Tamil Nadu 11th Standard Tamil Book ஏதிலிக்குருவிகள் Solution | Lesson 2.2

பாடம் 2.2. ஏதிலிக்குருவிகள்

11ஆம் வகுப்பு தமிழ், ஏதிலிக்குருவிகள் பாட விடைகள்

கவிதைப்பேழை > 2.2. ஏதிலிக்குருவிகள்

நூல்வெளி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த அழகியில் பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன்.

புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர்.

“தகப்பன்கொடி” புதினத்திற்காக 2003ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருது பெற்றவர்.

அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

இவரின் படைப்புகள்

  • சிறுகதைத்தொகுப்பு – குறடு, நெரிக்கட்டு
  • கவிதைத்தொகுப்பு – உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு
  • கட்டுரைத்தொகுப்பு – மீள்கோணம், பெருகும் வேட்கை

I. பலவுள் தெரிக

1. பொருத்தமான இலக்கிய வடிவம் எது ____________

  1. ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
  2. திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
  3. யானை டாக்டர் – குறும்புதினம்
  4. ஐங்குறுநூறு – புதுக்கவிதை

விடை : யானை டாக்டர் – குறும்புதினம்

II. குறு வினா

ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?

  • ஏதிலி என்பதன் பொருள் ஏதுமற்ற என்பதாகும். முன்பெல்லாம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும், ஆற்றின் கரைகளில் நெடிய மரங்கள் இருக்கும். பறவைகளின் ஒலிகள் கேட்டுக்கொண்ட இருக்கும். பாதைகளில் தூக்கணாங்குருவி கூடுகள் காற்றில் ஆடும்.
  • இன்று மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின. மேலும் வான்மழை பொய்த்ததால் மண்வளம் குறைந்தது. இதனால் ஊர்க்குருவிகள் தன் வாழ்விடம் பாதிப்புக்கு உள்ளானதால் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு வாழ்வதற்காக ஏதிலிக் குருவிகள் எங்கோ போயின.

III. சிறு வினா

காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்

  • காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு தூக்கணாங்குருவியின் கூடாகும்.
  • காற்றில் ஆடும் புல்லைக் கொண்டு கரங்கள் இல்லாமல் தன் அலகால் புல் வீடு கட்டும் தூக்கணாங்குருவியின் அழகைக் கண்டால் நம் மெய்சிலிர்க்கும். அந்த கூடுதான் தூக்கணாங்குருவியின் வீடு.
  • அதனால் தான் கவிஞர் தூக்கணாங்குருவி கூட்டை காற்றில் ஆடும் வீடுகள் என்று ஒப்பாக கூறினார்.

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

  • பார்க்க – வினையெச்சம்
  • மழைக்காலம் – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • நெடுமரம் – பண்புத்தொகை

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. பார்க்க = பார் + க் + க் + அ

  • பார் – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. கரந்த = கர + த்(ந்) + த் + அ

  • கர – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

3. பொய்த்தது = பொய் + த் + த் + அ + து

  • பொய் – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

4. மறுகியது = மறுகு + இ (ன்) + ய் + து

  • மறுகு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை, “ன” கரம் புணர்ந்து கெட்டது
  • ய் – உடம்படுமெய் சந்தி
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. மழைக்காலம் = மழை + காலம்

  • “இயல்பினம் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி பொதுப்பாயிரம் என்றாயிற்று.

2. கரையெல்லாம் = கரை + எல்லாம்

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி கரை + ய் + எல்லாம் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி கரையெல்லாம் என்றாயிற்று.

3. நெடுமரம் = நெடுமை + மரம்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி நெடுமரம் என்றாயிற்று

4. வழியெல்லாம் = வழி + எல்லாம்

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி வழி + எல்லாம் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி வழியெல்லாம் என்றாயிற்று.

5. காலமது = காலம் + அது

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி காலமது என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1. அழகிய பெரியவன் இயற்பெயர்   ___________

  1. அரவிந்தன்
  2. ராசேந்திரன்
  3. வில்வரத்தினம்
  4. ராசகோபாலன்

விடை : அரவிந்தன்

2. அழகிய பெரியவன் பிறந்த ஊர் ___________

  1. யாழ்ப்பாணம்
  2. சென்னிமலை
  3. அழகர்மலை
  4. பேராணம்பட்டு

விடை : பேராணம்பட்டு

3. அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல்  ___________

  1. குறடு
  2. தகப்பன் கொடி
  3. நெறிக்கட்டு
  4. வடக்குவீதி

விடை : தகப்பன் கொடி

II. பொருத்துக

1. ஏதிலிக்குருவிகள்அ. பேயனார்
2. திருமலை முருகன் பள்ளுஆ. ஜெயமோகன்
3. ஐங்குறுநூறுஇ. அழகிய பெரியவன்
4. யானை டாக்டர்ஈ. பெரியவன் கவியார்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

II. குறுவினா

1. அழகிய பெரியவன் – குறிப்பு வரைக

  • அழகிய பெரியவன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நதவர்.  இயற்பெயர் அரவிந்தன்.
  • அரசு பள்ளி ஆசிரியர்; நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை படைப்பவர்.
  • “தகப்பன் கொடி” புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன இவர் படைப்புகள்

2. ஏதிலிக்குருவிகள் காட்சிப்படுத்தும் அவலம் யாது?

  • இயற்கைச் சூழலே உயிர்களின் இருப்பை முடிவு செய்கிறது.
  • இயற்கைக் மனிதர்க்குமான தொப்புள்கொடி மழைத்துளிகள்
  • முதல்துளி விழுகையில், உயிர்கள் மலர்கின்றன.
  • “ஏதிலிக்குருவிகள்” கவிதை, சூழலியல் மாற்றத்தால் நிகழ்கிற அவலத்தை காட்சிப்படுத்துகிறது.

3. ஏதிலிக்குருவிகள் கவிதையால் பெறப்படும் செய்தி யாது

  • ஊரில், இன்று குருவிகளையும், கூடுகளையும் பார்க்க இயலவில்லை. முன்பு அடைமழை என்றால் ஆற்றில் நீர் புரளும். கரைகளில் நின்ற நெடுமரங்களில் பறவைகள் குரலெழுப்பும்.
  • நடந்துபாேகும் வழிகளில் தூக்கணாங் குருவிகளி கூடுகள், புல் வீடுகளாய் காற்றில் ஆடும். சிட்டுக்குருவிகள் மூங்கில் கிளைகளில் அமர்ந்து, கழித்தோடும் நீருடன் பாடிக்கொண்டிருக்கும்.
  • இன்றோ, மரங்கள் வெட்டுண்டன; மண்ணோ மறுகிவிட்டது. குருவிகள் வாழ வழியின்றி அகதிகளாய் எங்கோ போய்விட்டன என்பதே கவிதைச் செய்தியாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்