பாடம் 6.5 பாய்ச்சல்
நிலாமுற்றம் > 6.5 பாய்ச்சல்
நூல்வெளி
‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி. இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில. |
முன்தோன்றிய மூத்தக்குடி
இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி “ஓங்கு இரும் பரப்பின் சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, 107 -108 |
பலவுள் தெரிக
1. சா.கந்தசாமி _________ புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்.
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சாயாவனம்
- தொலைந்து போனவர்கள்
விடை: சாயாவனம்
2. விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.
- ம.பொ.சி
- சா.கந்தசாமி
- தமிழன்பன்
- வைரமுத்து
விடை: சா.கந்தசாமி
சிறு வினா
1. சா.கந்தசாமி எழுதிய புதினங்களுள் சிலவற்றை எழுதுக.
தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
2. சா.கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?
இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்.
3. சா.கந்தசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது?
விசாரணைக் கமிஷன்
சில பயனுள்ள பக்கங்கள்