுதி பெற்ற தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்!

I. மாெழிபெயர்ப்பு

1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela

நீங்கள் ஒரு மனிதனிடம் ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அதை அவன் புரிந்து கொண்டு அவன் மூளைக்குச் செல்கிறது. ஆனால் அவனுடைய மொழியல் பேசினால் அது அவன் நெஞ்சத்தை தொடும் – நெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

மொழியே கலாச்சாரத்தில் வழிகாட்டி. அதுவே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் மற்றும் எங்குப் போகிறார்கள் என்பதைச் சொல்லும் – ரிட்டா மே பிரவுண்

II. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பத் காறமதை
ஊனிர்லே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்நதின புருமவாமே”

– கவிமணி தேசிக விநாயகனார்

விடை:-

“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பத் காமதை
ஊனிலே எம்முயிர் உள்ளவும் – நிதம்
ஓதி யுர்நதின புறுமவாமே”

– கவிமணி தேசிக விநாயகனார்

III. சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)

சொல்கூட்டப்பெயர்
கல்கற்குவியல்
பழம்பழக்குலை
புல்புற்கட்டு
ஆடுஆட்டுமந்தை

IV. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

  • கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

  • ஊட்டமிகு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

  • நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

  • பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

V. வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

  • புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழயிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

  • வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்

  • நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

  • நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

  • “ஆ”ப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

மொழியோடு விளையாடு!

I. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

  • பூமணி
  • மணிமேகலை
  • தேன்மழை
  • மழைத்தேன்
  • மணிவிளக்கு
  • வான்மழை
  • விண்மணி
  • பொன்மணி
  • பொன்விலங்கு
  • செய்வான்
  • பொன்விளக்கு
  • பூமழை
  • பூவிலங்கு

II. குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

1. குறளின்பம்

  • குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

2. சுவைக்காத இளநீர்

  • மனிதர்கள் சுவைக்காத இளநீர் உண்டோ?

3. காப்பியச் சுவை

  • நீ காப்பியச் சுவையை அறிந்துள்ளாயா?

4. மனிதகுல மேன்மை

  • இக்காலங்களில் மனிதகுல மேன்மை சிறப்புற உள்ளதா?

5. விடுமுறை நாள்

  • தேரோட்டம் அன்ற உள்ளூர் விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?

III. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை

  • எண்ணுப்பெயர் – நான்கு
  • தமிழ் எண் –

2. எறும்புந்தன் கையால் எண்சாண்

  • எண்ணுப்பெயர் – எட்டு
  • தமிழ் எண் –

3. ஐந்துசால்பு ஊன்றிய தூண்

  • எண்ணுப்பெயர் –ஐந்து
  • தமிழ் எண் – ரு

4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

  • எண்ணுப்பெயர் –நான்கு, இரண்டு
  • தமிழ் எண் –௪, உ

5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி

  • எண்ணுப்பெயர் – 1000
  • தமிழ் எண் –க000

IV. அகராதியில் காண்க.

1. அடவி

  • காடு

2. அவல்

  • பள்ளம்

3. சுவல்

  • பிடரி, முதுகு

4. செறு

  • வயல், கோபம்

5. பழனம்

  • வயல்

6. புறவு

  • சிறுகாடு

கலைச்சொல் அறிவோம்

  1. Vowel – உயிரெழுத்து
  2. Consonant – மெய்யெழுத்து
  3. Homograph – ஒப்பெழுத்து
  4. Monolingual – ஒரு மொழி
  5. Conversation – உரையாடல்
  6. Discussion – கலந்துரையாடல்

அறிவை விரிவு செய்

  • நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்
  • தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்னன்
  • பச்சை நிழல் – உதயசங்கர்

 

சில பயனுள்ள பக்கங்கள்