பாடம் 5.2. நீதிவெண்பா
மணற்கேணி > 5.2. நீதிவெண்பா
நூல் வெளி
சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர். செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். |
சதாவதானம்
‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம். |
I. பலவுள் தெரிக.
1. அருந்துணை என்பதைப் பிரித்தால்………………….
- அருமை + துணை
- அரு + துணை
- அருமை + இணை
- அரு + இணை
விடை : அருமை + துணை
2. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
- தமிழ்
- அறிவியல்
- கல்வி
- இலக்கியம்
விடை : கல்வி
II. குறு வினா
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக
கற்போம்! கற்போம்! |
கூடுதல் வினாக்கள்
I. பலவுள் தெரிக.
1. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை
- சதாவனம்
- ஆடல்
- பாடல்
- ஓவியம்
விடை : சதாவனம்
2. செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
- பாளையங்கோட்டை
- புதூர்
- மாறாந்தை
- இடலாக்குடி
விடை : இடலாக்குடி
3. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்
- பாரதியார்
- செய்குதம்பிப் பாவலர்
- பாரதிதாசன்
- சுரதா
விடை : செய்குதம்பிப் பாவலர்
3. சதாவதானி என்று பாராட்டு பெற்றவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- செய்குதம்பிப் பாவலர்
விடை : செய்குதம்பிப் பாவலர்
4. சதம் என்பதற்கு என்ன பொருள்
- ஒன்று
- பத்து
- நூறு
- ஆயிரம்
விடை : நூறு
5. போற்றிக் கற்க வேண்டியது
- கல்வி
- நூல்
- ஒழுக்கம்
- பண்பு
விடை : கல்வி
6. கற்றவர் வழி _____________ செல்லும் என்கிறது சங்க இலக்கியம்
- மக்கள்
- அரசு
- விலங்கு
- பண்பு
விடை : அரசு
7. தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல்
- மணிமேகலை
- சீறாப்புராணம்
- குண்டலகேசி
- திருக்குறள்
விடை : திருக்குறள்
7. பூக்களை நாடிச் சென்று தேன் பருகுவது ______
- வண்டு
- எறும்பு
- பூச்சி
- ஈ
விடை : வண்டு
8. ______ நாடிச் சென்று அறிவு பெற வேண்டும்
- நூல்
- தீயொழுக்கம்
- புகழ்
- ஒழுக்கம்
விடை : நூல்
9. கல்வியென்ற என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது
- கல்வி + என்ற
- கல்வி + யென்ற
- கல் + யென்ற
- கல் + என்ற
விடை : கல்வி + என்ற
II. சிறு வினா
1. கற்றலின் சிறப்பாக தமிழ் நூல்கள் கூறுவன யாவை?
கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போல க் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள்.
2. தமிழர்கள் கல்வியைப் போற்றுவதைப் எக்காலத்தில் இருந்து தொடர்கின்றன?
தமிழர்கள் கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றனர்.
3. எதனைப்போல் நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்
பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்.
4. ஏன் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
அருளினைப் போக்கி, அறிவை சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதனை போற்றி கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.
5. சதாவதானம் குறிப்பு வரைக
சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தேல சதாவதானம் ஆகும்.
6. செய்குதம்பிப் பாவலர் ஏன் “சதாவதானி” என்று போற்றப்படுகிறார்?
செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்ப்பெற்றார்.
அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
சில பயனுள்ள பக்கங்கள்