Tamil Nadu 11th Standard Tamil Book திருச்சாழல் Solution | Lesson 6.4

பாடம் 6.4 திருச்சாழல்

11ஆம் வகுப்பு தமிழ், திருச்சாழல் பாட விடைகள்

கவிதைப்பேழை > 6.4 திருச்சாழல்

திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.

இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.

திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன.

இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.

இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள்.

‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது முதுமொழி.

திருச்சாழல் தில்லைக் கோவில் பாடப்பெற்றது.

ஜி.யு.போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

மாணிக்கவாசர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.

திருவாதவூரைச் சேர்ந்தவர்.

இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவாகும்.

சொல்லும் பொருளும்

  • காயில் – வெகுண்டல்
  • அந்தம் – முடிவு
  • அயன் – பிரமன்
  • மால் – விஷ்ணு
  • ஆலாலம் – நஞ்சு

இலக்கணக்குறிப்பு

  • சுடுகாடு, கெல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
  • நல்லாடை – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

உண்டான் = உண் + ட் + ஆன்

  • உண் – பகுதி
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஆன் –  ஆன்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

கற்பொடி =  கல் + பொடி

  • “லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” என்ற விதிப்படி “கற்பொடி” என்றாயிற்று.

உலகனைத்தும் = உலகு + அனைத்தும்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்ற விதிப்படி “உலக் + அனைத்தும்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உலகனைத்தும்” என்றாயிற்று.

திருவடி = திரு + அடி

  • “ஏனை உயிர்வழி வவ்வும்” என்ற விதிப்படி “திரு + வ் + அடி” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “திருவடி” என்றாயிற்று.

பலவுள் தெரிக

பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று

  1. சாழல்
  2. சிற்றில்
  3. சிறுதேர்
  4. சிறுபறை

விடை : சாழல்

சிறுவினா

தமிழகப் பெண்கள் பாடிக்கொண்ட விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்கலைப் பழிப்பது போல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவது போல் அந்த விடை இருக்கும்.

எ.கா.

  • சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்கு தாய் தந்தையும் இல்லை, இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்பது பழிப்பா வினை
  • எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகிவிடும் என்பது செயலை நியாயப்படுத்தும் விடை

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • அயன்மால் – உம்மைத்தொகை
  • கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

உண்டிலன் = உண் + ட் + இல் + அன்

  • உண் – பகுதி
  • ட் – இறந்தகால இடைநிலை
  • இல் – எதிர்மறை இடைநிலை
  • அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

அடைந்த = தெளி + த்(ந்) + த் + அ

  • அடை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

புலித்தோல் = புலி + தோல்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “புலித்தோல்” என்றாயிற்று.

தனையடைந்த = தனை + அடைந்த

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “தனை + ய் + அடைந்த” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தனையடைந்த” என்றாயிற்று.

தனியன் = தனி + அன்

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “தனி + ய் + அன்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தனியன்” என்றாயிற்று

நல்லாடை = நன்மை + ஆடை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + ஆடை” என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “நல்ல + ஆடை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நல்லாடை” என்றாயிற்று

தாயுமிலி = தாயும் + இலி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தாயுமிலி” என்றாயிற்று.

தேவரெல்லாம் = தேவர் + எல்லாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தேவரெல்லாம்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. திருவாசம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

  1. பெஸ்கி
  2. கால்டுவெல்
  3. ஜி.யு.போப்
  4. வீரமாமுனிவர்

விடை : ஜி.யு.போப்

2. சைவத் திருமுறைகளில் திருவாசம் ……………….. திருமுறையாக உள்ளது.

  1. எட்டாம்
  2. பத்தாம்
  3. பன்னிரண்டாம்
  4. பதினான்காம்

விடை : எட்டாம்

3. திருமங்கையாழ்வார் பாடியது ……………….

  1. திருச்சாழல்
  2. பெரிய திருமொழி
  3. நாட்டார் வழக்கியில்
  4. தேவாரம்

விடை : பெரிய திருமொழி

4. திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள்

  1. 65
  2. 12
  3. 14
  4. 51

விடை : 51

5. சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார்

  1. திருமங்கையாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. ஆண்டாள்
  4. திருப்பாணாழ்வார்

விடை : திருமங்கையாழ்வார்

6. சைவத் திருமறைகள்

  1. 14
  2. 12
  3. 10
  4. 8

விடை : 12

7. மாணிக்கவாசகர் இயற்றியுள்ள நூல்கள்

  1. திருவாசகம், தேவாரம்
  2. திருக்கோவையாா், தேவாரம்
  3. திருவாசம், திருக்கோவையார்
  4. திருவாசகம், திருப்புகழ்

விடை : திருவாசம், திருக்கோவையார்

8. பொருத்துக

1. காயில்அ. நஞ்சு
2. அந்தம்ஆ. வெகுண்டால்
3. அயன்இ. முடிவு
4. ஆலாலம்ஈ. பிரமன்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

9. திருவாசகம் என்பது _________ மீது பாடல்களின் தொகுப்பு

  1. திருமால்
  2. சிவபெருமான்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : சிவபெருமான்

10. திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்கள் எண்ணிக்கை

  1. 51
  2. 38
  3. 58
  4. 31

விடை : 38

10. திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்கள் எண்ணிக்கை

  1. 51
  2. 38
  3. 58
  4. 31

விடை : 38

11. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்

  1. சுந்தரர்
  2. பேயாழ்வார்
  3. சேக்கிழார்
  4. மாணிக்கவாசகர்

விடை : மாணிக்கவாசகர்

குறுவினா

1. சாழல் என்பதனை விளக்குக

  • சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு
  • இது ஒரு மொழி விளையாட்டு
  • ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால் “திருச்சாழல்” எனப்பட்டது.

2. சாழல் என்பதை எவவெவர் பயன்படுத்தியுள்ளனர்?

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திருச்சாழல் இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் இவ்வடியை பயன்படுத்தியுள்ளார்.

சிறுவினா

1. திருவாசகம் – குறிப்பு தருக

  • சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம்
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • “திருவாசகத்த்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப் திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளளார்.

2. மாணிக்கவாசகர் – குறிப்பு வரைக

  • மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர்
  • இவர் திருவாவூரைச் சேர்ந்தவர். எனவே “திருவாதவூரார்” எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.

சில பயனுள்ள பக்கங்கள்