Tamil Nadu 11th Standard Tamil Book நன்னூல் – பாயிரம் Solution | Lesson 1.3

பாடம் 1.3. நன்னூல் – பாயிரம்

11ஆம் வகுப்பு தமிழ், நன்னூல் - பாயிரம் பாட விடைகள்

கவிதைப்பேழை > 1.3. நன்னூல் – பாயிரம்

நூல்வெளி

நன்னூல், தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும்.

இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது.

எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும் புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

சீயங்கன் எனற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிராம் குறிப்பிடும்.

ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் திருத்தங்கரான சந்திரப்பிரபாவின் கோவிலில் பவணந்தியாரின் உருவ சிற்பம் உள்ளது.

I. சொல்லும் பொருளும்

  • பால் – வகை
  • இயல்பு – பண்பு
  • மாடம் – மாளிகை
  • அமை – மூங்கில்

II. இலக்கணக்குறிப்பு

  • மாநகர் – உரிச்சொல்தொடர்
  • காட்டல், கோடல் – தொழிற்பெயர்
  • கேட்போர் – வினையாலணையம் பெயர்
  • ஐந்தும் – முற்றுமை

III. பகுபத உறுப்பிலக்கணம்

வைத்தார் = வை + த் + த் + ஆர்

  • வை = பகுதி
  • த் = சந்தி
  • த் = இறந்தகால இடைநிலை
  • ஆர் = பலர்பால் வினைமுற்று விகுதி

IV. புணர்ச்சி விதிகள்

1. அணிந்துரை = அணிந்து + உரை

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” விதிப்படி அணிந்த் + உரை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அணிந்துரை என்றாயிற்று.

2. பொதுச்சிறப்பு =  பொது + சிறப்பு

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” விதிப்படி பொதுச்சிறப்பு என்றாயிற்று.

V. குறு வினா

1. “பாயிரம்” – பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

  • நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன் – வினையாலணையும் பெயர்
  • ஆடமை (ஆடு ஆமை) – வினைத்தொகை
  • அமைதோள்- உவமைத்தொகை
  • மாடக்கு – “அத்து”ச் சாரியை தொக்கி நின்றது

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. கொள்வோன் = கொள் + வ் + ஓன்

  • கொள் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஓன் –  ஆண்பால் வினையெச்ச விகுதி

2. நின்ற = நில் (ன்) + ற் + அ

  • நில் – பகுதி
  • ல், ன்- ஆனது விகாரம்
  • அ – பெயரெச்ச விகுதி

3. ஏற்றி =  ஏற்று + இ

  • ஏற்று – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. பயனோடு = பயன் + ஓடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பயனோடு என்றாயிற்று.

2. முன்னுரை = முன் + உரை

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” விதிப்படி முன்ன் + உரை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முன்னுரை என்றாயிற்று.

3. நூன்முகம் = நூல் + முகம்

  • “லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” விதிப்படி நூன்முகம் என்றாயிற்று.

4. நூற்பெயர் = நூல் + பெயர்

  • “லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” விதிப்படி நூற்பெயர் என்றாயிற்று

5. நன்னூல் = நன்மை + நூல்

  • “ஈறுபோதல்” விதிப்படி நன் + நூல் என்றாயிற்று
  • “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” விதிப்படி நன் + னூல் என்றாயிற்று.

6. தந்துரை = தந்து + உரை

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” விதிப்படி தந்த் + உரை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தந்துரை என்றாயிற்று.

7. பொதுப்பாயிரம் = பொது + பாயிரம்

  • “இயல்பினம் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” விதிப்படி பொதுப்பாயிரம் என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1. பாயிரம் இல்லது ____________ அன்று

  1. காவியம்
  2. பனுவல்
  3. பாடல்
  4. கவிதை

விடை : பனுவல்

2. நன்னூலின் ஆசிரியர் _______________

  1. பாரதியார்
  2. பவணந்தி முனிவர்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : யாழ்ப்பாணத்தில்

3. நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை __________ 

  1. 1
  2. 3
  3. 2
  4. 4

விடை : 2

4. நன்னூலினை பவணந்தி முனிவர் __________ வேண்டுதலால் இயற்றினார்.

  1. சீயங்கன்
  2. சடையப்பர்
  3. சீதக்காதி
  4. பாரிவள்ளல்

விடை : சீயங்கன்

5. நூலுக்கு முகத்தை போன்று இருப்பதால் __________ எனப்பட்டது.

  1. அணிந்துரை
  2. புறவுரை
  3. புனைந்துரை
  4. முகவுரை

விடை : முகவுரை

6. நூலுக்கு அணியாக அமைவது __________ 

  1. முகவுரை
  2. அணிந்துரை
  3. புனைந்துரை
  4. நூன்முகம்

விடை : அணிந்துரை

7. நன்னூல் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு

  1. 1832
  2. 1833
  3. 1834
  4. 1835

விடை : 1834

8. __________ இல்லது பனுவல் அன்றே

  1. முகவுரை
  2. நூன்முகம்
  3. பாயிரம்
  4. புறவுரை

விடை : பாயிரம்

VI. பொருத்துக

அ.

1. மாடங்கள்அ. அணிந்துரை
2. மாநகரங்கள்ஆ. அணிகலன்கள்
3. மகளிர்இ. கோபுரங்கள்
4. நூல்கள்ஈ. ஓவியங்கள்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

ஆ.

1. பால்அ. மாளிகை
2. இயல்புஆ. வகை
3. மாடம்இ. மூங்கில்
4. அமைஈ. பண்பு
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

VI. குறு வினா

1. பாயிரம் எதற்கு உதவுகிறது?

நூலை பற்றி தெரிந்து கொள்வதற்கும், நூலைப் புரிந்து கொள்வதற்கும், நூலின் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்பதற்கும் பாயிரம் உதவுகிறது.

2. பாயிரத்தின் வேறு சில பெயர்களை கூறு?

  • முகவுரை
  • பதிகம்
  • அணிந்துரை
  • நூல்முகம்
  • புறவுரை
  • தந்துரை
  • புணர்ந்துரை

3. பாயிரத்தின் வகைகள் கூறுக

பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரு வகைப்படும்

4. பொதுப்பாயிரம் என்பது என்ன?

நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம் ஆகும்

5. நன்னூல் எழுத்ததிகாரத்தின் பகுதிகள் எத்தனை வகையாக அமைந்துள்ளது?

எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும் புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

6. நன்னூல் சொல்லதிகாரத்தின் பகுதிகள் யாவை?

சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

7. பவணந்தியாரின் உருவச்சிற்பம் எங்கு உள்ளது?

ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் திருத்தங்கரான சந்திரப்பிரபாவின் கோவிலில் பவணந்தியாரின் உருவ சிற்பம் உள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்