Tamil Nadu 11th Standard Tamil Book குற்றாலக் குறவஞ்சி Solution | Lesson 6.3

பாடம் 6.3 குற்றாலக் குறவஞ்சி

11ஆம் வகுப்பு தமிழ், குற்றாலக் குறவஞ்சி பாட விடைகள்

கவிதைப்பேழை > 6.3 குற்றாலக் குறவஞ்சி

நூல்வெளி

தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பை புகழ்ந்து, அங்குள்ள குற்றால நாதரைப் போற்றப்பட்டது.

திரிகூட ராசப்பக் கவிராயரின் “கவிதைக்கீரிடம்” எனப் போற்றப்பட்டது.

மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருபத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.

திரிகூட ராசப்பக கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.

குறறாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

’திருக்குற்றாலநாதர் காேவில் வித்துவான்’ என்று சிறப்புப்
பட்டப் பெயர் பெற்றவர்.

குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.

சொல்லும் பொருளும்

  • கொத்து – பூமாலை
  • குழல் – கூந்தல்
  • நாங்கூழ் – மண்புழு
  • கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
  • வரிசை – சன்மானம்

இலக்கணக்குறிப்பு

  • மாண்ட தவளை – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

பெற்ற = பெறு (பெற்று) + அ

  • பெறு – பகுதி
  • பெற்று – ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
  • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

பயமில்லை =  பயம் + இல்லை

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பயமில்லை” என்றாயிற்று.

பலவுள் தெரிக

கீழுள்ளவற்றை பொருத்தி விடை தேர்க.

அ) விரியன்1) தண்டை
ஆ) திருகுமுருகு2) காலாழி
இ) நாங்கூழ்ப்புழு3) சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி4) பாடகம்
  1. 3, 4, 2, 1
  2. 3, 1, 4, 2
  3. 4, 3, 2, 1
  4. 4, 1, 3 2

விடை : 3, 1, 4, 2

சிறுவினா

சிங்கி பெற்ற பரிசுப்பொருட்களாக குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு
  • கோலத்து நாட்டில் பெற்ற முக்கிட்ட தண்டை
  • பாண்டியனார் மகள் கொடுத்தபாடகம்
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • பெற்ற, இட்ட, கொடுத்த, கட்டிய – பெயரெச்சங்கள்
  • சொல்ல, கடித்து, சொல்லி, நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
  • சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • திருகுமுருகு – உம்மைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

நடந்தாய் = நட + த்(ந்) + த் + ஆய்

  • நட – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆய் –  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

தெளிந்த = தெளி + த்(ந்) + த் + அ

  • தெளி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

கொடுத்த = கொடு+ த் + த் + அ

  • கொடு – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

சொல்ல = சொல் + ல் + அ

  • சொல் – பகுதி
  • ல் – சந்தி
  • அ – வினையெச்ச விகுதி

கடித்து = கடி + த் + த் + உ

  • கடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

சொல்லி = சொல் + ல் + இ

  • சொல் – பகுதி
  • த் – சந்தி
  • இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

குண்டலப்பூச்சி = குண்டலம் + பூச்சி

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயரீறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “குண்டல + பூச்சி” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “குண்டலப்பூச்சி” என்றாயிற்று.

விரியன்= விரி + அன்

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “விரி + ய் + அன்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “விரியன்” என்றாயிற்று.

காலாழி= கால் + ஆழி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “காலாழி” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கீரிடம் என்று போற்றப்பட்ட நூல்

  1. குற்றாலக்குறவஞ்சி
  2. குற்றால மாலை
  3. குற்றாலக் கோவை
  4. நன்னகர் வெண்பா

விடை : குற்றாலக்குறவஞ்சி

2. முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………..

  1. காவடிச்சிந்து
  2. திருச்சாழல்
  3. திருமலை முருகன் பள்ளு
  4. குற்றாலக்குறவஞ்சி

விடை : குற்றாலக்குறவஞ்சி

3. நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ……………….

  1. பரணி
  2. கலம்பகம்
  3. காவடிச்சிந்து
  4. குறவஞ்சி

விடை : குறவஞ்சி

4. குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ……………….

  1. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
  2. வள்ளல் சீதக்காதி
  3. இராசராச சோழன்
  4. சென்னிகுளம் அண்ணாமலையார்

விடை : மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

5. திருகு முறுகு என்று சிங்கன் குறிப்பிடப்பட்டது

  1. கலாழி பீலி
  2. பாடகம்
  3. அணிமணிக்கெச்சம்
  4. முறுகிட்ட தண்டை

விடை : முறுகிட்ட தண்டை

6. அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை ……………….

  1. சமயநூல்கள்
  2. சிறுகாப்பியங்கள்
  3. சங்க இலக்கியங்கள்
  4. சிற்றிலக்கியங்கள்

விடை : சங்க இலக்கியங்கள்

7. கடவுளோடு மனிதர்களைப் பாடியவை

  1. சமயநூல்கள்
  2. சிறுகாப்பியங்கள்
  3. சங்க இலக்கியங்கள்
  4. சிற்றிலக்கியங்கள்

விடை : சிற்றிலக்கியங்கள்

8. பொருத்துக

1. குழல்அ. சன்மாணம்
2. நாங்கூழ்ஆ. பூமாலை
3. வரிசைஇ. சிலம்பு
4. கொத்துஈ. மண்புழு
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

9. குறத்திப்பாட்டு என வழங்கப்படுவது

  1. பள்ளு
  2. குறவஞ்சி
  3. தூது
  4. உலா

விடை : குறவஞ்சி

10. திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய நூல்களில் பொருந்தாது

  1. அந்தமும் ஆதியும்
  2. குற்றாலத்தின்மீது தலபுராணம் மாலை
  3. யகம அந்தாதி
  4. பிள்ளைத்தமிழ்

விடை : அந்தமும் ஆதியும்

குறுவினா

1. திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?

  • குற்றாலக் குறவஞ்சி
  • குற்றாலா மாலை
  • குற்றாலச் சிலேடை
  • குற்றாலப் பிள்ளைத்தமிழ்
  • குற்றால யமக அந்தாதி

2. சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?

  • சேலத்து நாடு
  • கோலத்து நாடு
  • பாண்டி நாடு
  • கண்டி நாடு

3. சிங்கி பெற்ற பரிசுப்பொருட்கள் நான்கினை கூறு

  • சிலம்பு
  • தண்டை
  • பாடகம்
  • காலாழி

சிறுவினா

1. குறவஞ்சி – பெயர்காரணம் வரையறு

  • குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்பாடல் நாடக இலக்கிய வடிவமாகும்.
  • பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன் மீது காதல் கொள்வாள்.
  • அப்போது வரும் குறவர் குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்
  • இவ்வகையில் அமைவது “குறவஞ்சி இலக்கியம்”. இதனை “குறத்திப் பாட்டு” எனவும் கூறுவர்

2. குற்றாலக் குறவஞ்சி – குறிப்பு தருக

  • சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும, இசைத்தமிழின் இனிமையையும், நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ் காப்பியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவது போன்ற அமைப்பு உடையது.
  • தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றால நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி “திருகுற்றாலக் குறவஞ்சி” என வழங்கப் பெறுகிறது. இது “கவிதைக்கீரிடம்” எனப் போற்றப்படுகிறது.

3. திரிகூட ராசப்ப கவிராயர் பற்றி குறிப்பு வரைக

  • திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.
  • திருக்குற்றாலநாதர் கோவிலில் பணிபுரிந்தார்
  • சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
  • குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் “வித்துவான்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.

சில பயனுள்ள பக்கங்கள்