பாடம் 9.5. அணிகள்
அன்பின் மொழி > 9.5. அணிகள்
I. பலவுள் தெரிக.
வாய்மையே மழைநீராகி இத் தொடரில் வெளிப்படும் அணி
- உவமை
- தற்குறிப்பேற்றம்
- உருவகம்
- தீவகம்
விடை : உருவகம்
II. குறு வினா
1. தீவக அணியின் வகைகள் யாவை?
- முதல்நிலைத் தீவகம்
- இடைநிலைத் தீவகம்
- கடைநிலைத் தீவகம்
என்னும் மூன்று வகையாக வரும்.
2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி நிரல் நிரை அணி ஆகும். இலக்கணம்:- நிரல் – வரிசை; நிறை – நிறுத்தல் விளக்கம்:- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும். |
III. சிறு வினா
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
அணி இலக்கணம்:- இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். எ.கா.:- ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி பாடலின் பொருள்:- கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வர வேண்டாம் எனத் அணிப் பொருத்தம்:- கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது _________ அணி எனப்படும்.
- தீவக அணி
- நிரல்நிறை அணி
- தற்குறிப்பேற்ற அணி
- இயல்பு நவிற்சி அணி
விடை : தற்குறிப்பேற்ற அணி
2. போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட பாடல் வரிகள் இடம்பெற்று நூல்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- சூளாமணி
- சீவகசிந்தாமணி
விடை : சிலப்பதிகாரம்
2. போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட பாடல் வரிகள் இடம்பெற்று நூல்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- சூளாமணி
- சீவகசிந்தாமணி
விடை : சிலப்பதிகாரம்
3. சிலை என்பதன் பொருள் தருக
- வில்
- பகைமை
- சிவந்தன
- பறவை
விடை : வில்
4. தீவக அணி _______ வகைப்படும்
- 4
- 3
- 2
- 1
விடை : 3
4. தன்மையணி பிரிவுகளில் பொருந்தாது
1. பொருள் தன்மையணி | 2. குணத் தன்மையணி |
3. சாதித் தன்மையணி | 4. தொழிற் தன்மையணி |
- 1, 2 மட்டும்
- 2, 3 மட்டும்
- 3, 4 மட்டும்
- எதுவுமில்லை
விடை : ஒன்றுமில்லை
சிறுவினா
1. அணி என்றால் என்ன?
மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலண்கள் . அதுபோன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள் ஆகும்.
2. தீவக அணி என்றால் என்ன?
தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது. |
3. தன்மையணி என்றால் என்ன?
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
4. தன்மையணியின் வகைகள் யாவை?
- பொருள் தன்மையணி
- குணத் தன்மையணி
- சாதித் தன்மையணி
- தொழிற் தன்மையணி
என நான்கு வகைப்படும்.
5. நிரல் நிறை அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.
நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் எ.கா.:- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பாடலின் பொருள்:- இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். அணிப்பொருத்தம்:- இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும். |
மொழியை ஆள்வோம்…
I. மொழிபெயர்க்க.
1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein
விடை : ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!
2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
விடை : இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே வேலைப்பளு உள்ளது.
3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
விடை : நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
விடை : வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது விதியல்ல. இரண்டுக்காகவும் தொடரந்து முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுவதே எண்ணப்படும்.
II. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர்போல
- பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்
2. மழைமுகம் காணாப் பயிர்போல
- வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
- பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
- கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது
III. பொருத்தமான நிறுத்தக் குறியிடுதல்
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலைய மான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
|
IV. குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்:-
1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று (2)
- காலை
2. நேர் நேர் – வாய்பாடு (2)
- தேமா
11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று (5)
- கலித்தொகை
14. மக்களே போல்வர் …………………… (4)
- கயவர்
மேலிருந்து கீழ் :-
1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது (5)
- கார்காலம்
2. மொழிஞாயிறு …….. (9)
- தேவநேயப்பாவாணர்
3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் ……………. (5)
- குறுந்தொகை
4. கழை என்பதன் பொருள் ………… (4)
- மூங்கில்
7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் ……….. (4)
- திங்கள்
10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு ……………..
- சிங்கம்
12. …………. என்பது புறத்திணைகளுள் ஒன்று
- கைக்கிளை
வலமிருந்து இடம் :-
15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் …………. (4)
- ஒளவையார்
16. மதிமுகம் உவமை எனில் முகமதி ………………. (5)
- உருவகம்
கீழிருந்து மேல் :-
5. விடையின் வகைகள் …………. (3)
- எட்டு
6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் …………. (5)
- தேம்பாவணி
8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் ……….. (4)
- செங்கீரை
9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று ………… (5)
- திருக்குறள்
13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது ………. (7)
- மெய்க்கீர்த்தி
17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ………. (7)
- பிள்ளைத்தமிழ்
18. செய்தவம் – இலக்கணக்குறிப்பு ………… (5)
- வினைத்தொகை
V. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
- கம்பர்
- உமறுப்புலவர்
- ஜவாது ஆசுகவி
- காசிம்புலவர்
- குணங்குடியார்
- சேகனாபுலவர்
- செய்குதம்பி பாவலர்
மொழியோடு விளையாடு….
I. விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க
“சாலைப் பாதுகாப்பு விழிப்புணவு விழா” ஜனவரி 18, நெல்லை நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி, குறியீடுக்ள உணர்த்துவதை மனதல் கொண்டு கட்டுப்பாடுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள், மாணவர்கள் மனதில் சாலைவிதிகளை பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பட்டை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சார்ந்தவர் அனைவரும் இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் ஓட்டம் நிகழ்த்தினர் |
II. கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
௧ | ௨ | ௩ | ௪ | |||
௫ | ௬ | ௭ | அ | ௯ | ௧௦ | ௧௧ |
௧௨ | ௧௩ | ௧௪ | ௧௫ | ௧௬ | ௧௭ | ௧அ |
௧௯ | உ0 | ௨க | ௨௨ | ௨௩ | ௨௪ | ௨௫ |
௨ ௬ | ௨௭ | ௨அ | ௨௯ | ௩௦ | ௩௧ |
III. அகராதியல் காண்க
1. குணதரன்
- நற்குணமுள்ளவன்
- முனிவன்
2. செவ்வை
- செம்மை
- மிகுதி
3. நகல்
- படி
- பிரதி
4. பூட்கை
- யானை
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
- Humanism – மனிதநேயம்
- Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
- Cabinet – அமைச்சரவை
- Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
அறிவை விரிவு செய்
- யானை சவாரி – பாவண்ணன்
- கல்மரம் – திலகவதி
- அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந. முருகேசபாண்டியன்