பாடம் 9.1. ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
அன்பின் மொழி > 9.1. ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
நூல்வெளி
ஜெயகாந்தன் பேசி, ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன . தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |
I. பலவுள் தெரிக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- அறிவியல் முன்னேற்றம்
- வெளிநாட்டு முதலீடுகள்
விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
II. குறு வினா
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு. நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.
III. சிறு வினா
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
“தாகத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:- கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன் மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்பிக்கும் செயல்:- இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைகாரனுக்கு இரண்டனாவை அவர் போட்டார். அதை பெற்றுக் கொண்டவர் கைகள் குவித்து “சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யமாமல் இருந்திருந்தாலோ அல்லது தரம்ம் செய்ய ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில் தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதை தர்மம் செய்தவன் உணர்ந்தான். தர்மம் தந்தவனும் அதைப் பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும். |
IV. நெடு வினா
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ________ சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம் ஆகும்
விடை : சிலநேரங்களில் சில மனிதர்கள்
2. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ________ முதல் ________ வரை ஆகும்.
விடை : 1934 முதல் 2015
3. ஜெயகாந்தன் _________ என சிறப்பு பெயர் பெற்றவர்
விடை : சிறுகதை மன்னன்
4. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ________
விடை : 1972
பலவுள் தெரிக
1. கீழ்காண்பவர்களில் ஞானபீட விருதினை பெற்றவர்கள்
- அகிலன்
- ஜெயகாந்தன்
- ஜானகிராமன்
- புதுமைபித்தன்
விடை : a மற்றும் b
2. ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறியவர்
- கா.செல்லப்பன்
- அசோகமித்திரன்
- ஜானகிராமன்
- புதுமைபித்தன்
விடை : அசோகமித்திரன்
3. வாழ்விக்க வந்த காந்தி என்ற நூலினை மொழியாக்கம் செய்தவர்
- அசோகமித்திரன்
- ஜெயகாந்தன்
- ஜானகிராமன்
- கந்தர்வன்
விடை : ஜெயகாந்தன்
4. ஒரு கதாசிரியனின் கதை என்பது _______ வாழ்க்கை வரலாறு
- அசோகமித்திரன்
- முன்சி பிரேம்சந்தின்
- காந்தியின்
- ஜெயகாந்தனின்
விடை : முன்சி பிரேம்சந்தின்
5. எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்னும் கவிதையில் ஜெயகாந்தன் யாரை குறிப்பிட்டுள்ளார்
- கண்ணதாசன்
- மருதகாசி
- ஆலங்குடி சோமு
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விடை : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சிறு வினா
1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
- குடியரசுத்தலைவர் விருது
- சாகித்திய அகாதெமி விருது
- சோவியத் நாட்டு விருது
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
2. அசோக மித்திரன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்று ஒவ்வாது, அவர் அரசியிலில் தொடர்நது பங்கு பெறமால் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம். |
3. கா.செல்லப்பன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமரிந்த ஞானச் செருக்கு, கம்பீரமானக குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் – இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழினின் சிறப்பான அடையாளங்கள். படிக்காத மேதை என குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரஞ்சு இலக்கியங்களை தானே படித்து உணர்ந்தத மட்டுமன்றி, வாழ்க்கையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர். |
4. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு யாவை?
- குருபீடம்
- யுகசாந்தி
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
5. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
- யாருக்காக அழுதான்?
- கருணையினால் அல்ல
- சினிமாகவுக்குப் போன சித்தாளு
6. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.
- பாரீசுக்குப் போ
- சுந்தர காண்டம்
- உன்னைப் போல் ஒருவன்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
7. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை
8. ஜெயகாந்தன் திரைப்படமான படைப்புகளை எழுதுக.
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்
- ஊருக்கு நூறு பேர்
- உன்னைப் போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
9. ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தது. மிகப்பெரிய சவாலும் அதுதான்