Tamil Nadu 11th Standard Tamil Book ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Solution | Lesson 5.1

பாடம் 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

11ஆம் வகுப்பு தமிழ், ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பாட விடைகள் - 2022

கவிதைப்பேழை > 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

பலவுள் தெரிக

பொருந்தாதைத் தேர்க

அ) ஆனந்தரங்கர் எழுதி நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்.
இ) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள்கள் தேவைப்பட்டன.

  1. அ, ஆ
  2. ஆ, இ
  3. அ, இ
  4. ஆ, ஈ

விடை : ஆ, ஈ

2. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?

  1. மொழிபெயர்ப்பாளர்
  2. இந்தியாவின்பெப்பிசு
  3. தலைமைத் துவிபாஷி
  4. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

விடை : உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

குறுவினா

ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக?

  • கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்
  • நீண்ட நாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.

சிறுவினா

ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதி வழி எடுத்துக்காட்டுக

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது.
  • பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது
  • சினமுற்ற ஆற்காடு நவாப் தம் மூத்த மகனை அனுப்பிப் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டது.
  • தேவனாம் பட்டணத்தை கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப் பல வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்கக, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்.

நெடுவினா

“தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்” என்பதை நிறுவுக

காலப்பெட்டகமான நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும், அக்கால பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் வராற்ற்றுப் பேழையாகவும் உள்ளது. அந்த நாட்குறிப்பு நிகழ்வு, நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள், கிழமையோடு 12 தொகுதிகளாகள வெளிவந்துள்ளது.

காலப்பெட்டகமான நாட்குறிப்பு

அக்காலத்தில் நாணயம் அச்சடிக்க உரிமை பெற்றது. பிரெஞ்சு -ஆங்கிலப்படைகள் தங்களுக்கு இடையே நாடு பிடிக்கப்பட்டது. ஆற்காடு நவாப்பின் செயல்பாடுகள் முதலான அரசியல் நிகழ்வுகளையும் நாட்குறிப்பில் பதித்துள்ளார். 18-ம் நூற்றாண்டின் தமிழகத்தின் சமூகத்தில் நிலவிய பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பை பதிவு செய்துள்ளார்.

சமுதாய செய்தி

நீதி வழங்குதல் பல்வேறு காரணங்களுக்காக மரண தண்டணை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய அக்காலச் செயல்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வீடுகளில் திருடியவர்களைப் பிடித்துத் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கிலிட்டது. ஒருவருக்குத் காதறித்து,  ஐம்பது கசையடி கொடுத்து ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணகர் பலர் மூலம் கடல் வணிகம் செய்ததைத் தெளிவுபட எழுதியுள்ளார். ஐரோப்பியக் கப்பல்கள் ஆறு மாதம் பயணம் செய்து புதுவை வந்ததும், பீரங்கி முழங்கி வரேற்றதையும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பால் அறியமுடிகிறது.

வர்த்தகச் செய்தி

துணி வரத்தகம் செய்த முறை, புதுச்சேரியில் நாணயம் அச்சிட்ட செய்தி, 1742-ல் வீசிய பெங்காற்று, அதனால் மக்கள் பெற்ற துயர், வாடிய மக்களுக்கு ஒழுகரை கனகராயர் பெருஞ்சோறு அளித்தது, 1745-ல் கப்பல் வருகை இன்மையால் புதுவையில் ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடு, அதை நீக்க லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தது, மக்கள் அடைந்த மகிழ்ச்சி என, அனைத்தையும் பதித்துள்ளார். இவற்றை எல்லாம் நோக்கத் தம் நாட்குறிப்பை ஆனந்தரங்கர், தாம் வாழ்ந்த காலத்தின் நாகரிகப் புதையலாகப் பயன்பட வைத்துள்ளமை புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. 18-ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம் _________

  1. வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
  2. துய்ப்ளே நாட்குறிப்பு
  3. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  4. சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு

விடை : ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

2. நாட்குறிப்புகளின் முன்னோடியகாத் திகழும் “EPHEMERIDES” என்பது  ___________ .

  1. கிரேக்க குறிப்பேடு
  2. இலத்தீன் குறிப்பேடு
  3. ஆங்கிலக் குறிப்பேடு
  4. பிரெஞ்சுக் குறிப்பேடு

விடை : கிரேக்க குறிப்பேடு

3. “EPHEMERIDES” என்பதற்கு ___________ என்பது பொருள்.

  1. நான்கு நாளுக்கான முடிவு
  2. மூன்று நாளுக்கான முடிவு
  3. இரண்டு நாளுக்கான முடிவு
  4. ஒரு நாளுக்கான முடிவு

விடை : ஒரு நாளுக்கான முடிவு

4. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை ______

  1. வாஸ்கோடகாமா
  2. சாமுவேல் பெப்பிசு
  3. கீட்ஸ்
  4. ஜான்ரஸ்கின்

விடை : சாமுவேல் பெப்பிசு

5. ஆனந்தரங்கர் தமிழில் எழுதிய நாட்குறிப்பு ______ தொகுதிகளாக வந்துள்ளது.

  1. 8
  2. 10
  3. 12
  4. 14

விடை : 12

6. சென்னைக் கோட்டையை 1758-ல் முற்றுகையிட்டுத் தாக்கியது ______

  1. லல்லி
  2. துய்ப்ளே
  3. லெபூர்தொனே
  4. மகபூஸ்கான்

விடை : லல்லி

7. நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பெற்றது __________ 

  1. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கழகம்
  2. போர்ச்சுக்கீசிய கிழக்கிந்தியக் கழகம்
  3. ஆங்கில கிழக்கிந்தியக் கழகம்
  4. டச்சு கிழக்கிந்தியக் கழகம்

விடை : பிரெஞ்சு கிழக்கிந்தியக் கழகம்

8. __________ ஆண்டு பெருங்காற்று புதுச்சேரியை சூறையாடியது

  1. 1741
  2. 1736
  3. 1717
  4. 1745

விடை : 1745

9. அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர் எனக்கூறியவர்?

  1. உ.வே.சா
  2. வ.வே.சு.
  3. தனிநாயகம் அடிகள்
  4. மயூரம் வேதநாயகம்

விடை : வ.வே.சு.

10.  ஆனந்தரங்கன் கோவை நூலை எழுதியவர்

  1. அரிமதி தென்னகன்
  2. தியாகராய தேசிகர்
  3. பிரபஞ்சன்
  4. மயூரம் வேதநாயகம்

விடை : தியாகராய தேசிகர்

11. பொருத்துக

1. 480 காசு3 அல்லது 3.2 ரூபாய்
2. 60 காசுஒரு ரூபாய்
3. 1 பொன்1 பணம்
4. 1 வராகன்1/2 வராகன்
  1. 4, 1, 3, 2
  2. 4, 1, 2, 3
  3. 1, 2, 3, 4
  4. 1, 2, 4, 3

விடை : 4, 1, 2, 3

12.  ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் நூலை எழுதியவர்

  1. தியாகராய தேசிகர்
  2. மயூரம் வேதநாயகம்
  3. அரிமதி தென்னகன்
  4. பிரபஞ்சன்

விடை : அரிமதி தென்னகன்

குறுவினா

1. முகலாய மன்னர் கால நாட்குறிப்புப் பற்றி அறியும் செய்திகள் யாவை?

  • முகலாய மன்னர்களுள் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. ஒளரங்கசீப் ஆட்சியின் போது இம்முறை தடை செய்யப்பட்டது.

2. நாட்குறிப்பு என்றால் என்ன? அதன் மூலம் எது

  • ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையோ, பணிகளையோ பதிவு செய்யும் ஏடு நாட்குறிப்பு எனப்படும்.
  • இலத்தீன் மொழியின் மூலச்சொல்லான “டைஸ் என்பதில் உருவான “டைரியம்” என்பது “டைரி”க்கு மூலச்சொல் ஆகும்.

3. ஆனந்தரங்கள் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாக எவ்வகையில் திகழ்கிறது?

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது. அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் திகழ்கிறது.

4. ஆனந்தரங்கர் வாழ்வில் உயர்வு பெற்றதை விளக்குக

உழைப்பு, உண்மை, உறுதிமிக்க ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர் “துய்ப்ளே”யின் காலத்தில் தலைமைத் “துவிபாஷி”யாகப் பணியாற்றினார். பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராகும், அரசியில் செல்வாக்கு மிக்கவராகவும் ஆனந்தரங்கர் திகழ்ந்தது, வாழ்வில் பெற்ற உயர்வாகும்.

5. ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் எவற்றை பதிவு செய்துள்ளார்?

ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் தமிழ்நாட்டுப் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கைகய் முதலான கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைத் தம் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

6. ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்விற்கும் எவ்வெவற்றை குறிப்பிட்டுள்ளார்?

ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றை குறப்பிட்ட பின் செய்திகளை எழுதியுள்ளார்.

7. உ.வே.சா. பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக

  • மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார். இக்கல்விமுறை தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்னும் வகைமைக்குள் அடங்கும்
  • மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் உ.வே.சா. பயின்ற கல்விமுறை இம்முறையாகும்.

8. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் சிறப்பு யாது?

  • “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 12 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன.
  • ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றை குறப்பிட்ட பின் செய்திகளை எழுதியுள்ளார்.
  • ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பே இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • இவரின் நாட்குறிப்பு தென்னிந்தியாவின் 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகின்றன
  • சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழ்கின்றன.

9. ஆனந்தரங்கர் “இந்தியாவின் பெப்பிசு” என அழைக்கப்படக் காரணம் என்ன?

  • “உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் “சாமுவேல் பெப்பிசு” ஆவார்
  • இவர் ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றியவர்
  • இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளை இவர் நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இதுவே முதல் நாட்குறிப்பு
  • இவரைப் போல ஆனந்தரங்கரும் தம் கால நிகழ்வுகளை, நாட்குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இந் நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • எனவே இந்தியாவின் பெப்பிசு என ஆனந்தரங்கர் அழைக்கப்பட்டார்.

10. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி உ.வே.சா, மகாகவி பாரதியார் கூறியவை பற்றி எழுதுக

உ.வே.சா-வின் கருத்து

“நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரிசீல் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்பது உ.வே.சா-வின் கருத்து ஆகும்

மகாகவி பாரதியாரின் கருத்து

“அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்” என்பது மகாகவி பாரதியாரின் கருத்து

சில பயனுள்ள பக்கங்கள்