பாடம் 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே
விதை நெல் > 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே
பலவுள் தெரிக
1. நோபல் பரிசுக்கு இணையான விருது
- ஞானபீட விருது
- பாரதரத்னா விருது
- மகசேசே விருது
- சாகித்திய அகாதமி விருது
விடை: மகசேசே விருது
2. மகசேசே விருதினை பெற்ற முதல் இசைக்கலைஞர்
- கே.வி.மகாதேவன்
- எம்.எஸ்.சுப்புலட்சுமி
- இளையராஜா
- எம்.எஸ்.விஸ்வநாதன்
விடை: எம்.எஸ்.சுப்புலட்சுமி
3. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்னும் புதினத்தின் ஆசிரியர்
- சுத்தானந்த பாரதி
- சுரதா
- ராஜம் கிருஷ்ணன்
- பாரதிதாசன்
விடை: ராஜம் கிருஷ்ணன்
4. வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
- சமுத்திரம்
- ம.பொ.சி
- ராஜம் கிருஷ்ணன்
- சா.கந்தசாமி
விடை: ராஜம் கிருஷ்ணன்
5. பொருத்துக
1. கரிப்பு மணிகள் | நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் |
2. குறிஞ்சித் தேன் | உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை |
3. அலைவாய்க் கரையில் | தீப்பெட்டி குழந்தை தொழிலாளர்கள் |
4. சேற்றில் மனிதர்கள் | கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்கள் |
5. கூட்டுக் குஞ்சுகள் | அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுதல் |
- 3, 2, 4, 5, 1
- 2, 1, 4, 5, 3
- 2, 1, 3, 4, 5
- 3, 2, 1, 5, 4
விடை: 2, 1, 4, 5, 3
6. உழுபவருக்கே நில உரிமை இயக்கம் என்னும் இயக்கத்தினை தொடங்கியவர்
- ராஜம் கிருஷ்ணன்
- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- பால சரஸ்வதி
- சின்னப்பிள்ளை
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
7. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பங்குபெற்ற இயக்கங்களுள் பொருந்தாதது
- சுதேசி இயக்கம்
- ஒத்துழையாமை இயக்கம்
- சட்ட மறுப்பு இயக்கம்,
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
விடை: சுதேசி இயக்கம்
சிறுவினா
1. எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்?
எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர்.
2. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வெற்றி தேடிதந்த திரைப்படம் எது?
மீரா
3. சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் எது?
சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன்.
4. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய இடங்களை எழுதுக
- 1963 இல் இங்கிலாந்து
- 1966இல் ஐ.நா. அவை
- அதே ஆண்டில் அவர் குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலித்தது.
5. எம்.எஸ். சுப்புலட்சுமி பெற்ற விருதுகள் யாவை?
- 1954 – தாமரையணி விருது
- 1974 – மகசேசே விருது (இவ்விருது பெற்ற முதல் இசைக் கலைஞர்)
- இந்திய மாமணி விருது
6. பாலசரஸ்வதி பெற்ற விருதினை எழுது.
தாமரைச் செவ்வணி விருது
7. பாலசரஸ்வதி பாரத நாட்டியம் முதன்முதலில் அரங்கேற்றிய இடம் எது?
காஞ்சிபுரம்
8. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற பட்டங்களை எழுதுக
மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்ணான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற பட்டங்கள்
- இந்திய அரசின் தாமரைத்திரு விருது
- சுவீடன் அரசின் வாழ் வுரிமை விருது,
- சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
9. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நாட்டு விடுதலைக்காக பங்கு பெற்ற இயக்கங்கள் யாவை?
ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
10. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடங்கிய இயக்கம் எது?
உழுபவருக்கே நில உரிமை இயக்கம்
11. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மக்களுக்கு சொல்ல விரும்பியதை எழுதுக
“உங்களுடைய ஆற்ற லை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்”
12. காந்தியடிகளுடனும் வினோபாபாவேயுடனும் பணியாற்றி இன்னமும் நம் நாட்டு மக்களுக்காக உழைப்பவர் யார்?
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
13. ராஜம் சின்னம்மாள் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க பெற்ற விருதினை எழுதுக.
- நடுவண் அரசின் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்)
- தமிழக அரசின் “ஔவை விருது“
- தூர்தர்ஷனின் “பொதிகை விருது“
- தாமரைத்திரு விருது
14. ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ள நூல்களை எழுதுக
- ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ (பாரதியின் வரலாற்றுப் புதினம்)
- கரிப்பு மணிகள் புதினம் (உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை)
- குறிஞ்சித்தேன் புதினம் (நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்)
- அலைவாய்க் கரையில் புதினம் (கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்கள்)
- சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர் (அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக் காட்டல்)
- கூட்டுக் குஞ்சுகள் புதினம் (தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் அவல உலகைக் காட்டல்)
- மண்ணகத்துப் பூந்துளிகள் (பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியது)
சில பயனுள்ள பக்கங்கள்