Tamil Nadu 10th Standard Tamil Book காற்றே வா! Solution | Lesson 2.2

பாடம் 2.2. காற்றே வா!

10ஆம் வகுப்பு தமிழ், காற்றே வா பாட விடைகள்

உயிரின் ஓசை > 2.2. காற்றே வா!

நூல்வெளி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்;

எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்;

கவிஞர்; கட் டுரையாளர்; கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்;

சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்க ளில் எதிர்த்து எழுதியவர்;

குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்;

இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;

இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம் 

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.

இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..

I. சொல்லும் பொருளும்

  • மயலுறுத்து – மயங்கச்செய்
  • ப்ராண – ரஸம் – உயிர்வளி
  • லயத்துடன் – சீராக

II. பலவுள் தெரிக

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

  1. உருவகம், எதுகை
  2. மோனை, எதுகை
  3. முரண், இயைபு
  4. உவமை, எதுகை

விடை : மோனை, எதுகை

III. குறு வினா

வசன கவிதை – குறிப்பு வரைக

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும். ஆங்கிலத்தில் Prose Poetry என்பர். தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.

சான்று

இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது

– பாரதியார்

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1.நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை என்றறெல்லாம் பாராட்டப் பெற்றவர்;

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. வாணிதாசன்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

2. கேலிச்சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. வாணிதாசன்

விடை : பாரதியார்

3. பொருந்தாதவற்றை தேர்க

  1. குயில்பாட்டு – காவியம்
  2. பாஞ்சாலி சபதம் – காவியம்
  3. கண்ணன் பாட்டு – குழந்தைகளுக்ககான நீதி
  4. பாப்பா பாட்டு – காவியம் 

விடை : பாப்பா பாட்டு – காவியம்

3. இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின்
ஆசிரியராகப் பணியாற்றியவர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. பிச்சமூர்த்தி
  4. கந்தர்வன்

விடை : பாரதியார்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாரதியார் ______ அறியப்பட்டவர்

விடை : எட்டயபுர ஏந்தலாக

2. பாரதியார் ______ எனப் பாராட்டப்பட்டவர்.

விடை : பாட்டுக்காெரு புலவன்

3. ______ , ______ முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியார்.

விடை : இந்தியா, சுதேசமித்திரன்

IV. பொருத்துக

1. மயலுறுத்துசீராக
2. ப்ராண-ரஸம்மயங்கச்செய்
3. லயத்துடன்உயிர்வளி
விடை: 1 – ஆ, 2 – இ, 3 – அ

V. குறு வினா

1. இயற்கை வாழ்வு எவற்றோடு இயைந்தது?

காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு.

2. இயற்கையை பற்றி கவிஞர் பாடியள்ள பாடல்கள் யாவை?

  • நீரின்றி அமையாது உலகு
  • காற்றின்றி அமையாது உலகு

3. பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப் பெற்றவர்?

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
  • சிந்துக்குத் தந்தை
  • பாட்டுக்காெரு புலவன்
  • மகாகவி
  • கலைமகள்

என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் ஆவார்

4. பாரதியாரின் சிறப்புகள் யாவை?

  • கவிஞர்
  • கட்டுரையாளர்
  • சிறுகதையாளர்
  • ஆசிரியர்
  • இதழாசிரியர்
  • கேலிச்சித்திரம், கருத்துப்படங்களை உருவாக்கியவர்

5. பாரதியார் உலகிற்கு தந்த படைப்புகள் எவை?

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாப்பா பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • புதிய ஆத்திச்சூடி

6. பாரதியார் ஆசியரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்கள் யாவை?

பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்கள்  இந்தியா, சுதேசிமித்திரன் ஆகும்

7. வசன கவிதை என்றால் என்ன?

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்

8. புதுக்கவிதை உருவாக காரணம் யாது?

உணர்ச்சி பாெங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டு உள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

9. காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரியார் வேண்டுகிறார்?

மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து மிகுந்த உயிர் வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.

10. எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?

காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்ட காலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.

VI. சிறு வினா

1. காற்றே வா பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது?

மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா

இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா

உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத

நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!

உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்

உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்”

காற்றே வா – பாடல் வரிகள்

காற்றே, வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைக ளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்க ளுக்குக் கொண்டு கொடு.

காற்றே, வா.
எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்கா லம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.

– பாரதியார் கவிதைகள்

இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதை

திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது சாயுது – பேய்கொண் டு

தக்கை யடிக்குது காற்று – தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

– பாரதியார்

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment