பாடம் 6.1. நிகழ்கலை
நிலாமுற்றம் > 6.1. நிகழ்கலை
எத்திசையும் புகழ் மணக்க…..
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர் |
பலவுள் தெரிக.
1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
- கரகாட்டம் என்றால் என்ன?
- கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
- கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
- கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை : கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
குறு வினா
நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்! என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
நேற்று நான் பார்த்த அர்ச்சுனர் தபசு என்ற அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினார்.
சிறு வினா
படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக
ஆ) கரகாட்டம் என்றால் என்ன? கரகம் என்பது பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும். |
நெடு வினா
நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
பாராட்டுரை இன்றைய நம் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்வை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளயின் சார்பாக வணக்கம். நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள். மழைநீர் பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நெகிழியைப் பற்றியும், மரங்களில் நெகிழிப்பைகள் சிக்குவதால் பாரதிக்கும் ஒளிச்சேர்க்கையைப் பற்றியும் பாடல் வாயிலாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுகள். மட்காத நெகிழிகளை மழைநீர் அடித்துச் செல்வதால் நீர் மாசு அடைவதையும், நெகிழிப் பைகளில் தேநீர், குளிர்பானம் போன்ற உணவுப் பொருள்கள் வாங்குவதால் மனிதனுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் பொம்மலாட்டம் மூலம் நிகழ்த்தினீர்கள். பாராட்டுகள். நெகிழிப் பைகளை எரிக்கும் போது ஏற்படும் நச்சு வாயு காற்றையும் மாசுபடுத்துவதைத் தங்களது இனிய குரலால் பாடி, எங்களைப் பரவசமடையச் செய்தீர்கள். பாராட்டுகள். நெகிழியைத் தவிர்த்தல் மேற்கண்ட தீமைகள் ஒழிந்திட நெகிழிையத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்போம். தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். இது பொழுதுபோக்குக் காட்சிக்கலை ஆகும். இது பொழுதுபோக்கு காட்சியாக மட்டுமல்லாமல் கல்வியறிவு, மக்களிடையே காணப்படும் அறியாமையைப் பாடல் வழியாக போக்குவதற்கு நல்ல கலையாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இக்கலை வடிவம் வாயிலாக நம் பள்ளியின் ஆண்டு விழாவில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திய கலைக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமையைப் பொம்மலாட்டம் வாயிலாக நிகழ்த்தி எங்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்த அனைவருக்கும் வணக்கம். |
2. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் -இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்யவேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
முன்னுரை:-ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன. நிகழ்கலையின் வடிவங்கள்:-பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும், இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், தெருகூத்து போன்றன.1 ஒப்பனைகள்:-
சிறப்பும் பழைமையும்:-வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாது, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது. பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம் முன்னோர் காலத்திலில் இருந்த பழமை வாய்ந்த கலையாகும். குறைந்து வருவதற்கான காரணங்கள்:-நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் திரைத்துறை வளர்ச்சினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன. வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:-நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியில் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்து கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும். முடிவுரை:-நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் __________ ஆடப்படுகிறது.
விடை : மயிலாட்டம்
2. தமிழ் மக்களின் வீரத்தைச் சாெல்லும் கலையாகத் திகழ்வது __________ ஆகும்.
விடை : புலி ஆட்டம்
3. தப்பாட்டத்தினை __________ என்று அழைப்பர்.
விடை : பறை
4. ந.முத்துசாமிக்கு தமிழக அரசு __________ விருது வழங்கியது.
விடை : கலைமாமணி
5. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை __________
விடை : தெருக்கூத்து
II. குறு வினா
1. நிகழ்கலை என்றால் என்ன?
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
2. தப்பாட்டம் என்றால் என்ன?
‘தப்பு’ என்ற தோற் கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
3. காவடியாட்டம் என்றால் என்ன?
“கா” என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்
இரு முனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுந்து ஆடுவது காவடியாட்டம்.
4. தப்பாட்டம் எங்கெல்லாம் ஆடப்படுகின்றது?
கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.
5. கரகம் என்ற சொல் இடம்பெற்றுள்ள புறநானூற்றுப் பாடலடியை எழுதுக.
“நீரற வறியாக் கரகத்து” (புறம்.1)
III. சிறு வினா
1. மயிலாட்டம் என்றால் என்ன?
மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர். |
2. மயிலாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?
|
3. காவடியின் அமைப்புக்கேற்ப அவை எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன?
|
4. புலி ஆட்டம் பற்றி குறிப்பு எழுதுக
தமிழ் மக்களின் வீரத்தைச் சாெல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று. விழாக்களில் புலி வேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் பாேன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக் காேடுகளை இட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் காெள்வர். தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர். புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக் குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப் பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர். |
சில பயனுள்ள பக்கங்கள்