பாடம் 6.2 ஆத்மாநாம் கவிதைகள்
கவிதைப்பேழை > 6.2 ஆத்மாநாம் கவிதைகள்
நூல்வெளி
மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட “ஆத்மாநாம்” தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். “காகிதத்தில் ஒரு கோடு” அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார். கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார். இவருடைய கவிதைகள் “ஆத்மாநாம் கவிதைகள்” என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப் பெற்றுள்ளன. |
குறுவினா
உணவும் உறக்கமும் அணி கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக
- காலையில் எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும்.
- அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்ப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்க வேண்டம்.
- உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
- சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
சென்ற = செல் (ன்) + ற் + அ
- செல் – பகுதி
- ல் “ன்” எனத் திரிந்தது விகாரம்
- ற் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
குளிர்ந்த = குளிர்+ த்(ந்) + த் + அ
- குளிர் – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
புணர்ச்சி விதிகள்
நூற்றுக்கணக்கு= நூறு + கணக்கு
- “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “நூற்று + கணக்கு” என்றாயிற்று.
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “நூற்றுக்கணக்கு” என்றாயிற்று.
நண்பனாயிற்று = நண்பன் + ஆயிற்று
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நண்பனாயிற்று” என்றாயிற்று.
நிழலிலிருந்து = நிழலில் + இருந்து
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நிழலிலிருந்து” என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. ழ என்னும் பெயரில் சிற்றிதழை நடத்தியவர்
- மீனாட்சி
- ரங்கராஜன்
- ராசேந்திரன்
- ஆத்மநாம்
விடை : ஆத்மநாம்
2. ஆத்மாநாம் இயற்பெயர்
- மீனாட்சி
- ரங்கராஜன்
- ராசேந்திரன்
- மதுசூதனன்
விடை : மதுசூதனன்
3. அணிலையும் புளிமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்
- மீனாட்சி
- ரங்கராஜன்
- ராசேந்திரன்
- ஆத்மநாம்
விடை : ஆத்மநாம்
4. ஆத்மநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு
- காகிதத்தில் ஒருகோடு
- கொடி விளக்கு
- இருண்ட விளக்கு
- பாண்டியன் பரிசு
விடை : காகிதத்தில் ஒருகோடு
குறுவினா
1. ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வதை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம் சிந்தனையைத் தூண்டியுள்ளார்?
2. அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது.
மலர்க் கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல்சரிவிலோ, சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.
சிறுவினா
1. கேள்வி என்னும் தலைப்பில் ஆம்மாநம் உணர்த்தும் செய்திகளை எழுதுக
- காலையில் எழுந்தும் இரை தேடத் துள்ளி ஓடும் அணி இரவு எங்கே உறங்குகிறது?
- மலர்கிளையாகிய படுக்கையிலா? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
- ஒன்றல்ல, நூற்றுக்கணக்கில் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான முகங்களுடனும் சிறுபிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும்!
- இவை உணவையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது ஆத்மாநாமின் “கேள்வி”க் கவிதைச் செய்தியாகும்.
2. புளியமர நிழலில் கேட்டதாக ஆதமாநாம் கூறுவன யாவை?
- சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து பேனாய்!
- அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா! என நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மநாம் கூறுகிறார்.
3. ஆத்மநாம் – குறிப்பு வரைக?
- மதுசூதனன் என்பது “ஆத்மாநாம்” என்பாரின் இயற்பெயர்
- முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்
- 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
- “காகிதத்தில் ஒரு கோடு” என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு
- “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்
- கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.