பாடம் 2.4. ஐங்குறுநூறு
கவிதைப்பேழை > 2.4. ஐங்குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு 3அடி சிற்றெல்லையும் 6அடி பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்திணைக்கு ஐந்நூறு பாடல்களை கொண்டது. ஐந்து திணைகளப் பாடிய புலர்கள்
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. பேயனார், சங்காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன. |
I. சொல்லும் பொருளும்
- காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மர்கள்
- போது – மொட்டு
- அலர்ந்து – மலர்ந்து
- கவினி – அழகுற
II. இலக்கணக் குறிப்பு
- ஆல் – அசைநிலை
- கண்ணி – அண்மை விளிச்சொல்
- ஆடுகம் – தன்மைப் பன்னமை வினைமுற்று
III. குறுவினா
அலர்ந்து பகுபத உறுப்பிலக்கணம் தருக
அலர்ந்து = அலர் + த் (ந்) + த் + உ
- அலர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
V. சிறுவினா
ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள் அட்டவணைப்படுத்துக
ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை
திணை | முல்லை |
முதற்பொருள் | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
நிலம் | காடும் காடு சார்ந்த இடமும் |
பெரும்பொழுது | கார்காலம் |
சிறுபொழுது | மாலை |
கருப்பொருள்
தெய்வம் | திருமால் (மாயோன்) |
மக்கள் | குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் |
பறவை | காட்டுக்கோழி |
விலங்கு | முயல், மான் |
ஊர் | பாடி |
மரம் | முல்லை, தோன்றி, கொன்றை, காயா, குருத்தம் |
நீர் | குறுஞ்சுனை, கானாறு |
உணவு | வரகு, சாமை, முதிரை |
பறை | ஏறுகோட்பறை |
யாழ் | முல்லையாழ் |
பண் | சாதரிப்பண் |
தொழில் | சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல் |
கூடுதல் வினாக்கள்
I. இலக்கணக்குறிப்பு
- கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
- பேரமார் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
- ஆடுகளம் விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
- காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
- போதவிழ் தளவொடு – வினைதொகை
- அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சம்
II. பகுபத உறுப்பிலக்கணம்
1. ஆடுகம் = ஆடு + க் + அம்
- ஆடு – பகுதி
- க் – சந்தி
- அம் – தன்மை பன்னமை வினையெச்ச விகுதி
2. விரைந்து = விரை + த் (ந்) + த் + உ
- விரை – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
III. புணர்ச்சி விதிகள்
1. போதவிழ் = போது + அவிழ்
- “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி போத் + அவிழ் என்றாயிற்று
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி போதவிழ் என்றாயிற்று.
2. பிடவலர்ந்து = பிடவு + அலர்ந்து
- “முற்றும் அற்று ஒரேவழி” என்ற விதிப்படி பிடவ் + அலர்ந்து என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிடவலர்ந்து என்றாயிற்று.
3. பூவணி = பூ + அணி
- “ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்ற விதிப்படி பூ + வ் + அணி என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பூவணி என்றாயிற்று.
IV. பலவுள் தெரிக
1. ஐங்குறுநூற்றில் முல்லைத்திணையை பாடியவர் ___________
- பேயனார்
- ஓரம்போகியார்
- கபிலர்
- அம்மூவனார்
விடை : பேயனார்
2. ஐங்குறுநூறு சிற்றெல்லை ___________
- மூன்றடி
- நான்கடி
- ஐந்தடி
- ஆறடி
விடை : மூன்றடி
3. ஐங்குறுநூறு பேரெல்லை ___________
- மூன்றடி
- நான்கடி
- ஐந்தடி
- ஆறடி
விடை : ஆறடி
4. ஐங்குறுநூற்றினைத் தொகுத்தவர் ___________
- பேயனார்
- புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
- கபிலர்
- அம்மூவனார்
விடை : புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
5. ஐங்குறுநூற்றினைத் தொகுப்பித்தவர் ___________
- மாந்தரஞ் சேரலிரும்பொறை
- புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
- பாண்டியன் பெருவழுதி
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
விடை : மாந்தரஞ்சோல் இளம்பொறை
6. தவறான இணையக் கூறுக
- குறிஞ்சி – கபிலர்
- முல்லை – பேயனார்
- மருதம் – ஓதலாந்தையார்
- நெய்தல் – அம்மூவனார்
விடை : மருதம் – ஓதலாந்தையார்
7. சங்ககாலப் புலவர்களுள் ஒருவரான பேயனார் இயற்றிய ______ பாடல்கள் கிடைத்துள்ளன.
- 97
- 105
- 102
- 99
விடை : 105
8. அலர்ந்து பொருள் தருக
- மொட்டு
- மலர்ந்து
- அழகுற
- விரிந்து
விடை : மலர்ந்து
V. பொருத்துக
1. குறிஞ்சி | அ. ஓதாலந்தையார் |
2. முல்லை | ஆ. கபிலர் |
3. மருதம் | இ. பேயனார் |
4. நெய்தல் | ஈ. ஓரம்போகியார் |
5. பாலை | உ. அம்மூவனார் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ |
VI. குறுவினா
1. முல்லைத் திணைக்குரிய பொழுதுகள் யாவை?
- பெரும்பொழுது – கார்காலம்
- சிறுபொழுது – மாலை
2. முல்லைநிலத்தின் மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு கூறுவது யாவை?
- காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தவளம், பிடவம்
3. ஐந்திணைகளை பாடிய புலவர்கள்
- குறிஞ்சி – கபிலர்
- முல்லை – பேயனார்
- மருதம் – ஓரம்போகியார்
- நெய்தல் – அம்மூவனார்
- பாலை – ஓதலாந்தையார்