Tamil Nadu 11th Standard Tamil Book புணர்ச்சி விதிகள் Solution | Lesson 2.7

பாடம் 2.7 புணர்ச்சி விதிகள்

11ஆம் வகுப்பு தமிழ், புணர்ச்சி விதிகள் பாட விடைகள்

கவிதைப்பேழை > 2.7 புணர்ச்சி விதிகள்

1. புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.

நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும்

சான்று :

  • வாழை + மரம் = வாழைமரம் (இயல்பு புணர்ச்சி)
  • வாழை + பழம் = வாழைப்பழம் (தோன்றல் – விகாரப்புணர்ச்சி)
  • பால் + குடம் = பாற்குடம் (திரிதல் – விகாரப்புணர்ச்சி)
  • மரம் + வேர் = மரவேர் (கெடுதல் – விகாரப்புணர்ச்சி)

2. புணர்ச்சி விதிகளை கூறு

சொற்களில் புணர்ச்சியின்போது, நிலைமொழி இறுதியில், வருமொழி முதலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் எனக்கூறுவர்.

3. புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை?

  • தமிழ் மொழியைப் பிழையின்றி கையாள உதவுகிறது.
  • பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறிய உதவுகிறது.
  • மொழியின் அமைப்பை புரிந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது.

4. உடம்படு மெய்யெழுத்துக்கள் யாவை?

  • ய், வ்

5. உடம்படு மெய்யெழுத்துக்கள் எங்கு தோன்றுகிறது? ஏன்?

  • நிலைமொழி ஈற்று உயிரோடு, வருமொழி முதல் உயிர் (உயிர் + உயிர்) புணரும்போது, அவை பொருந்தா, அவற்றை பொருந்தச் செய்ய இடையில் ய், வ் என்னும் மெய்களுள் ஒன்று தோன்றும் அதுவே உடம்படுமெய் எனப்படும்

சான்று

  • கலை + அழகு = கலை + ய் + அழகு = கலையழகு (யகர உடம்படுமெய்)
  • பூ + அழகு = பூ + வ் + அழகு = பூவழகு (வகர உடம்படுமெய்)

5. யகர (ய்) உடம்படு மெய் எங்கு தோன்றுகிறது? சான்று தருக?

  • நிலைமொழி ஈற்றில் “இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒன்று இருந்து, வருமொழி முதலில் வேறு உயிர் வரும்போது, இடையே யகர (ய்) உடம்படுமெய் தோன்றும்

சான்று

  • காட்சி + அழகு =  காட்சி + ய் + அழகு = காட்சியழகு

6. வகர (ய்) உடம்படு மெய் எங்கு தோன்றுகிறது? சான்று தருக?

  • உயிர் எழுத்துக்களுள் “இ, ஈ, ஐ அல்லாத பிற உயிர் எழுத்துகளுள் ஒன்றை இறுதியில் நிலைமொழியோடு, வருமொழி முதல் உயிர் சேரும்போது வகர (வ்) உடம்படுமெய் தோன்றும்

சான்று

  • மா + இலை =  மா + வ் + இலை = மாவிலை

7. ஏ முன் இவ்விருமையும் விளக்கி உதாரணம் தருக

  • நிலைமொழி ஈற்றில் “ஏ” என்னும் உயிர் நின்று வருமொழி உயிருடன் புணரும்போது, யகர உடம்படுமெய்யோ (ய்), வகர உடம்படுமெய்யோ (வ்) தோன்றும் என்பதாகும்

சான்று

  • சே + இழை =  சே + ய் + இழை = சேயிழை

8. குற்றியலுகரப் புணர்ச்சியை சான்றுடுடன் விளக்குக

i. குற்றியலுகரப் சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும் போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.

ii. பின்நிலைமொ இறுதியில் உள்ள மெய், வருமொழி முதல் எழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” – நன்னூல்

சான்று

  • மாசு + அற்றார் =  மாசற்றார்
  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிர் (அ) வந்ததால், நிலைமொழி ஈற்று உகரம் (சு = ச் + உ) கெட்டு, மாசு + அற்றார் = மாச் + அற்றார் என்றானது.
  • பின்பு “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்விதிப்படி நிலைமொழி ஈற்று மெய்யும் (ச்) வருமொழி முதல் உயிரும் (அ) புணர்ந்து (ச் + அ = ச) மாசற்றார் என்றானது.

iii. ட், ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் நெடில் தொடர் உயிர்த்தொடர்க் குற்றிலுகரங்கள் வருமொழியோடு சேரும் போது ஒற்று இரட்டித்துப் புணரும்.

“நெடிலோடு உயிரத்தொடர்க் குற்றுகரங்களுள்
டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே” – (நன்னூல் – 183)

சான்று

ஆறு + பாலம் = ஆற்று + பாலம் =  ஆற்றுப்பாலம்

9. கருவிழி புணர்ச்சி விதி எழுதுக

கருவிழி = கருமை + விழி

“ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு கருவிழி என்றாயிற்று.

10. பாசிலை புணர்ச்சி விதி எழுதுக

பாசிலை = பசுமை + இலை

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “லை” விகுதி கெட்டு “பசு + இலை” என்றாயிற்று.
  • “ஆதீநீடல்” எனும் விதிப்படி “ப” என்னும் குறில் “பா” என நெடிலாகி “பாசு + இலை” என்றாயிற்று.
  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி “பாச் + இலை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “பாசிலை” என்றாயிற்று.

11. பெருங்கல் புணர்ச்சி விதி எழுதுக

பெருங்கல் = பெருமை + கல்

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு “பெரு+ கல்” என்றாயிற்று.
  • “இனமிகல்” எனும் விதிப்படி முதலில் உள்ள வல்லினத்திற்கு (க = க் + அ) இனமான மெல்லினம் (ங்) மிகுந்து “பெருங் + கல் = பெருங்கல்” என்றாயிற்று

12. புலனறிவு புணர்ச்சி விதி எழுதுக

புலனறிவு = புலன் + அறிவு

  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “புலனறிவு” என்றாயிற்று.

13. வில்லொடிந்து புணர்ச்சி விதி எழுதுக

வில்லொடிந்து = வில் + ஒடிந்து

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” எனும் விதிப்படி “வில்ல் + ஒடிந்து” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வில்லொடிந்து” என்றாயிற்று.

14. வழியில்லை புணர்ச்சி விதி எழுதுக

வழியில்லை = வழி + இல்லை

  • “இ ஈ ஐ வழி யவ்வும் என்னும் விதிப்படி” எனும் விதிப்படி “வழி + ய் + இல்லை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வழியில்லை” என்றாயிற்று.

15. விதி வேறுபாடறிந்து விளக்குக

தன்னொற்றிரட்டல் – தனிக்குறில் முன் ஒற்றுவரின் இரட்டும்

இனமிகல் – வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்

தன்னொற்றிரட்டல்

  • பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் தன்னொற்றிரட்டல் என்னும் விதியை பயன்படுத்த வேண்டும்

சான்று

  • வெற்றிலை = வெறுமை + இலை = வெற்று + இலை எனப் புணர்ந்தது.

தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

  • நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்ற வருமொழியின் முதல் உயிர்ரெழுத்து இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிப்பாகும்

சான்று

  • கல் + அதர் = கல்லதர் – தனிக்குறில் முன் உயிர்வரின் இரட்டும்
  • கல்ல + அதர் – உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி புணர்ந்தது.

இனமிகல்

  • பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு, நிலைமொழியன் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின் “இனமிகல்” விதியின்படி புணரும்.

சான்று

  • கருங்கடல் = கருமை + கடல்
  • “ஈறுபோதல்” விதிப்படி – கரு + கடல்
  • இனமிகல் (ங்) விதிப்படி = கருங் + கடல்

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்

  • நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.
  • மகரமெய் புணரும்
  • மகரமெய் கெட்டு இன் மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும்
  • மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்
  • பாடம் + வேளை =  பாடவேளை – மகரமெய் கெட்டுப் புணர்ந்தது.
  • பழம் + தோல் = பழ + தோல் = பழத்தோல் – மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணர்ந்தது
  • காலம் + கடந்தவன் = காலங்கடந்தவன் – வருமொழி முதலெழுத்துக்கேற்ப மகரமெய் திரிந்து புணர்ந்தது.

சில பயனுள்ள பக்கங்கள்