Tamil Nadu 10th Standard Tamil Book சங்க இலக்கியத்தில் அறம் Solution | Lesson 8.1

பாடம் 8.1. சங்க இலக்கியத்தில் அறம்

10ஆம் வகுப்பு தமிழ், சங்க இலக்கியத்தில் அறம் பாட விடைகள் - 2023

பெருவழி > 8.1. சங்க இலக்கியத்தில் அறம்

I. பலவுள் தெரிக.

1. மேன்மை தரும் அறம் என்பது…….

  1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  2. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  3. புகழ் கருதி அறம் செய்வது
  4. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

  1. உதியன்; சேரலாதன்
  2. அதியன்; பெருஞ்சாத்தன்
  3. பேகன்; கிள்ளிவளவன்
  4. நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

விடை : அதியன்; பெருஞ்சாத்தன்

II. குறு வினா

குறிப்பு வரைக : அவையம்

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன.

“அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு, உறையூலிருந்து அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலைமிக்கது.

III. சிறு வினா

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்குமு் தேவையானவையே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

சங்க இலக்கியங்ள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:-

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

நீர் நிலையைப் பெருக்கி நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசினின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:-

“அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

அறம் செய்வதில் வணிகநோக்கம் இருத்தல் கூடாது, நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:-

தமிழர் போர் செய்வதிலும், அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது வீரமற்றோர், முதியோர், சிறார் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதி அறம்:-

பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது தன்னைத் தாண்டி பிறரைப் பற்றி சிந்திக்கும் நிலை.

“பிழையா நன்மொழி” என்று நற்றிணையும் கூறுகிறது.

நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய் பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.

சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குதவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.

இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.

IV. நெடு வினா

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக

உறவினருக்கு மடல்

திருநெல்வேலி

07.07.2020

அன்புள்ள பெரியப்பாவிற்கு ராமு எழுதுவது,

நலம், நலம் அறிய ஆவல்,

நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். என்னவென்று தெரியுமா? நேற்று வகுப்பு முடித்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடைத்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே என்று பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டு விட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையை பாராட்டி, சன்மானத் தொகையை பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ராமுவே என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடன், பெரியம்மா, தங்கையுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள,

ராமு

உறைமேல் முகவரி

பெறுநர்:-

அ. அய்யம்பெருமாள்

5/507, திருவள்ளூவர் நகர்

சென்னை – 600 012.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் ____________, ____________  இன்புற்றனர்.

விடை : பொருள் ஈட்டி, அறம் செய்து

2. சங்க காலத்தில் அறத்தை ____________ மையமாகக் கொண்டிருந்தனர்.

விடை : மனித உறவின்

3. சமயக் கலப்பில்லாத ____________ இயல்பாக நிலவிய காலம் சங்ககாலம்

விடை : மானிட அறம்

4. அறநெறிக்கால அறங்கள் ____________ சார்ந்தவை.

விடை : சமயம்

5. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ____________ ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

விடை : அறநெறி

6. வீரத்தைப் போலவே கொடையும் ____________ விரும்பப்பட்டது.

விடை : தமிழர்களால்

பலவுள் தெரிக

1. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்று கூறும் நூல்

  1. அகநானூறு
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. புறநானூறு

விடை : புறநானூறு

2. கூற்றினை ஆராய்க

1. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கலாம் என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது.
2. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.

  1. 1 மட்டும் சரி
  2. 2 மட்டும் சரி
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

விடை : 2 மட்டும் சரி

3. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்
அறனும் காத்தலும் அமைச்சர் கடமை
என்று கூறும் நூல்

  1. பரிபாடல்
  2. பதிற்றுப்பத்து
  3. புறநானூறு
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

4. பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி __________ குறிப்பிடுகிறார்.

  1. நல்வேட்டனார்
  2. பெருஞ்சாத்தன்
  3. பெரும்பதுமனார்
  4. நல்லந்துவனார்

விடை : நல்லந்துவனார்

5. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்ப ம் தீர்ப்பது தான் என்று கூறியவர்

  1. பெருஞ்சாத்தன்
  2. நல்வேட்டனார்
  3. பெரும்பதுமனார்
  4. நல்லந்துவனார்

விடை : நல்வேட்டனார்

6. உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று ________ குறிப்பிடுகிறார்.

  1. கபிலர்
  2. நச்செள்ளையார்
  3. பெருங்கடுங்கோ
  4. சாத்தனார்

விடை : பெருங்கடுங்கோ

குறு வினா

1. அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?

மன்னர்களுடைய செங்கோலும், வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன.

2. உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுவது என்ன?

பிறர் துன்பம் தீர்ப்பது தான் ‘உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுகிறார்.

3. அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?

அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.

நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது

4. கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.

  • அதியன்
  • பேகன்
  • ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
  • திருமுடிக்காரி

5. அமைச்சர்களை மாங்குடி மருதனார் எவ்வாறு போற்றுகிறார்?

‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’

என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

6. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடும் வரிகளை எழுதுக.

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம் 301.

7. மகிழ்ச்சி என்பதன் விளக்கம் கூறுக

ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

8. வள்ளல்கள் எவ்வாறு போற்றப்படுகிறார்கள்?

“இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன்

9. பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டும் விதத்தை கூறுக?

வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்.

10. வள்ளலின் பொருள் பற்றி பெரும்பதுமனார் குறிப்பிடுவதை எழுதுக

வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.

11. எது மேலானதென கலித்தொகை கூறியுள்ளது?

ஈயாமை இழிவு , இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.

12. வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை புறநானூற்றில் குறிப்பிட்டதினை விவரி

வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை புறநானூறு போன்ற இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது.

தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

II. சிறு வினா

1. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் காரணம் கூறுக

இன்பத்தின் கதவைத் திறப்பதுவும், துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் நாக்கு தான்.

மெய் பேசும் நா மனிதனை உயர்ததுகிறது

பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது

எனவே நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் எனக் கூறக் காரணம் ஆகும்.

2. சங்க காலத்தில் போர் அறம் பற்றி கூறுக

தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.

போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம்.

4. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை – குறிப்பு வரைக

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“- புறம்.

எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

5. வள்ளல்கள் பற்றி கவிஞர்கள் கூற்றினை வரைக

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்.

பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.

தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்