பாடம் 4.4 தொல்காப்பியம்
கவிதைப்பேழை > 4.4 தொல்காப்பியம்
நமக்கும் கிடைக்கும் தமிழ் நூல்களில் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர் இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களை கொண்டுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடானார், சேனாவரடியார், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர். நச்சினார்க்கினியர், சிறப்புப்பாயிர உரை விளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது. |
சொல்லும் பொருளும்
- இக்கும் – நீக்கும்
- இழுக்கு – குற்றம்
- வினாயவை – கேட்டவை
இலக்கணக் குறிப்பு
- அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்
- நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
1. விடுத்தல் = விடு+ த் + தல்
- விடு- பகுதி
- த் – சந்தி
- தல் – தொழில்பெயர் விகுதி
2. அறிந்து = அறி + த்(ந்) + த் + உ
- அறி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
புணர்ச்சி விதி
1. இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி இழுக்க் + இன்றி என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இழுக்கின்றி என்றாயிற்று.
2. முறையறிந்து = முறை + அறிந்து
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி முறை + ய் + அறிந்து என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முறையறிந்து என்றாயிற்று.
பலவுள் தெரிக
தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை _________
- 9
- 3
- 27
- 2
விடை : 27
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- கேட்போன் – விணையாலணையும் பெயர்
- இசுக்கும், உரைக்கும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுகள்
பகுபத உறுப்பிலக்கணம்
கேட்டல் = கேள்(ட்) + ட் + அல்
- கேள் – பகுதி
- ட் – ஆனது விகாரம்
- ட் – சந்தி
- அல் – தொழிற்பெயர் விகுதி
புணர்ச்சி விதிகள்
ஆசாற்சார்ந்து = ஆசான் + சார்ந்து
- “ணனவல் லினம்வர டறவும்” என்ற விதிப்படி ஆசாற்சார்ந்து என்றாயிற்று.
IV. பலவுள் தெரிக
1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் ________
- இளம்பூரணர், பரிமேலழகர்
- மணக்குடவர், சேனாவரையர்
- இளம்பூரணர், சேனாவரையர்
- நச்சினார்க்கினியார், பரிமேலழகர்
விடை : நற்றிணை
2. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் ________
- 2
- 3
- 4
- 5
விடை : 3
3. தொல்காப்பியத்தில் வாழ்வியல் இலக்கணம் கூறுவது ________
- பொருளதிகாரம்
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- யாப்பதிகாரம்
விடை : பொருளதிகாரம்
4. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் ________
- கல்லாடனார்
- பேராசிரியர்
- இளம்பூரணர்
- சேனாவரையர்
விடை : பாரதம்பாடிய பெருந்தேவனார்
5. தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ________ இயல்களை கொண்டுள்ளது.
- 9
- 8
- 7
- 6
விடை : 9
6. கடனாக் கொளினே மடம்நனி இசுக்கும் இத்தொடரில் கடமை பொருள் உணர்த்தும் சொல்
- கொளின்
- மடம்
- இசுக்கும்
- கடன்
விடை : கடன்
7. பொருத்துக
1. இழுக்கு | நீக்கும் |
2. மடம் | சிறப்பு |
3.மாண்பு | குற்றம் |
4. இசுக்கும் | அறிவின்மை |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
8. இகக்கும் சொல்லின் பொருள்
- குற்றம்
- நீக்கும்
- கேட்டவை
- பாரத்தவை
விடை : நீக்கும்
9. நனிஇகக்கும் இலக்கணக்குறிப்பு
- தொழிற்பெயர்
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- பண்புத்தொகை
விடை : உரிச்சொற்றொடர்
9. தொல்காப்பியம் முதல் பதிப்பு _______ வெளியிடப்பட்டுள்ளது
- 1847
- 1835
- 1837
- 1845
விடை : 1847
குறுவினா
1. தொல்காப்பியம் குறிப்பு வரைக?
- இதன் ஆசிரியர் தொல்காப்பியர்
- தொல்காப்பியம் தமிழ்மொழியில் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் மிகப்பழமையான இலக்கணநூல்
- இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
- தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களை கொண்டுள்ளது.
2. தொல்காப்பியச் சிறப்பு பாயிர உரைவிளக்கப் பாடல், தெள்ளிதின் விளக்குவது யாது?
- நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பெருமை பொருந்திய மாணவர்கள் எவ்வாறு கற்க வேண்டும் என்பதனைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரை விளக்கப் பாடல் தெள்ளிதின் விளக்குகிறது
3. கற்றலின் சிறப்புற மாணவர் என்னென்ன செய்வீர்?
கற்றலில் சிறப்புற மாணவர், ஆசிரியரிடம் உலக வழக்கு, நூல் வழக்கு குற்றம் நீங்கக் கற்பர். உயர்சிந்தனை உயடையவர்களுடன் கலந்து உரையாடிப் பயிற்சியும் பெறுவர். தம் ஐயங்களை ஆசிரியர்களிடம் வினவித் தெளிவு பெற்று, அவற்றை பிறருக்கு உணர்த்தியும் தெளிவு அடையச் செய்வர்.
4. மாணவர் பாடம் கேட்கும் முறைமை குறித்துச் தொல்காப்பியம் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக
மாணவர் அறியாமை இருள் நீக்குநெறி
- உலகவழக்கு, நூல் வழக்கு மொழி வழக்கு இலக்கணங்களை அறிதல் வேண்டும்.
- பாடங்களைப் போற்றிக் கற்றல், கற்றலின்போது கேட்டவற்றை மீண்டும் நினைத்தல் வேண்டும்.
- ஆசிரியரை நெருங்கிப் பொருந்தி இருந்து, கருத்துகளைக் கேட்டுத் தெளிவு அடைதல் வேண்டும்.
- உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்து, உரையாடிப் பயிற்சி பெறுதல் வேண்டும்.
- தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை வினாவாக எழுப்பித் தெளிவு பெறுதல் வேண்டும்.
- அவ்வாறு உணர்ந்த கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்தித் தெளிவு பெறச்செய்தல் வேண்டும்.
- இவையே பாடம் கேட்கும் மாணவர் அறியாமையை நீக்கும் நெறிமுறைகளாகும்
பாடம் கேட்கும் முறை
- பாடம் கேட்கும்போது, ஆசிரியர் கூறும் கருத்துகளை மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை கேட்டால், நூலைப் பிழையின்றிக் கற்கும் திறன் பெறுவர்; மும்முறை கேட்டால் பிறர்க்கு முறையாக எடுத்து உரைக்கும் ஆற்றலையும் பெறுவர்
- பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள் இந்நெறியை கடைபிடித்தால் அறியாமையிலிருந்து விலகிச் சிறப்புறுவர் எனத் தொல்காப்பியச் சிறப்பு பாயிர உரைவிளக்கப் பாடல் உணர்த்துகிறது.