Tamil Nadu 10th Standard Tamil Book காசிக்காண்டம் Solution | Lesson 3.2

பாடம் 3.2. காசிக்காண்டம்

10ஆம் வகுப்பு தமிழ், காசிக்காண்டம் பாட விடைகள்

கூட்டாஞ்சோறு > 3.2. காசிக்காண்டம்

நூல் வெளி

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.

இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

இல்லொழுக்கங் கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.

தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்கா ண்டம்.

இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.

சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.

நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலா க் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்ன ம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகும் தானே

விவேகசிந்தாமணி – 4

I. சொல்லும் பொருளும்

  • அருகுறை – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

II. பகுபத உறுப்பிலக்கணம்

1.  உரைத்த – உரை + த் + த் +அ

  • உரை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. வருக – வா(வரு) + க

  • வா – பகுதி
  • வரு – எனக் குறுகியத விகாரம்
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • நன்மொழி – பண்புத்தொகை
  • வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்

IV. பலவுள் தெரிக.

காசிக்காண்டம் என்பது –

  1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
  2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
  3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
  4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

V. குறு வினா

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _______ நகரத்தின் பெருமைகளை கூறும் நூல்காசிக்காண்டம் ஆகும்.

விடை : காசி

2.  சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் _________ 

விடை : அதிவீரராம பாண்டியர்

3.நறுந்தொகை  சிறந்த _________ எடுத்துரைக்கிறது.

விடை : அறக்கருத்துகளை

4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் _________ 

விடை : சீவலமாறன்

5. வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் _________

விடை : அதிவீரராம பாண்டியர்

II. குறு வினா

1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் எது?

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்

2. காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்

துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது

3. அதிவீராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?

  • காசிக்காண்டம்
  • நைடதம்
  • லிங்கபுராணம்
  • வாயுசம்கிதை
  • திருக்கருவை அந்தாதி
  • கூர்மபுராணம்
  • வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை

4. முகமன் என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?

ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

III. சிறு வினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக

  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

2. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, “வீட்டிற்குள் வருக” என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியகா முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும்
  • மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்ககமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment