பாடம் 5.6 திருக்குறள்
கவிதைப்பேழை > 5.6 திருக்குறள்
கற்பவை கற்றபின்
1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளை கண்டுபிடிக்க
அ) | வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை |
ஆ) | இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்த்தாக்கப் பக்கு விடும் |
இ) | உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான் உள்ளியது உள்ளப் பெறின் |
விடை | வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை |
2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக
கொடி தவித்தைப் பாரி
அறிந்து கொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்து கொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தை படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்
அ) | இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து |
ஆ) | குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் |
இ) | இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைொல்லும் காழ்த்த விடத்து |
விடை | இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து |
3. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………… நினை
- முகக்குறிப்பை அறிந்தவரை
- எண்ணியதை எண்ணியவரை
- மதியால் கெட்டவரை
- சொல்லேர் உழவை
விடை : மதியால் கெட்டவரை
4. பொருள் கூறுக
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்
5. இலக்கணக்குறிப்பு தருக
அ) கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஆ) குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்
குறுவினா
1. மருத்துவத்தின் பிரிவுகளாக குறள் கூறுவன யாவை?
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் ஆகியன மருத்துவத்தின் பிரிவுகளாக குறள் கூறுகிறது.
2. படைக்கு பாதுகாப்பாக இருப்பவை எவை?
வீரம், மானம், முன்னோர் வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்ற நான்கும் பாதுக்காப்பாக இருப்பவை ஆகும்.
3. பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிட வேண்டும் என்னும் குறட்பாவை கூறுக
இளைதாக முள்மரம் கொல் களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
4. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
முன் உண்டது செரித்ததை அறிந்த, அடுத்து உண்டால் மருந்து என்று தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
சிறுவினா
1. உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாக தந்து விளக்குக
எடுத்துக்காட்டு
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
அணி விளக்கம்
உவமைக்கும், உவமேயத்திற்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.
பொருள் விளக்கம்
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்கின்ற வாழ்க்கையை பாதுகாப்பற்ற படகு என்றும், கொடுக்காமல் மறைக்கின்ற மனமே பாறை என்றும் உருவகப்படுத்தப் பட்டள்ளதால் இது உருவக அணியாகும்.
2. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழத்த இடத்து – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழத்த இடத்து
– இக்குறட்பாவில் பயின்று வரும் பிறிது மொழிதல் அணியாகும்
அணி விளக்கம்
ஒரு செய்யுளில் உவமையை மட்டும் கூறி, உவமேயத்தைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணியாகும்
பொருள் விளக்கம்
முள்மரம் சிறியதாக இருக்கும்போதே களைந்து விட வேண்டும். முதிர்ந்து விட்டால் வெட்டுபவரின் கையை வருத்தும். இந்த உவமையிலிருந்து, பகையை ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்து விடவேண்டும். முற்ற விட்டால் தீமை உண்டாகும் என்னும் உவமேயம் பெறப்படுகிறது. அதனால் இது பிறது மொழிதல் அணியாகும்
3. மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றி திருக்குறள் கூறுவன யாவை?
மருந்து
உண்டதும், செரித்தலும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை
மருத்துவர்
நோயையும், அதன் காரணத்தையும், அதை நீக்கும் வழியையும் ஆராயந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
நோயாளியின் வயதையும், நோயின் அளவையும், மருத்துவத்தின் காலத்தையும் ஆராயந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
மருத்துவம்
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் – என்று மருத்துவம் நான்கு வகையில் அடங்கும்.
நெடுவினா
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக
முன்னுரை
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கிறது. இத்தகு சிறப்புமிக்க திருக்குறளில் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நான் கருதும் சில அழுதக் குறப்பாவின் கருத்துகளை பின்வருமாறு காண்போம்.
எண்ணியதை எண்ணல்
எண்ணியதை எளிதில் அடைய வேண்டுமால் நாம் செய்ய் வேண்டிய செயலைப் பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
குறிப்புணர்வார்
முகக்குறிப்பில் அக்குறிப்பினை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கி கொள்வது நம் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும்
குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
வலிமையறிதல்
செயலின் வலிமையையும், தன் வலிமையையும், பகைவன் வலிமையையும், துணையாளர் வலிமையும் சீர்தூக்கி செயல்பட்டால் வெற்றி உறுதி
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
அளவறிந்து வாழ்க
தன்னிடம் உள்ள பொருளின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை உள்ளத போலத் தோன்றிக் கெடும். எனவே நாம் நமது பொருளின் அளவறிந்து வாழ வேண்டும்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்
இல்லாகித் தோன்றாக் கெடும்.
உலகத்தையே பெறுதல்
உரியகாலத்தில், பொருத்தமான இடத்தில் ஒரு செயலைச் செய்தால் உலகத்தையே பெறக்கருதினாலும் கிடைத்து விடும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
மருந்து
உண்டதும், செரித்தலும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியத்தில்லை. நம் வாழ்வு வசந்தமாகும்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
வலிமையறிதல்
செயலின் வலிமையையும், தன் வலிமையையும், பகைவன் வலிமையையும், துணையாளர் வலிமையும் சீர்தூக்கி செயல்பட்டால் வெற்றி உறுதி
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
அவா அறுத்தல்
பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்து போனல் இன்பம் இடைவிடாமல் வரும்
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
முடிவுரை
அறங்கூறம் நூல்களுள் தலையாய நூல் திருக்குறள். குறைந்த சொற்களில் சிறந்த கருத்துக்களை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. வாழ்வியல் கருத்துகளைக் கூறும் சிறப்பிற்குரிய திருக்குறள் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாகும். கற்படி வாழிவில் நிற்போம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து பாடலில் அமைந்துள்ள அணி
- சொற்பொருள் பின்வரு நிலையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- பிறிதுமொழிதல் அணி
- உருவக அணி
விடை: பிறிதுமொழிதல் அணி
1. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும் பாடலில் அமைந்துள்ள அணி
- சொற்பொருள் பின்வரு நிலையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- பிறிதுமொழிதல் அணி
- உருவக அணி
விடை: உருவக அணி
சிறுவினா
1. நாம் மகிழ்ச்சியில் கடையை மறக்கும்போது யாரை நினைக்க வேண்டுமென வள்ளுவர் சொல்கிறார்?
நாம் மகிழ்ச்சியில் கடையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைக்க வேண்டுமென வள்ளுவர் சொல்கிறார்.
2. எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்?
எண்ணியதை எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தால் எண்ணியதை அடைதல் என்பது எளிதாகும்
3. எவரை துணையாக்கி கொள்ள வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்
முகக் குறிப்பால் அகக்குறிப்பை அறிபவரை எதையேனும் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்.
4. கண் உரைப்பவை எவை?
பகை, நட்பு இரண்டும் கண் உரைப்பவை ஆகும்