பாடம் 2.3. திருமலை முருகன் பள்ளு
கவிதைப்பேழை > 2.3. திருமலை முருகன் பள்ளு
நூல்வெளி
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம். இவ்வூர் ‘பண்பை’ என்றும் ‘பண்பொழில்’ என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் மேலுள்ள முருக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. இந்நூலிலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன. இந்நூல் ‘பள்ளிசை’ என்றும் ‘திருமலை அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர். இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு |
I. சொல்லும் பொருளும்
- வட ஆரிநாடு – திருமலை
- தென் ஆரிநாடு – குற்றாலம்
- ஆரளி – மொய்க்கின்ற வண்டு
- இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
- இடங்கணி – சங்கிலி
- உளம் – உள்ளான் என்ற பறவை
- சலச வாவி – தாமரைத் தடாகம்
- தரளம் – முத்து
- கா – சோலை
- முகில்தொகை – மேகக்கூட்டம்
- மஞ்ஞை – மயில்
- கொண்டல் – கார்கால மேகம்
- மண்டலம் – உலகம்
- வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
- அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற
II. இலக்கணக் குறிப்பு
- செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
- அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
- கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
ஈன்ற = ஈன் + ற் + அ
- ஈன் – பகுதி
- ற் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
IV. புணர்ச்சி விதிகள்
செங்கயல் = செம்மை + கயல்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி செம் + கயல் என்றாயிற்று
- “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி செங்கயல் என்றாயிற்று
V. குறு வினா
வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
பாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
- தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும்.
- நிலவளம், நீர்வளம் மிக்க நாடு தெனகரை நாடு எனக் குறிப்பிடுகின்றார் பெரியவன் கவிராயர்.
V. சிறு வினா
“சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடம் சுட்டி பொருள் விளக்குக
இடம்:-
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம். இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை. பாட்டுடைத்தலைவன் முருகப்பெருமான். வடகரை நாட்டின் சிறப்பை பற்றி பாடுகையில் “சலசவாவியில் செங்கயில்பாயும்” என்கிறார் கவிராயர்.
பொருள்:-
தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.
விளக்கம்:-
- வடகரை நாட்டின் சிறப்பைப் பற்றி பாடும் கவிராயர் அங்குள்ள நீர்வளம் பற்றியும், நிலவளம் பற்றியும் தம் பாடலில் மிக அழகாகப் படம் பிடித்து காட்டுகிறார். மலரில் மொய்க்கும் வண்டுகள் ரீங்காரம் இடுமாம். வண்டின் இசைக்கேட்டு உள்ளான் பறவை தன் வாலை ஆட்டுமாம். தாமரைக் குளத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்த விளையாடுமாம். வெண்சங்குகள் பரவிக் காணப்படுமாம். முக்காலம் உணர்ந்த முனிவர் வார்த்தைகள் மெய்யாகுமாம். அழகான வர்ணனையுடன் குறிப்பிடுகிறார்.
V. நெடு வினா
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க
பள்ளு:-
96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று இது “உழத்திப்பாட்டு எனவும் அழைக்கப்படும் தொல்காப்பியம் குறிப்பிடும புலன் என்னம் இலக்கிய வகையைச் சாரும்.
வடகரை நாட்டின் இயற்கை வளம்:-
- வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுபாடும். வண்டின் இசைக்கேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.
- தாமரை தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
- மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும்.
- இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.
தென்கரை நாட்டின் இயற்கை வளம்:-
- தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாளிகைகளில் அகில் புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்த காக்கும்.
- செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாத காவல் காப்பர். இளைய பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிா்ந்திருப்பர்.
- இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும்பொழுது முத்துக்கள் சிதறி வெடிக்கும்.
- இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதன் வீற்றிருக்கின்றார்.
கூடுதல் வினாக்கள்
I. இலக்கணக்குறிப்பு
- ஏற்பவர் – வினையாலணையும் பெயர்ச்சம்
- மடை இடங்கணி, வாவித்ரங்கம் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
- ஈன்ற சங்கு, போற்றும் திருமலை, வருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்
- ஏந்தி வெடிக்கும் – வினையெச்சம்
II. பகுபத உறுப்பிலக்கணம்
1. அலர்ந்து = அலர் + த் (ந்) + த் + உ
- அலர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
2. ஆடுகம் = ஆடு + க் + அம்
- ஆடு – பகுதி
- க் – சந்தி
- அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
3. விரைந்து = விரை + த் (ந்) + த் + உ
- விரை – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
4. ஆடும் = ஆடு + உம்
- ஆடு – பகுதி
- உம் – பெயரெச்ச விகுதி
5. போற்றும் = போற்று + உம்
- போற்று – பகுதி
- உம் – பெயரெச்ச விகுதி
6. பெய்யும் = பெய் + ய் + உம்
- பெய் – பகுதி
- ய் – சந்தி
- உம் – பெயரெச்ச விகுதி
7. நடிக்கும் = நடி + க் + க் + உம்
- நடி – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்காகால இடைநிலை
- உம் – பெயரெச்ச விகுதி
8. வெடிக்கும் = வெடி + க் + க் + உம்
- வெடி – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்காகால இடைநிலை
- உம் – பெயரெச்ச விகுதி
9. ஏந்தி = ஏந்து + இ
- ஏந்து – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
10. காக்கும் = கா + க் + க் + உம்
- கா – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்காகால இடைநிலை
- உம் – பெயரெச்ச விகுதி
III. புணர்ச்சி விதிகள்
1. செங்கயல் =செம்மை + கயல்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி செம் + கயல் என்றாயிற்று
- “முன்நின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி செங்கயல் என்றாயிற்று
2. அளியுலாம் = அளி + உலாம்
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி அளி + ய் + உலாம் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அளியுலாம் என்றாயிற்று.
3. வெண்சங்கு = வெண்மை + சங்கு
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி வெண்சங்கு என்றாயிற்று
4. திருமலைச்சேவகன் = திருமலை +சேவகன்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி திருமலைச்சேவகன் என்றாயிற்று.
5. மண்டலங்காக்கும் = மண்டலம் + காக்கும்
- “மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாத் திரியும்” விதிப்படி மண்டலங்காக்கும் என்றாயிற்று.
IV. பலவுள் தெரிக
1. உழத்திப்பாட்டு என்பது ___________ என்ற இலக்கிய வடிவத்தின் வேறு பெயர்
- பள்ளு
- கவிப்பாட்டு
- வயல்பாட்டு
- இயற்கைபாட்டு
விடை : பள்ளு
2. திருமலை முருகன் பள்ளு நூலை இயற்றியவர் ___________
- பெரியவன் கவிராயர்
- பாரதியார்
- உடுமலை நாராயணகவி
- அழகிய பெரியவன்
விடை : அழகிய பெரியவன்
3. திருமலை முருகன் பள்ளுவின் வேறுபெயர்கள் ___________
- முக்கூடற்பள்ளு, பள்ளிசை
- பள்ளிசை குறவஞ்சி
- திருமலை அதிபர் பள்ளு குறத்திப்பாட்டு
- திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
விடை : திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
4. திருமலை ___________ என வழங்கப் பெறுகிறது
- கிழக்கு ஆரிய நாடு
- கிழக்கு ஆரிய நாடு
- தென் ஆரிய நாடு
- வட ஆரிய நாடு
விடை : வட ஆரிய நாடு
5. தென் ஆரிய நாடு என வழங்கப்பட்டது ___________
- பண்பொழில்
- குற்றாலம்
- பேரணாம்பட்டு
- திருமலை
விடை : குற்றாலம்
6. கா என்பதன் பொருள்
- வான்
- புல்
- காகிதம்
- சோலை
விடை : சோலை
7. தரளம் என்பதன் பொருள்
- கொண்டல்
- முத்து
- உலகம்
- மண்டலம்
விடை : முத்து
V. பொருத்துக
1. ஏதிலிக்குருவிகள் | அ. பேயனார் |
2. திருமலை முருகன் பள்ளு | ஆ. ஜெயமோகன் |
3. ஐங்குறுநூறு | இ. அழகிய பெரியவன் |
4. யானை டாக்டர் | ஈ. பெரியவன் கவியார் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
VI. குறுவினா
1. பள்ளு – குறிப்பு வரைக
- 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று இது “உழத்திப்பாட்டு எனவும் அழைக்கப்படும் தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
- கலிப்பா, கலித்துறை, சிந்து ஆகிய பா வகைளால் பாடப்படுகிறது
- உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்படிக் கூறுகிறது.
2. புலன் எனத் தொல்காப்பியம் எதனை கூறுகிறது?
- பாமர மக்களுக்கு முதன்மை அளித்து உருவாக்கப்பட்ட இலக்கிய வகைகளான குறவஞ்சி, பள்ளு முதலானவற்றைத் தொல்காப்பியம் புலன் எனக் குறிப்பிடுகிறது
3. இளைய பள்ளி காக்கும் எனக்குறிப்பிடப்படுள்ளவை எவை
- தென்கரை நாட்டை முருகன் கைவேலும், ஊர்தியான மயிலை காக்கும்.
- நாட்டை மன்னனின் செங்கோல் ஆட்சி பாதுகாக்கும் என இளைய பள்ளி குறிப்பிட்டுள்ளார்.
4. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் யாவை
பைங்குழலாள் | சிறைமீட்டான் |
சீதாபோகம் | கருங்சூரை |
ரங்கஞ்சம்பா | பூம்பாளை |
மணல்வாரி | குற்றாலன் |
அதிக்கிராதி | பாற்கடுக்கன் |
அரிக்ராவி | கற்பூரப்பாளை |
முத்துவெள்ளை | காடை கழுத்தன் |
புழுகு சம்பா | மிளகு சம்பா |
சொரி குரம்பை | பனைமுகத்தன் |
புத்தன்வாரி |
5. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் யாவை
காரி, கொந்திக்காளை, மால்காளை, மறைகாளை, மயிலைக்காளை, மேழைக்காளை, செம்மறையான், கருமறையான்
6. திருமலை முருகன் கூறும் உழவுக்கருவிகள் யாவை?
கலப்பை, நுகம், பூட்டு, வள்ளைக்கை, உழக்கோல், கொழு, கயமரம், மண்வெட்டி, வடம்