பாடம் 8.4 மனோன்மணீயம்
கவிதைப்பேழை > 8.4 மனோன்மணீயம்
நூல் வெளி
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி 1891-ல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. இந்நூல் ஐந்து அங்கங்களும் இருபது களங்களும் கொண்டது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை “சிவகாமியின் சரிதம்”. பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் “மனோன்மணீயம்” 1885-ல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார் சென்னை மகாண அரசு இவருக்கு “ராவ்பகதூர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவருக்குப் பெருமை சேரக்கும் வகையில் தமிழக அரசு இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. |
சொல்லும் பொருளும்
- கடிநகர் – காவல் உடைய நகரம்
- காண்டி – காண்க
- பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
- ஆக இலா – குற்றம் இலாத
- தோட்டி – துறட்டி
- அயம் – ஆடு, குதிரை
- புக்கவிட்டு – போகவிட்டு
- சீரியதூளி – நுண்ணிய மணல்
- சிறுகால் – வாய்க்கால்
- பரல் – கல்
- முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
- அண்டயோனி – ஞாயிறு
- சாடு – பாய்
- ஈட்டியது – சேகரித்தது
- எழிலி – மேகம்
- நாங்கூழ் புழு – மண்புழு
- பாடு – உழைப்பு
- ஓவா – ஓயாத
- வேதித்து – மாற்றி
இலக்கணக்குறிப்பு
- கடி நகர், சாலத் தகும்– உரிச்சொற்றொடர்கள்
- உருட்டி – வினையெச்சம்
- பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
- இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
- பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
- பார்த்து பாரத்து, நில் நில், உழுது உழுது – அடுக்குத்தொடர்கள்
- வாய்க்கால் – இலக்கணப்போலி (முன் பின் தொக்கியது)
- செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
- மலையலை, குகை முகம் – உவமைத்தொகைகள்
- நெறுநெறு – இரட்டைக்கிளவி
- புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
- காலத்தச்சன் – உருவகம்
- ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
- புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
- தங்குதல் – தொழிற்பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
1. முளைத்த = முளை + த் + த் + அ
- முளை – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
2. ஏகுமின் = ஏகு + மின்
- ஏகு – பகுதி
- மின் – ஏவல் வினைமுற்று விகுதி
3. விடுத்தனை = விடு + த் + த் + அன் + ஐ
- விடு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அன் – சாரியை
- ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
4. சென்ற = செல் (ன்)+ ற் + அ
- செல் – பகுதி
- “ல்” “ன்” ஆனது விகாரம்
- ற் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
புணர்ச்சி விதிகள்
1. காலத்தச்சன் = காலம் + தச்சன்
- “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “கால + தச்சன்” என்றாயிற்று.
- “வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்” என்ற விதிப்படி “காலத்தச்சன்” என்றாயிற்று.
2. உழுதுழுது= உழுது + உழுது
- “உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும” என்ற விதிப்படி “உழுத் + உழுது” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உழுதுழுது” என்றாயிற்று.
3. பேரழகு = பெருமை + அழகு
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + அழகு” என்றாயிற்று.
- “ஆதிநீடல்” என்ற விதிப்படி “பேரு + அழகு” என்றாயிற்று.
- “இனையவும்” என்ற விதிப்படி (உகரம் கெட்டது) “பேர் + அழகு” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பேரழகு” என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை இவ்வடிகளில் பயின்று வருவது ………………….
- அடி எதுகை, அடி மோனை
- சீர் மோனை, அடி எதுகை
- அடி மோனை, அடி இயைபு
- சீர் மோனை, அடி மோனை
விடை : சீர் மோனை, அடி மோனை
2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகு
- நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகின்றேன்.
- இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
- இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
- இதழ்களில் பேசுகின்றேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
விடை : இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
குறுவினா
ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள் இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை இவ்வடி குறிப்பிடுகிறார்.
சிறுவினா
இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக
எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஒரறிவு உளயிர் வகையுள் சேர்ந்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கு அன்போடு நிழல் தருகிறது!
உணவாக இலைகளையும், காய்களையும், பழங்களையும் தருகிறது. தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்து கனிந்தபின், பறவைகளும், விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.
உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?
நெடுவினா
நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக
இலக்கே தூண்டுகோல்
தான் ஏற்ற செயலை முடிக்க அதிகாலையில் ஊர்புறத்தில் தனித்து இருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஒர் இலக்குத் தேவை என்பதை நடராசன் உணர்கிறான். அது உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.
புல்லின் செயல்பாடு
சிறுபுல்லும் பூங்கொத்தை உயரத்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரைக் காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் செல்லும் வகையில் முள் துரட்டியைக் கொடுத்தது. நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ முடியாது. ஆகவே வேறிடம் செல்க என அறிவுரை கூறுவதுபோல் செயல்டுபவதையும் சிந்திக்கிறான்.
அத்துடன் அப்புல்லின் ஆற்றல், அன்பு, முயற்சி முதலானவற்றைப் பாரத்துப் பார்த்துக் கண்களில் நீர் கசிய நிற்கிறான். நடராசன் அப்போது கூம் மொழிகளைக் கேட்கும்போது, நாமும் சிந்திக்க முடியாது,
நடராசன் கண்ட வாய்க்கால்
நாம் நீரோடும் வாய்க்காலைச் சாதாரணமாகக் கண்டிருப்போம் நடராசன் காணும் காட்சி வேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாற்றிட நடப்பதாகக் கூறகிறான். வாய்க்கால் தான் பட்டபாட்டை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான். அப்போது தான் நமக்கும் அத்தகைய எண்ண ஓட்டம் உருவாகியது.
வாய்க்கால் ஓடிஓடி நிரந்தரமாக உழைப்பதைக் கண்டு, அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்தபோது, அழாது செல்லுமாறு கூறி விடுத்து, “உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் நீக்க முடியாத அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால், வேறு என்ன பெருமை உண்டாக முடியும்?” எனக் கூறுகிறபோது, நமக்கும் உள்ளத்தில் அந்த உணர்வு தைக்கிறது.
புழு உணர்த்தும் செய்தி
புல்லின் செயலையும், வாய்க்காலின் பெரும்பாட்டையும் கொண்டு அறவூட்டிய நடராசன், அடுத்து நாங்கூழ்ப் புழுவைக் காண்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.
உலகில் உயர்தொழில் செய்யும் உழவர்களின் நண்பனாக நாங்கூழ்ப்புழு செயல்படுவதை விவரிக்கிறான். எம் மண்ணையும் நன் மண்ணாக்கி எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங்கருத்துமாக உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான்.
நடராசன் தனிமொழி தரும் விளக்கம்
தான் செய்யும் பணிக்கும் பாராட்டை எதிர்பார்க்காமல் நாங்கூழ்ப் புழு ஒளிந்து கொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய செயர். ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் பொதிந்து கிடப்பதை, நடராசன் தனிமொழி விளக்குகிறது.
வாழ்நாளில் எவரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை, இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சம்
- சென்ற – பெயரெச்சம்
- மண்கல், புல்புழு, இராப்பகல் – உவமைத்தொகைகள்
- விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
- ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம்
1. ஏகுவான் = ஏகு + வ் +ஆன்
- ஏகு – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆன் – ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
2. காண்போர் = காண் + ப் + ஓர்
- காண் – பகுதி
- ப் – இறந்தகால இடைநிலை
- ஓர் – பலர் பால் வினைமுற்று விகுதி
3. உயர்த்தி = உயர் + த் + த் + இ
- உயர் – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- இ – வினையெச்ச விகுதி
4. அழைத்து = அழை + த் + த் + உ
- அழை – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
5. பார்த்து = பார் + த் + த் + உ
- பார் – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
6. ஈர்த்து = ஈர் + த் + த் + உ
- ஈர் – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
7. அடைந்து = அடை + த் (ந்) + த் + உ
- அடை – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
8. எடுத்த = எடு+ த் + த் + அ
- எடு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
9. உருட்டி = உருட்டு + இ
- உருட்டி – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
10. உழைப்பேர் = உழை + ப் + ப் + ஓர்
- உழை – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- ஒர் – பலர்பால் வினைமுற்று விகுதி
11. திளைப்பர் = திளை + ப் + ப் + அர்
- திளை – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
1. நல்லூண் = நன்மை + ஊண்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + ஊண்” என்றாயிற்று.
- “முன்நின்ற மெய்திரிதல்” என்ற விதிப்படி “நல் + ஊண்” என்றாயிற்று.
- “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “நல்ல் + ஊண்” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நல்லூண்” என்றாயிற்று.
2. அடியொன்று = அடி + ஒன்று
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “அடி + ய் + ஒன்று” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “அடியொன்று” என்றாயிற்று.
3.குதித்தெழுந்து = குதித்து + எழுந்து
- “உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும” என்ற விதிப்படி “குதித்த் + எழுந்து” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “குதித்தெழுந்து” என்றாயிற்று.
4. மண்ணாயினும் = மண் + ஆயினும்
- “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “மண் + ண் + ஆயினும்” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மண்ணாயினும்” என்றாயிற்று.
5. மலையலை = மலை + அலை
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “மலை + ய் + அலை” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மலையலை” என்றாயிற்று.
6. தூசியிடை = தூசி + இடை
- “உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும” என்ற விதிப்படி “தூச் + இடை” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தூசியிடை” என்றாயிற்று.
புலவுள் தெரிக
1. காப்பிய இலக்கணம் முழுவதுமாய் நிரம்பிய நாடக நூல்
- மணிமேகலை
- இரணியன்
- நளதமயந்தி
- மனோன்மணீயம்
விடை : மனோன்மணீயம்
2. மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது
- மணிமேகலை
- இருண்டுவீடு
- இரகசியவழி
- சிலப்பதிகாரம்
விடை : இரகசியவழி
3. பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர்
- ஆலப்புழை
- மார்த்தாண்டம்
- கன்னியாகுமாரி
- திருநெல்வேலி
விடை : ஆலப்புழை
4. சென்னைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்
- திவான்பகதூர்
- கலைமாமணி
- ராவ்பகதூர்
- நாடகச்செம்மல்
விடை : ராவ்பகதூர்
5. சுந்தரனான் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
- ஆலப்புழை
- மார்த்தாண்டம்
- கன்னியாகுமாரி
- திருநெல்வேலி
விடை : திருநெல்வேலி
6. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை
- புல்லின் பரிவு
- சிவகாமியின் சரிதம்
- வாய்க்காலின் விசித்திரம்
- நாங்கூழ்புழு செயல்
விடை : சிவகாமியின் சரிதம்
7. தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்ததே இத்தொடரில் துறட்டி என்னும் பொருளுடைய சொல்
- தூசி
- தோட்டி
- சிக்கும்
- கொடுத்து
விடை : தோட்டி
8. யாரோ உன்னைப்போல் அனுதினம் உழைப்போர் அனுதினம் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டது
- வாய்க்கால்
- நாங்ககூழ்ப்புழு
- புல்
- நடராசன்
விடை : வாய்க்கால்
9. விசித்திரமான தொழில் செய்வது ……………….
- அலைகடல்
- மலை
- வாய்க்கால்
- புல்
விடை : வாய்க்கால்
10. சிறார் நீர் பிழைப்தற்கு ஏகுமின் யார் கூறியது
- அலைகடல்
- மலை
- வாய்க்கால்
- சிறுபுல்
விடை : சிறுபுல்
11. வாய்க்கால் இலக்கணக்குறிப்பு
- மருஉ
- உம்மைத்தொகை
- எண்ணுமை
- இலக்கணப்போலி
விடை : இலக்கணப்போலி
12. கடிநகர் இலக்கணக்குறிப்பு
- உயர்ந்த நகரம்
- காவல் உடைய நகரம்
- பெரிய நகரம்
- நீர்நிலை உடைய நகரம்
விடை : காவல் உடைய நகரம்
13. கூற்றினை ஆராய்க (மனோன்மணீயம்)
1. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்
2. லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்னும் நூலைத் தழுவி 1891-ல் எழுதப்பட்டது.
3. இந்நூல் ஏழு அங்கங்களும் இருபத்தெட்டு களங்களும் கொண்டது.
- மூன்றும் சரி
- 2, 3 சரி 1 தவறு
- 1, 2 சரி 3 தவறு
- 1, 3 சரி 2 தவறு
விடை : 1, 2 சரி 3 தவறு
14. பொருத்துக
1. அண்டயோனி | ஞாயிறு |
2. சாடு | பாய் |
3. பரல் | கல் |
4. எழிலி | மேகம் |
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
விடை : 1, 2, 3, 4
15. அயம் பொருள் தருக
- குதிரை
- குரங்கு
- ஆடு
- a மற்றும் c
விடை : a மற்றும் c
சிறுவினா
1. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
சிறு வாய்க்கால் நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது. அலை கடைலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும் தன் வலிமைக்குள் அடங்கி புல் புழு அனைத்தையும் கொண்டு வந்து காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.
மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து, ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்டபாடுகளைக் கூறி மேலும் இயன்றதைக் கொண்டு வருவதாக உறுதி கூறுகிறது.
நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும், உறுதியும் கொண்டு அனுதினமும் உழைக்கிறது என்று வாய்க்காலின் சிற்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2. மனோன்மணீயம் – குறிப்பெழுதுக
- தமிழின் முதல் செய்யுள் வடிவ நாடக நூல் மனோன்மணீயம்
- தமிழ் மொழியில் நாடக நூல் இல்லாக் குறைபோக்கப் பெ.சுந்தரனார், ஆங்கிலத்தில் “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவித் தமிழில் இயற்றினார்.
- தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, கதைக்களம் அமைத்து எழுதப்பட்ட இந்த நாடக நூலில் ஐந்து அங்கங்களும் இருபது களங்களும் உள்ளன.
- நூலின் தொடக்கத்தில் இறை வாழ்த்துடன் தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் “சிவகாமியின் சரிதம்” என்னும் கிளைக் கதையும் உள்ளது.
3. சுந்தரனார் குறித்து நீ அறிவன யாவை?
- திருவிதாங்கூரின் ஆலப்புழையில் “மனோன்மணீயம்” சுந்தரனார் 1885-ல் பிறந்தார்.
- திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினர்.
- சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு “ராவ்பகதூர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
- தமிழக அரசு திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை இவரின் பெயரில் நிறுவிப் பெருமை சேர்த்துள்ளது.
4. மனோன்மணீயத்தின் சிறப்புகளை எழுதுக?
- மனோன்மணீயம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது.
- மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வுகளை ஊட்டக்கூடியது
- தமிழன்னையின் நல்லணிகளுள் நாடகத்துறை சார்ந்த நூல்கள் இல்லை என்னும் குறைதீர்க்க உருவானது.
- நாடக நூலாயினும் காப்பிய இலக்கணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது.
- இயற்கையோடு இயைந்து, தோய்ந்து இணையற்ற இன்ப வாழ்வு நடத்தியவர் தமிழர் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை மனோன்மணீயத்தின் தனிச்சிறப்பாகும்.