Tamil Nadu 10th Standard Tamil Book இராமானுசர் – நாடகம் Solution | Lesson 8.4

பாடம் 8.4  இராமானுசர் – நாடகம்

10ஆம் வகுப்பு தமிழ், இராமானுசர் – நாடகம் பாட விடைகள்

பெருவழி > 8.4 இராமானுசர் – நாடகம்

குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

காட்சி – 1

இடம் : வகுப்பறை

பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்

குகன்செழியா! வந்துவிட்டாயா.
செழியன்வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்கு செல்வோமோ?
குகன் செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசியரைச் சந்திக்க முடியவில்லை.
செழியன் இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.

காட்சி – 1

இடம் : வகுப்பறை

பாத்திரங்கள் : குகன், செழியன், ஆசிரியர்

மாணவர்கள் இருவரும்வணக்கம் ஐயா
ஆசிரியர்வணக்கம்
குகன்ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர்வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன்ஐயா வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே.. அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர்நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணஙகள் கூறப்போகின்றேன். முதலில் கொக்கைப் போல வாய்ப்பு கிட்டும் வரைக் கொக்கைப்போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான வள்ளுவர் “கொக்கொக்க” எனப் பாடியுள்ளார்
குகன்சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர்இரண்டாவதாக, “கோழியைப் போல!”
செழியன்ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்…..
ஆசிரியர்கோழி, குப்பையக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான உணவை மட்டும் கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களை கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்கு தேவையான நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும்நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர்மூன்றாவதாக, உப்பைப் போல
குகன்ஆம், ஐயா “உப்பைப்போல்” என்பதன் விளக்கம் தாருங்கள்
ஆசிரியர்கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலம் அவர்களின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்த நடந்து கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பம் தான். உப்பு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும்மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள். நன்றி! ஐயா!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ……………

  1. பிரம்மகமலம்
  2. சண்பகம்
  3. குறிஞ்சி
  4. முல்லை

விடை : பிரம்மகமலம்

2. தண்டு கொடிக்கு இணையாளவர்கள் …………….

  1. பூரணர்
  2. கூரேசர்
  3. இராமானுசர்
  4. முதலியாண்டாள், கூரேசர்

விடை : முதலியாண்டாள், கூரேசர்

3. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது ……………

  1. மூங்கில்
  2. சண்பகம்
  3. குறிஞ்சி
  4. முல்லை

விடை : மூங்கில்

4. பூரணரின் மகன் பெயர் ……………

  1. நாராயணன்
  2. செளம்ய நாராயணன்
  3. செளம்ய ராஜன்
  4. முதலியாண்டான்

விடை : செளம்ய நாராயணன்

5. நான்மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன்
மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?

  1. இராமானுசர்
  2. பூரணர்
  3. கூரேசர்
  4. முதலியாண்டான்

விடை : இராமானுசர்

6. பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ……………

  1. திருமந்திரம்
  2. மந்திரம்
  3. திருநீறு
  4. துறவு

விடை : திருமந்திரம்

7. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ……………

  1. பொதிகை மலை
  2. நல்லி மலை
  3. பழனி மலை
  4. பிரான் மலை

விடை : பிரான் மலை

8. நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாக கொள்பவர் ……………

  1. மலைமகள்
  2. அலைமகள்
  3. திருமகள்
  4. கலைமகள்

விடை : திருமகள்

9. இளையாழ்வாரே! என்ற பூரணர் யாரை அழைத்தார்?

  1. கூரேசரை
  2. பெரியவரை
  3. இராமானுசரை
  4. முதலியாண்டானை

விடை : இராமானுசரை

சில பயனுள்ள பக்கங்கள்