Tamil Nadu 11th Standard Tamil Book தமிழகக் கல்வி வரலாறு Solution | Lesson 4.1

பாடம் 4.1 தமிழகக் கல்வி வரலாறு

11ஆம் வகுப்பு தமிழ், தமிழகக் கல்வி வரலாறு பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.1 தமிழகக் கல்வி வரலாறு

I. பலவுள் தெரிக

1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ___________ என்பதாகும்

  1. நூல்
  2. ஓலை
  3. எழுத்தாணி
  4. தாள்

விடை : நூல்

2. சரியான விடையை தேர்ந்தெடுக்க

அ. வெள்ளிவீதியார்i. தொல்காப்பியம் சிறப்பாயிர உரைப்பாடல்
ஆ. அண்ணாமலையார்ii. திருமந்திரம்
அ. சு.ச. செல்லப்பாiii. ஆத்திச்சசூடி
ஈ. இளம்பெருவழுதிiv. திருக்குறள்
v. நாலடியார்
  1. அ – ii, ஆ – iii, இ – iv, ஈ – i
  2. அ –  iii, ஆ – iv, இ – i, ஈ – ii
  3. அ –  v, ஆ – iii, இ – ii, ஈ – i
  4. அ –  ii, ஆ – iii, இ – iv, ஈ – v

விடை : அ –  v, ஆ – iii, இ – ii, ஈ – i

II. குறு வினா

1. சங்ககாலத்தில் தமிழ்மொழியன் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

  • சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் தமிழ் விளங்கியுள்ளது.
  • மேலும், தமிழ் மொழியே சமயம், வாணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது என இராமாணிக்கனார் கூறியுள்ளார்.

2. உ.வே.சா அவர்கள் பயின்ற கல்வி முறை குறித்துக் குறிப்பு வரைக

  • மரபு வழிக்கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்வி முறையில் உ.வே.சா. பயின்றார்.
  • இக்கல்வி முறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்வி முறையாகும்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

III. சிறு வினா

1. தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக

  • தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை “ஓதற்பிரிவு” எனக் குறிப்பிடுகிறது.
  • அத்துடன் “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம் தோன்றும்” எனவும் குறிப்பிடுகிறது.
  • ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களைத் தொல்காப்பியமும் நன்னூலும் வகுத்துள்ளன.
  • சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பை பெரிதும் போற்றுகின்றன. புறநானூறு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் குறிப்பிடுகிறது.
  • “துணையாய்  வருவது தூயநற் கல்வியே” எனத் திருமந்திரமும், “கல்வி அழகே அழகு” என நாலடியாரும், “இளமையில் கல்” என ஆத்திசூடியும் கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறுகின்றன.

2. சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் – குறிப்பு வரைக

சமணப் பள்ளி

  • கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்பன சமண சமயத்தின் அறக்கொடைகள், மலைக்குகைகளில் தங்கிய சமணத் திகம்பரத் துறவிகள், அங்கிருந்தே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்க்குப் போதித்தனர்..
  • சமணப் பள்ளிகளில் கல்வி கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.

பெண்கல்வி

  • வந்தவாசிக்கு அருகிலுள்ள “வேடல்” கிராமத்திலிருந்து சமணப் பள்ளியின் பெண் சமண ஆசிரியர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார்.
  • சமணப்பெண் ஆசிரியர் “பட்டினிக்குரத்தி” விளாப்பாக்தில் பள்ளி ஒன்றை நிறுவியுள்ளார்.
  • இவற்றால் சமணப் பள்ளிகளில் பெணகள் ஆசிரியர்களாக இருந்துள்ளமை வெளிப்படுகிறது.
  • அத்துடன், பெண்களுக்கு எனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் இருந்தமை புலப்படுகிறது.

IV. நெடு வினா

1. தமிழ் பெளத்தக் கல்வி, சமணக்கல்வி, மரபுக்வழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க

தலையாய அறம்:

  • கல்வி, மருத்துவம், உணவு, அடைக்கலம் என்பன சமண சமயத்தின் தலையாய அறங்கள். காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சமண, பெளத்தப் பள்ளிகள் இருந்துள்ளன.

சமண, பெளத்தப் பள்ளிகள்:

  • சமண, பெளத்தத் துறவிகள் தங்கிய இடம் “பள்ளி” எனப்பட்டது. அங்கு மாணவர்கள் சென்ற கற்றதால் கல்வி கற்பிக்கும் இடம் பிற்காலத்திலல் “பள்ளிக்கூடம்” எனப்பட்டது.
  • சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர் சிலர் சமணப்படுக்கைகள் அமைத்தமை குறித்துத் திருச்சி மலைக்கோட்டை, கழுமலைக் கல்வெட்டுகள்

கல்வி கற்பித்தல்:

  • சமண சமயத் திகம்பரத் துறவிகள் தாங்கள் தங்கி இருந்த மலைக்குகைப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வியையும், சமயக்கருத்துகளையும் போதித்துள்ளனர்.
  • பள்ளி என்பது சமண, பெளத்தச் சமயங்களின் கொடையாகும். “வேடல்” என்னும் ஊரில் பெண் சமயத்துறவி 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளார். விளாப்பாக்கத்தில், பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் பள்ளியை நிறுவிக் கற்பித்துள்ளார்.

மரபுவழிக் கல்வி:

  • மரபுவழிக் கல்வியில் “குருகுலக்கல்வி” முறையில் மாணவர்கள் குருவோடு தங்கி, அவருக்குரிய பணிகளைச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் ஆகிய அடிப்படையில் இக்கல்விமுறை அமைந்தது.
  • போதனை முறையத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் குருகுலக்கல்வி முறை, உறுதியாக விளங்கியது.

ஆங்கிலேயர் போற்றிய திண்ணைப்பள்ளி:

  • 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்களில் திண்ணைப் பள்ளிகள் என்னும் தெற்றிப்பள்ளிகள் மரபுவழிக் கல்வி என்னம் அமைப்புக் கல்வியைக் கற்பித்தன.
  • மரபுவழிக் கல்விக் கூடங்களான திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்றவற்றை ஆங்கிலேயர் நாட்டுக்கல்வி அமைப்பு என அழைத்தனர்
  • அப்பள்ளிகளில் பள்ளிநேரம், பயிற்று முறை எல்லாம் ஆசிரியர் விருப்பப்படி அமைந்திருந்தன.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் _______

  1. மணிமேகலை
  2. சிலப்பதிகாரம்
  3. வளையாபதி
  4. சீவகசிந்தாமணி

விடை : மணிமேகலை

2. தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுவதே _______

  1. வேலை
  2. கல்வி
  3. பணம்
  4. வியாபாரம்

விடை : கல்வி

3. ஆசிரியர், மாவணர்க்கான இலக்கணம் வகுத்த நூல்கள் _______

  1. தொல்காப்பியம், திருக்குறள்
  2. நன்னூல், ஆத்திச்சூடி
  3. நன்னூல், திருமந்திரம்
  4. தொல்காப்பியம், நன்னூல்

விடை : தொல்காப்பியம், நன்னூல்

4. மன்னராட்சிக் காலத்தில் முக்கிய கல்வியாகக் கருதப்பட்டது _______

  1. போர்ப் பயிற்சி
  2. குருகுலப் பயிற்சி
  3. தொழிற் பயிற்சி
  4. சமயக் கல்வி

விடை : போர்ப் பயிற்சி

5. எழுத்தும் இலக்கியமும், உரிச்சொல்லும் கணக்கும் கற்பித்தோரைக் _______ என அழைத்தனர்.

  1. ஆசிரியர்
  2. குரு
  3. கணக்காயர்
  4. குரவர்

விடை : கணக்காயர்

6. கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை _______

  1. மன்றங்கள்
  2. பள்ளிகள்
  3. சான்றோர் அவைகள்
  4. கூடங்கள்

விடை : பள்ளிகள்

7. இளமையில் கல் எனக்கூறியவர் _______

  1. ஒளவையார்
  2. தொல்காப்பியர்
  3. நாலடியார்
  4. நாடக மகளிர்

விடை : ஒளவையார்

8. கண்ணுடையர் என்பவர் கற்றோர் எனக் கூறும் நூல் _______

  1. திருக்குறள்
  2. நன்னூல்
  3. நாலடியார்
  4. சிலப்பதிகாரம்

விடை : திருக்குறள்

9. பொருந்தியவற்றை தேர்க

1. துணையாய் வருவது தூயநற் கல்விதிருமந்திரம்
2. கல்வி அழகே அழகுநாலடியார்
3. இளமையில் கல்ஒளவையார்
  1. 1 மட்டும் சரி
  2. 2 மட்டும் சரி
  3. 3 மட்டும் சரி
  4. 1, 2, 3 சரி

விடை : 1, 2, 3 சரி

10. கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் பற்றி நூல்கள் குறிப்பிடுபவை

1. பள்ளி – பெரிய திருமொழி
2. ஓதும் பள்ளி – திவாகர நிகண்டு
3. கல்லூரி – சீவக சிந்தாமணி

  1. மூன்றும் சரி
  2. மூன்றும் தவறு
  3. 1, 2 சரி 3 தவறு
  4. 1, 3 சரி 2 தவறு

விடை : மூன்றும் சரி

11. பள்ளி என்ற சொல்லுக்குப் ______ என்று பொருள்.

  1. மையம்
  2. கலி
  3. படுக்கை
  4. நரகம்

விடை : படுக்கை

11. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும்
 பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. சிறுபஞ்சமூலம்
  2. திரிகடுகம்
  3. ஏலாதி
  4. பழமொழி நானூறு

விடை : திரிகடுகம்

II. குறுவினா

1. தமிழகத்தின் சங்க காலத்திய கற்பித்தல் பணி பற்றி எழுதுக?

சங்கம் என்னும் அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. சங்கம் தவிர மன்றம், சான்றோர், அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பெளத்தப்பள்ளி போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைச் செய்து வந்துள்ளன.

2. எவர் ஆசிரியர் எனப்பட்டனர்?

பிற்காலத்தில் ஐந்தாக விரித்து உரைக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும், அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர் ஆசிரியர் எனப்பட்டனர்

3. குரவர் என அழைக்கப்பட்டோர் எவர்?

சமய நூலும், தத்துவநூலம் கற்பித்தோர் குரவர் என அழைக்கப்பட்டனர்

4. கல்வியின் நோக்கம் யாது?

கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள சிந்தனைகளைத் தோண்டி வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும்.

5. கல்வி கற்பிக்கும் இடங்களைத் தமிழ்நூல்கள் எவ்வாறு வழங்கின?

  • கல்வி கற்பிக்கப் பெற்ற இடங்களைப் “பள்ளி” எனப் பெரிய திருமொழியும்
  • “ஓதும் பள்ளி” எனத் திவாகர நிகண்டும்
  • “கல்லூரி” எனச் சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.

6. கற்றலுக்கு உரிய சுவடிகள் எவ்வாறு வழங்கப்பெற்றன?

  • கற்றலுக்கு உரிய ஏட்டுக் கற்றைகள் ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் என வழங்கப்பெற்றன.

7. தமிழகத்து பட்டிமண்டபம் என மணிமேகலை எதனை சுட்டுகிறது?

சமய கருத்துகளை விவாவதிக்கும் இடத்திற்கு தமிழகத்து பட்டிமண்டபம் என மணிமேகலை சுட்டுகிறது

சில பயனுள்ள பக்கங்கள்