Tamil Nadu 11th Standard Tamil Book ஆக்கப்பெயர்கள் Solution | Lesson 7.5

பாடம் 7.5 ஆக்கப்பெயர்கள்

11ஆம் வகுப்பு தமிழ், ஆக்கப்பெயர்கள் பாட விடைகள்

கவிதைப்பேழை > 7.5 ஆக்கப்பெயர்கள்

பலவுள் தெரிக

1. அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தும்

  1. அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
  2. அடையாறுப் பாலத்தின் சுவரில்
  3. அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
  4. அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

விடை : அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

2. ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க

  1. காவலாளி
  2. மேலாளர்
  3. உதவியாள்
  4. ஆசிரியர்

விடை : ஆசிரியர்

சிறுவினா

ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன ஏன்?

  • காலச்சூழலுக்கு ஏற்றவாறு பயன்பாட்டிற்காகப் பல்வேறு பெயர்களைப் புதிதாக ஆக்கிக் கொள்கிறோம்.
  • இடுகுறியாகவும், காரணமாகவும் ஆக்கப்படும் புதிய சொல் ஆக்கப்பெயராகும்
  • பெயர், வினைச்சொற்களுடன் காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி என்னும் விகுதிகள் சேர்த்து உருவாக்கப்படும் புதுச்சொற்கள், தமிழின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.

ஆக்கப்பெயர்கள் – கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. உடமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் ……………….. 

  1. தோட்டக்காரன்
  2. உறவுக்காரர்
  3. வீட்டுக்காரன்
  4. நாட்டுக்காரி

விடை : வீட்டுக்காரன்

2. உறவுப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் ……………….. 

  1. தோட்டக்காரன்
  2. உறவுக்காரர்
  3. வீட்டுக்காரன்
  4. நாட்டுக்காரி

விடை : உறவுக்காரர்

3. தொழில் பொருளில் வந்த ஆக்கப்பெயர் ……………….. 

  1. தோட்டக்காரன்
  2. தையல்காரன்
  3. வீட்டுக்காரன்
  4. நாட்டுக்காரி

விடை : தையல்காரன்

4. புதியதாக ஆக்கப்படும் சொல்லுக்கு ………………. எனப்பெயர்

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. ஆக்கப்பெயர்
  4. வினைப்பெயர்

விடை : ஆக்கப்பெயர்

5. பெயர்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ………………. விகுதிகள் என அழைப்பர்

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. வினைப்பெயர்
  4. ஆக்கப்பெயர்

விடை : ஆக்கப்பெயர்

6. ஆக்கப்பெயர்களில் தனிச் சிறப்புடையவை ……………….

  1. பகுதிகள்
  2. விகுதிகள்
  3. இடைநிலைகள்
  4. சந்திகள்

விடை : பகுதிகள்

7. பொருத்துக

ஆக்கப்பெயர்பெறும் விகுதி
உயர்நிலை பணிவோர்ஆளி
கடைநிலை பணிவோர்ஆளர்
இருபால் பொதுப்பெயர்ஆள்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

குறுவினா

1. தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகளை சான்றுடன் தருக

காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம், அகம் முதலியன தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்.

சான்று

  • காரன் – வண்டிக்காரன்
  • காரர் – சமையல்காரர்
  • காரி – வேலைக்காரி
  • ஆள் – பணியாள்
  • ஆளர் – ஆணையாளர்
  • ஆளி – குற்றவாளி
  • தாரர் – விண்ணப்பதாரர்
  • மானம் – கட்டுமானம்
  • அகம் – அலுவலகம்

2. பொருளக்கு முன்னோர் எவ்வாறு பெயரிட்டு வழங்கினர்?

உலகப்பொருள் அனைத்தும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. சில பொருள்களுக்கு காரணம் கருதியும் (காரணப்பெயர்), சில பொருள்களுக்கு காரணம் இன்றியும் (இடுகுறிப்பெயர்கள்) முன்னோர் பெயரிட்டு வழங்கினர்

சான்று

  • நாற்காலி, காற்றாடி (காரணப்பெயர்)
  • இலை, கல், மண் (இடுகுறிப்பெயர்கள்)

3. காரணப்பெயர்கள், இடுகுறிப்பெயராவதனை விளக்குக

காலப்போக்கில், பொருளின் மாற்றத்தால், அவை பயன்படும் நிலைக்கு ஏற்றவாறு சில நேரங்களில் காரணப்பெயர் இடுகுறிப்பெயராகி விடுகிறது.

சான்று : நாற்காலி

  • நான்கு கால்களோடு பின்புறம் சாயும் கைகளை வைத்துக் கொள்ளவும் வசதியாக மரத்தால் செய்யப்பட்ட இருக்கை, காரணம் கருதி “நாற்காலி” எனப் பெயரிடப்பட்டது.
  • இன்று நான்கு கால்கள் இல்லாத இருக்கைகளையும் “நாற்காலி” என அழைக்கிறோம்.
  • அதாவது கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர் இன்று இடுகுறியாக வழங்கப்படுகிறது.

4. ஆக்கப்பெயர் விகுதிகளின் தனிச்சிறப்பை எழுதுக

  • தமிழ்ச்சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது, எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகின்றன.
  • அவை தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
  • தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் ஆக்கப்பெயர்கள் மிகுதியாக வழங்குவதினைக் காணலம்.

சான்று

  • பூ விற்கும் பெண் – பூக்காரி (காரி)
  • நெசவு செய்பவர் – நெசவாளி / நெசவாளர் (ஆளி / ஆளர்)

5. ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? அவை யாவை?

ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை

  1. பெயருடன் சேரும் விகுதிகள்
  2. பெயருடன், வினையுடன் சேரும் விகுதிகள்
  3. வினையுடன், எச்சத்துடன் சேரும் விகுதிகள்

6. பெயருடன் சேரும் விகுதிகளை சான்றுடன் விளக்குக

காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர் என்பன பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்

பெயர்விகுதிஆக்கப்பெயர்
வண்டிகாரன்வண்டிக்காரன்
சமையல்காரர்சமையல்காரர்
வேலைகாரிவேலைக்காரி
பணிஆள்பணியாள்
ஆணைஆளர்ஆணையாளர்
குற்றம்ஆளிகுற்றவாளி
விண்ணப்பம்தாரர்விண்ணப்பதாரர்

7. பெயருடன், வினையுடன் சேரும் விகுதியை சான்று விளக்குக

“அகம்” என்ற ஆக்கப்பெயர் விகுதி பெயருடனும், வினையுடனும் சேர்ந்து வரும்

சான்று

  • அச்சகம் = அச்சு + அகம் (அச்சு என்னும் பெயருடன் வந்துள்ளது)
  • அலுவலகம் = அலுவல் + அகம் (அலுவல் என்னும் பெயருடன் வந்துள்ளது)

8. வினையுடன், எச்சத்துடன் சேரும் விகுதியை சான்று விளக்குக

“மானம்” என்ற ஆக்கப்பெயர் விகுதி வினையுடனும், எச்சத்துடன் சேர்ந்து வரும்

சான்று

  • அடமானம் = அடை+ மானம் (அடை என்னும் வினையுடனும் வந்துள்ளது)
  • கட்டுமானம் = கட்டு + மானம் (கட்டு என்னும் எச்சத்துடன் வந்துள்ளது)

9. காரன், காரி, கார் என்னும் ஆக்கப் பெயர் விகுதிகள் எவ்வெப்பொருளில் வரும் என்பதனைச் சான்றுடன் விளக்குக.

ஆக்கப்பெயர் விகுதிகளுள் “காரன், காரி, காரர்” என்பன உடைமை, உரிமை, உறவு (தொடர்பு), தொழில் (ஆளுதல்) என்னும் நான்கு பொருளில் வரும்.

சான்றுகாரன்
உடைமை – வீடுவீட்டுக்காரன்
உரிமை – தமிழ்நாடுதமிழ்நாட்டுக்காரன்
உறவு – சொந்தம்சொந்தக்காரன்
தொழில் – தையல்தையல்காரன்
காரிகாரர்
வீட்டுக்காரிவீட்டுக்காரர்
தமிழ்நாட்டுக்காரிதமிழ்நாட்டுக்காரர்
சொந்தக்காரிசொந்தக்காரர்
தையல்காரிதையல்காரர்

10. பணிபுரிவோரை பிரித்து அறிய உதவும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?

  • ஆக்கப்பெயர் விகுதிகளுள் “ஆளர்” என்பது உயர்நிலை பணிவோரையும்
  • “ஆள்” என்பது கடைநிலை பணிவோரையும்
  • “ஆளி” என்பது பணிபுரிவோருள் இருபாலரையும் குறிக்கும் ஆக்கப்பெயர்களோடு வரும்
சான்றுஆளர்ஆள்
உதவிஉதவியாளர்உதவியாள்
காப்புகாப்பாளர்காப்பாள்
மேல்மேலாளர்மேலாள்
சான்றுஆளி
நெசவுநெசவாளி
முதல்முதலாளி
தொழில்தொழிலாளி

இலக்கணத் தேர்ச்சி கொள்

பயிற்சி – 1

கீழ்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக

எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழவிற்கு காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணயில் போன்ற துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். நல்ல பண்பாளர்களைக் கூட்டாளி ஆக்கிக் கெண்டு உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ, முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

ஆக்கப்பெயர்கள்

ஆணையாளர்அழைப்பாளர்விண்ணியல்
மண்ணயில்பண்பாளர்உதவியாள்
கூட்டாளிமேலாளர்முதலாளி

பயிற்சி – 2

ஆக்கபெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைக்குரிய ஆக்கப்பெயர்களை கண்டறிக.

1. வேவு பார்த்திடுவான்;  ஓசையின்றி சென்றிடுவான் (ஆளி)

  • உளவாளி

2. அறிவைத் தேடிப் போகுமிடம்;  உலகம் அறிய உதவுமிடம் (அகம்)

  • நூலகம்

3. வந்தால் மகிழ்ச்சி இது;  உழைத்தால் கிடைக்கும் இது (மானம்)

  • வருமானம்

4. வேட(ஷ)ம் போட்டவன்;  வேடதாரிப் பட்டம் வாங்கியவன்? (தாரி)

  • பட்டதாரி

5. அளந்து அளந்து கொட்டிடுவான்;  அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்)

  • கொடையாள்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

மயிலை சீனி வேங்கடசாமி (1900 – 1980)

தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணரந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதி செய்திகளைப் புலப்படுத்திய விந்தைப் படைப்புகள். இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்தபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மை கொண்ட அவர்தம் கட்டுரைகள் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள் அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய “களப்பிரர் காலத் தமிழகம்” என்னுமு் ஆய்வு  நூல் இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தை செப்பனிட்டது.

நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர் தன்னுணர்வால் உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளை செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியில் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்பு கொண்டவர். அவருக்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு “தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்னும் பட்டமளித்துப் பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் போன்ற பல நூல்களால் தமிழ் ஆய்வு வராற்றில் மயிலை சீனி, வேங்கடசாமி அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1. மறந்தும் மறைந்தும் இது போன்ற இரண்டு தொடர்களை உருவாக்குக

(எ.கா.) படித்ததும் படைத்ததும்

  • கண்டதும் கொண்டதும்
  • உணர்ந்தும் உவந்ததும்

2. அழிந்த வரலாறு, புதிய வெளிச்சம் – அடிக்கோடிட்ட சொற்களின் எச்ச வகைகளை எழுதுக.

  • அழிந்த – தெரிநிலைப் (இறந்தகாலப்) பெயரெச்சம்
  • புதிய – குறிப்புப் பெயரெச்சம்

3. அழியாச் சிறப்பிடம் – இலக்கணக்குறிப்புத் தருக

  • அழியாச் சிறப்பிடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் (தொடர்)

4. முதலிய, முதலான – பொருளறிந்து சொற்றொடர் அமைக்க

  • முதலிய – உப்பு, மிளகாய், புளி முதலிய மளிகைப் பொருள்ளை வாங்கினார்
  • முதலான – தமிழ், ஆங்கிலம் முதலான மொழிகளை கற்றான்.

5. பத்தியில் உள்ள உயர்வு சிறப்பு உம்மையைக் கண்டு எழுதுக

  • பேராசிரியர்களும்
  • போற்றும்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மதுரைப்பல்கலைக் கழகம் ______ ஆம் தமிழ்ப் பேரவை செம்மல் விருது வழங்கியது

  1. 1979
  2. 1980
  3. 1981
  4. 1982

விடை: 1980

2. மறைந்து போன தமிழ்நூல்கள் என்ற நூலின் ஆசிரியர்

  1. உ.வே. சாமிநாதர்
  2. தனிநாயகம் அடிகள்
  3. மயிலை சீனி.வேங்கடசாமி
  4. மயூரம் வேதநாயகம்

விடை: மயிலை சீனி.வேங்கடசாமி

3. பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!
என்ற பாடலின் ஆசிரியர்

  1. கழயூரன்
  2. நாமக்கல் கவிஞர்
  3. சீனி.வேங்கடசாமி
  4. ஈரோடு தமிழன்பன்

விடை: ஈரோடு தமிழன்பன்

3. எப்போதும் மத்தாப்பு
கொளுத்தி விளையாடுகிறது
மலையருவி
என்ற பாடலின் ஆசிரியர்

  1. ஈரோடு தமிழன்பன்
  2. கழயூரன்
  3. நாமக்கல் கவிஞர்
  4. சீனி.வேங்கடசாமி

விடை: ஈரோடு தமிழன்பன்

தமிழாக்கம் தருக

Balu : Hi Velu, Good evening
Velu : Hi Balu. Good evening.
Balu : Yesterday you were watching the Republic day function the whole day.
Velu : Yes. I was touched by one award ceremony.
Balu : Which award?
Velu : Param vir Chakra award, highest award for army personnel.
Balu : Why were you touched?
Velu : Most of the awards were received by the wives of soldiers posthumously
Balu : Why? What do you mean by posthumous?
Velu : It means ‘after death’. Many soldiers had laid down their lives protecting the
border of our Motherland. They have sacrificed their lives to save our Country.
So that we can be free and safe.

பாலு : வேலு! மாலை வணக்கம்

வேலு : பாலு! மாலை வணக்கம்

பாலு : நீ நேற்று முழுவதும் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளைப் பார்த்தாயா?

வேலு : ஆமாம், அவற்றுள் விரு ஒன்று வழங்கி நிகழ்ச்சியில் நெகிழ்ந்து போனேன்.

பாலு : எந்த விருது?

வேலு : இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “பரமவீரர் சக்கர” விருதுதான் அது.

பாலு : எதனால் நெகிழந்து போனாய்?

வேலு : பெருமபாலன விருதுகள் வீரர்களின் இறப்பிற்கு பின் மனைவியலால் பெறப்பட்டது காரணம்.

பாலு : ஏன்? இறப்பிற்கு பின் என்றால்?

வேலு : அதற்கு “மரணத்திற்குபின் என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக வீரர்கள் பலர் தம் உயிரை ஈந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை நம் நாட்டைக் காத்தத் தியாகம் செய்துள்ளனர். அதனால்தான் நாம் எல்லோரும் இவ்வளவு சுதந்திரமாகவும பாதுகாப்பாகவும் வாழ முடிகிறது.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. எதிர் நீச்சல்

  • வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றை கடந்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும்

2. சொந்தக்காலில்

  • அடுத்தவர் உதவுவார் என்று எதிர்பாக்காமல் சொந்தக்காலில் நிற்பது வாழ்க்கையின் உயர்வுக்கு வழி வகுக்கும்.

3. தாளம்போடுதல்

  • மற்றவர்கள் கூறுகின்ற வாதங்களைப் புரிந்து கொள்ளாமல் தாளம்போடுதல் நம்மை ஆபத்தில் தள்ளிவிடும்.

4. மதில்மேல் பூனை

  • மேற்படிபிற்காக என்ன பாடத்தை எடுப்பது என்று தெரியாமல் மதில்மேல் பூனையாக விழித்தான்.

5. நிறைகுடம்

  • சான்றோர்கள் தன்னை வியந்து பேசினாலும் நிறைகுடம் தழும்பாமல் இருப்பது போல் அமைதியாக இருப்பர்.

6. கைதூக்கிவிடுதல்

  • ஆதரவற்றவர்களை அரவணைத்து அன்பு காட்டி  அவர்களை கைதூக்கிவிடுதல் விடுதல் வேண்டும்

7. கண்ணாயிருத்தல்

  • கல்வியல் கண்ணாயிருத்தல் ஒன்றே வாழ்வின் உயர்விற்கு அடிப்படையாகும்

8. அவசரக்குடுக்கை

  • நிதானமுடன் முடிவெடுக்கத் தெரிந்திடாமல் அவசரக்குடுக்கையாகச் செயல்பட்டால் அது நமக்கு ஆபத்தை கொண்டு வரும்

9. முதலைக்கண்ணீர்

  • ஏழைகள் துன்பத்தை கண்டு வருந்துவதாக பணக்காரார்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

10. கானல்நீர்

  • ஏழைகள் ஆனந்தமாக வாழும் வாழ்க்கை கானல்நீராகவே உள்ளது.

வரைபடம் கொண்டு விவரிக்க

நீங்கள் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழிதெரியாக ஒருவர், உங்களிடம் வந்து நூலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.

11ஆம் வகுப்பு தமிழ், ஆக்கப்பெயர்கள் பாட விடைகள் - 2021

நீங்கள் நகலகம் செல்ல வேண்டம் என்றால் இடதுபுறமுள்ள பவணந்தி தெருவில் செல்லுங்கள். தெருவின் முடிவில் மேலைத் தேர்தெரு வரும். அங்கு இடதுபுறம் திரும்பி நேரே சென்றால் சிறிது தொலைவில்  இடதுபுறம் அறம் வளர்த்த மாடத்தெரு பிரிவு வரும். அறம் வளர்த்த மாடத்தெருவில் நீங்கள் நேராகச் சென்றால் கீழைத் தேர்த்தெரு வரும். அறம் வளர்த்த மாடத் தெருவும், கீழைத தேரத்தெருவும் சந்திக்கும் இடத்தில் இடது புறம் உள்ளது நகலகம்

இலக்கிய நயம் பாராட்டுக

சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலம்
சுகம்தரும் உணர்ச்சியம் வேறுண்டோ?

பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?

இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்

நிழல்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.

– நாமக்கல் கவிஞர்

ஆசிரியர் குறிப்பு

ஈரோடு மாவட்டம் நாமக்கல் என்னும் ஊரில் வாழ்ந்தமையால் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்பெற்றார். இவர் சிறந்த கவிஞர், ஓவியர், கதையாசிரியர், தேசப்பற்றும் மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்ட களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.

பாடலின் பொருள்

உலகில் சுதந்திரம் தருகின்ற மகிழ்ச்சியை விட இனிய சுகம் தரும் உணர்வு வேறு ஏதேனும் இருக்கிறதா? வகிக்கின்ற பதவி கொடுக்கின்ற பெருமையையும், சேர்த்த செல்வத்தால் அனபவிக்குமும் இன்பமும் சுதந்திரத்திடன் ஒப்பிடும்போது தாழந்தவைதாமே? வாழ்வுக்கு இதம் தரும் அறச்செயல்களும், புகழுடன் வாழ்வது ஆகிய எல்லாம், சுதந்திரம் இருப்பதால் தானே நம்மால் அனுபவிக்க முடிகிறது? தினமும் நம்மை வருந்தும் துன்பங்களை நிமிர்ந்து நின்று எதிர்த்து விரட்ட, நிச்சயமாக நமக்கு சுதந்திரம் வேண்டும் அல்லவா?

மையக்கருத்து

சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனபிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுத்நதிரமே இன்றியமையாததது என்னும் மையக்கருத்தைக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

நயம்

எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமையக் கவிஞர் கூறியுள்ளது நயம் பயக்கிறது.

இச்செய்யுள், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். இச்செய்யுளில் சுதந்திரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே “இயல்பு நவிற்சி அணி” அமைந்துள்ளது.

தொடை நயம்

அடிதோறும் முதல் சீர்களில் (சுந்திரம், பம்தரும், இம்தரும், நிம்தரும் என்பவற்றில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து அடி எதுகை அமைந்துள்ளது.

சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவருவது சீர்மோனை (தம்தரும் – ணம்தரும், தம்தரும் – சையுடன், நிதம்தரும் – நிமிர்ந்துநின்)

இறுதிச்சீர் ஒன்றுவது இயைபுத்தொடை ஆகும். வேறுண்டா? கீழன்றோ? என்னும் சீர்களில் ஓசை இன்றி, இயையபுத் தொடை அமைந்துள்ளது. அவற்றின் ஓ என்னும் ஓசை படிப்பதற்கு இன்பளிக்கிறது.

மொழியோடு விளையாடு

சொல்லெடுத்து தொடர் அமைக்க

கீழுள்ள கட்டத்தினுள் நுழைந்து சொற்களை எடுத்த தேவையா சொற்களைச் சேர்த்தும் தொடரமைக்க (அடைபட்ட பகுதியில் உள்ள சொற்களை தவிர்க்கவும்

11ஆம் வகுப்பு தமிழ், ஆக்கப்பெயர்கள் பாட விடைகள் - 2021

  • மாணவர்கள் வகுப்பறையினுள் நுண்கலையும் கற்க வேண்டும்.
  • மாணவர்கள் வாசிபுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தவறினால் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது.
  • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்தல் கூடாது. செய்தால் வெளியேற்றம் செய்யப்படுவர்.
  • மாணவர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் வழிபாடு செய்தல் வேண்டும்.
  • மாணவர்கள் பட்டினியில் இருத்தல் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • மாணவர்கள் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் வேலையின்மையை ஒழிக்க வேலைவாய்ப்புத் தரும் கல்வியை பயில வேண்டும்.
  • மாணவர்கள் நல்ல சிந்தனைகளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
  • மாணவர்கள் விளையாட்டுத் திறனை வளர்க்க வேண்டும்

கலைச்சொல் அறிவோம்

  • உத்திகள் – Strategies
  • சமத்துவம் – Equality
  • தொழிற்சங்கம் – Trade Union
  • பட்டிமன்றம் – Debate
  • பன்முக ஆளுமை – Multiple Personality
  • புனைபெயர் – Pseudonym

கலைச்சொல் அறிவோம்

  • ஜீவா – வாழ்க்கை வரலாறு – கே.பால தண்டாயுதம்.
  • சொல்லாக்கம் – இ.மறைமலை

 

சில பயனுள்ள பக்கங்கள்