Tamil Nadu 11th Standard Tamil Book ஒவ்வொரு புல்லையும் Solution | Lesson 8.2

பாடம் 8.2 ஒவ்வொரு புல்லையும்

11ஆம் வகுப்பு தமிழ், ஒவ்வொரு புல்லையும் பாட விடைகள்

கவிதைப்பேழை > 8.2 ஒவ்வொரு புல்லையும்

நூல் வெளி

சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய “இன்குலாப்” கட்டுரை, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர்.

அவருடைய கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

இவர் மரணத்திற்கு பின் இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

பலவுள் தெரிக

1. கூவும் குயிலும், கரையும் காகமும் தொடரில் இடம் பெற்ற மரபு ……………………

  1. பெயர்மரபு
  2. வினைமரபு
  3. ஒலிமரபு
  4. இவை மூன்றும்

விடை : வினைமரபு

குறுவினா

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும் தொடை நயங்களை எடுத்தெழுதுக

மோனை

முதலெழுத்து ஒன்றுபோல் வருவது மோனை

  • நீளும் – நீளாத, தொடரும் – தோழமை

எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவது எதுகை

  • நீளும் – நீளாத, தொரும் – பரும்

இயைபு

இறுதி எழுத்து ஒன்றுபோல் வருவது இயைபு

  • தொடரும் – படரும்
  • நீளும் – நீளாத, தொரும் – பரும்

முரண்

எதிர்ச்சொல் பயின்று வருவது முரண்

  • நீளும் x நீளாத

சிறுவினா

இன்குலாப் “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு ஆனால் நீளாத கைகளிலும், நெஞ்சைப் படரவிடவேண்டும்
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது. அது எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால் உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
  • செல்லி – வினையெச்சம்
  • விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • சமத்துவப்புனல் – உருவகம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. தெரிந்த= தெரி + த் (ந்) + த் + அ

  • தெரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. கடந்து = கட + த் (ந்) + த் + உ

  • கட – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

3. கடப்பேன் = கட + ப் + ப் + ஏன்

  • கட – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

4. அழைப்பேன் = அழை + ப் + ப் + ஏன்

  • அழை – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு =  பறவைகள் + ஒடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பறவைகளோடு” என்றாயிற்று.

2. சுவரில்லாத = சுவர் + இல்லாத

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “சுவரில்லாத” என்றாயிற்று.

3. சமத்துவப்புனல் = சமத்துவம் + புனல்

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “சமத்துவ + புனல்” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “சமத்துவப்புனல்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சாகுல் அமீது என்னும் இயற்பெயரை உடையவர் ………………..

  1. இன்குலாப்
  2. குருதேவ்
  3. மீரான் சாகிப்
  4. அப்துல் வகாப்

விடை : இன்குலாப்

2. இன்குலாபின் கவிதைகள், முழுமையாக ……………….. என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது

  1. உயிர்தெழும் காலத்துக்காக
  2. கனவுகள் + கற்பனைகள் =  காகிதங்கள்
  3. நேயர்விருப்பம்
  4. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

விடை : நேயர்விருப்பம்

3. மரணத்திற்குப்பின் இன்குலாப் உடலை அவர் விருப்பப்படி ………………. அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார்.

  1. சென்னை
  2. செங்கை
  3. தஞ்சை
  4. மதுரை

விடை : செங்கை

4. காக்கை குருவி எங்கள் ஜாதி எனக் கூறியவர்

  1. புரட்சிக்கவி
  2. மகாகவி
  3. கவிஞரேறு
  4. புலவரேறு

விடை : மகாகவி

4. கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் என்ற குரலுக்கு சொந்தக்காரர்

  1. இன்குலாப்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. அப்துல் ரகுமான்

விடை : இன்குலாப்

குறுவினா

1. யாருடைய என்ன தொடர் இன்குலாபின் நீட்சிக் குரலாக ஒலிக்கிறது?

மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

2. இன்குலாப் எவ்வாறு வாழ்ந்தார்?

தம் எழுத்துக்கள், எளிய மக்களுக்கானவை என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைகளிலும் நின்று, இன்குலாப் வாழ்ந்தார்.

3. இன்குலாப் இயங்கிய தளங்கள் யாவை?

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் வரிவான தளங்களில் இன்குலாப் இயங்கினார்.

சிறுவினா

1. தாம் எவற்றை எல்லாம் அழைக்க விரும்புவதாக இன்குலாப் கூறுகிறார்?

  • இன்குலாப், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்.
  • பறவைகளோடு சேர்ந்த, எல்லைகளைக் கடந்த பறக்க ஆசைப்படுகிறார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும் கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.

2. சமயம் கடந்த மானுடம் கூடவேண்டுமென்பதை இன்குலாப் வழி விளக்குக

  • போதி மரத்தின் நிழல் சிலுவை, பிறை ஆகியவை சமத்துவம் என்னும் பெருவெள்ளத்தில் கலந்திட வேண்டும். உலகின் எம்மூலையில் விசும்பல் கேட்டாம், எல்லார் செவிகளிலும் எதிரொலிக்க வேண்டும். கூண்டில் அடைபட்ட பறவை, சிறகு ஒடிந்தால் நம் சிறகிலும் குருதி வடிய வேண்டும்.
  • இவ்வகையில் சமயம் கடந்து மனித இனம் சேர்ந்திட வழி எற்பட வேண்டும். மூடி மறைக்காத முகங்களில் விழித்து “மனிதம்” என்னும் பொதுத்தன்மையைப் பாடவேண்டம் என இன்குலாப் விரும்புகிறார்.

3. கவிஞர் இன்குலாப் அறிவன யாவை?

  • “இன்குலாப்” என்னும் புனைபெயரில் சாகுல் அமீது கட்டுரை, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.
  • இன்குலாப் கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் மரணத்திற்கு பின் இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

சில பயனுள்ள பக்கங்கள்