பாடம் 4.2. பிள்ளைக்கூடம்
கவிதைப்பேழை > 4.2. பிள்ளைக்கூடம்
இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்; ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். கொடி விளக்கு’ என்னும் நூலிலிருந்து இக்கவி்தை எடுத்தாளப்பட்டுள்ளது. |
குறு வினா
இங்கே ஐம்தாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார் எண்ணுபவர்கள் யார்?
- எண்ணச் சொல்கிறவர்கள் : தாழ்மொழியில் கற்பிப்போர்
- எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்
கூடுதல் வினாக்கள்
I. இலக்கணக்குறிப்பு
- கற்பிக்கும் – பெயரச்சம்
- பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்
II. பகுபத உறுப்பிலக்கணம்
1. வீழ்ந்து = வீழ் + த்(ந்) + த் + உ
- வீழ் – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
2. பறந்து = பற + த்(ந்) + த் + உ
- பற – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
3. பயின்று = பயில்(ன்) + ற் + உ
- பயில் – பகுதி
- ன் – ஆனது விகாரம்
- ற் – இறந்த கால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
4. விரும்புகிறேனன் = விரும்பு + கின்று + ஏன்
- விரும்பு – பகுதி
- கின்று – நிகழ்கால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
III. புணர்ச்சி விதிகள்
1. பள்ளிக்கூடம் = பள்ளி + கூடம்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி பள்ளிக்கூடம் என்றாயிற்று.
2. ஐம்பதாண்டு = ஐம்பது + ஆண்டு
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி ஐம்பத் + ஆண்டு என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஐம்பதாண்டு என்றாயிற்று.
3. தட்டுக்கூடை = தட்டு + கூடை
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி தட்டுக்கூடை என்றாயிற்று
4. சர்க்கரைப் பண்டம் = சர்க்கரை + பண்டம்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி சர்க்கரைப் பண்டம் என்றாயிற்று
5. குறுஞ்செடி = குறுமை + செடி
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி குறு + செடி என்றாயிற்று.
- “இனமிகல்” என்ற விதிப்படி குறுஞ்செடி என்றாயிற்று.
IV. பலவுள் தெரிக
1. கீழ் உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க
அ, கொட்டும் பூக்களை | 1. குறிக்கச் சொல்கிறார்கள் |
ஆ. தியானிக்கும் நேரத்தை | 2. ஓவியமாகத் தீட்டச் சொல்கிறார்கள் |
இ. எறும்புகளின் வேகத்தை | 3. கவிதை எழுதச் சொல்கிறார்கள் |
ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை | 4. எண்ணச் சொல்கிறார்கள் |
5. அளக்கச் சொல்கிறார்கள் |
- அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3
- அ – 1, ஆ – 3, இ – 5, ஈ – 2
- அ – 3, ஆ – 2, இ – 1, ஈ – 5
- அ – 4, ஆ – 1, இ – 5, ஈ – 2
விடை : அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3
2. பிள்ளைக்கூடம் என்னும் கவிதை இடம்பெற்ற நூல் ___________
- சுடுபூக்கள்
- மறுபயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
விடை : கொடிவிளக்கு
3. பிள்ளைக்கூடம் என்னும் கவிதையை எழுதியவர் ___________
- இரா.மீனாட்சி
- சு.வில்வரத்தினம்
- மீ.ராசேந்திரன்
- இரா.மீனாட்சி
விடை : இரா.மீனாட்சி
4. இரா. மீனாட்சி படைத்துள்ள கவிதை நூல்
- கொடி விளக்கு
- வெள்ளைரோஜா
- தேன்மழை
- பெய்து பழகிய மேகம்
- சுடுமண் சிலை
விடை : கொடி விளக்கு
5. இரா. மீனாட்சி வாழ்ந்து வரும் இடம்
- விழுப்புரம்
- பாண்டிச்சேரி
- திண்டுக்கல்
- மதுரை
விடை : பாண்டிச்சேரி
VI. குறுவினா
1. இரா.மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
- நெருஞ்சி
- சுடுபூக்கள்
- தீபாவளிப்பகல்
- மறுபயணம்
- வாசனைப்புல்
- உதயநகரிலிருந்து
- கொடிவிளக்கு
2. பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்க வேண்டு என பிள்ளைக்கூடக் கவிதை கூறிகிறது?
- பிள்ளைகள் காலையில் மயிலுடன் நடக்கவேண்டும்
- மாமரக் குயிலுடன் கூவி இசைக்க வேண்டம்
- வண்ணத்துப்பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக்கவிதை கூறுகிறது.
3. இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக
- புதுச்சேரியில் “ஆரோவில்” என்னும் இடத்தில் இரா.மீனாட்சி வாழ்கிறார்.
- ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபட்டள்ளார்.
- இவர் 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.