பாடம் 2.4. முதல்கல்
கவிதைப்பேழை > 2.4. முதல்கல்
நூல்வெளி
உத்தம சோழன் (செல்வராஜ்) எழுதிய “முதல்கல்“ கதை பாடமாக உள்ளது. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இது இடம் பெற்றுள்ளது. உத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்; மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்; “கிழக்கு வாசல் உதயம்“ என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். |
1. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
முன்னுரை
உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மழையின் கோரம்
‘வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம்போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன்.
மழையின் கோரம்
காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான் . உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பாரத்தாலும் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடி தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்.
மருதனின் நல்யோசனை
மருதன் பயிர்கள் மூழ்காமலும் மொத் கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியை பிடுங்கி அரித்தான்.
மாரி வருதல்
மாரி இந்தச் சனியன் பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்தை எண்ணி மருதன் கோபம் அடைந்தான்
மருதனின் ஆக்கம்
இப்படியே போனல் ஊரே நாற்றம் எடுத்துவிடும் என்று ஏக்கத்தோடு செடிகளை பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளியப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான், அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.
மருதனின் புலம்பல்
வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான்
அல்லி வருதல்
முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.
மாமா நீ சொல்றத நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.
ஊர் மக்கள் வரல்
நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்ட வாய்க்காலிலி இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது.
முடிவுரை
“அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கம்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
என்பதற்கு ஏற்ப வாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராயந்து ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்பு நலன் பாராட்டத்தக்கது.
2. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புனர்
ஊர்ப் பொது மக்கள்
ஆலங்குளம்
தென்காசி
பெறுநர்
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்
மின்வாரிய அலுவலகம்
தென்காசி
ஐயா
பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக
வணக்கம்,
கடந்த மாதம் நான்காம் நாள் ஆலங்குளம் பகுதியில் வீசிய புயலால் மின் கம்பங்கள் முற்றிலும் சாயந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள் கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரி செய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்
ஊர் பொதுமக்கள்,
ஆலங்குளம்
உறைமேல் முகவரி
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்
மின்வாரிய அலுவலகம்
தென்காசி
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. உத்தம சோழன் அவர்களின் இயற்பெயர் …………………
- செல்வன்
- செல்வராஜ்
- சங்கரலிங்கம்
- செல்லத்துரை
விடை : செல்வராஜ்
2. முதல்கல் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
- தஞ்சை சிறுகதைகள்
- ஆரம்பம் இப்படித்தான்
- சிந்து டீச்சர்
- குருவி மறந்த கூடு
விடை : தஞ்சை சிறுகதைகள்
3. முதல்கல் சிறுகதையின் ஆசிரியர் ………
- புதுமைபித்தன்
- சுஜாதா
- ஜானகிராமன்
- உத்தமசோழன்
விடை : உத்தமசோழன்
4. சரியானதைத் தேர்வு செய்க
- மருதன் – குமுதம்
- காளியப்பன் – வேலையாள்
- பிரேம்குமார் – நாகூர்பிச்சை
- மாரிமுத்து – விவசாயி
விடை : பிரேம்குமார் – நாகூர்பிச்சை
5. சரியானதைத் தேர்வு செய்க
- 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
- அல்லி – மருதனின் அம்மா
- முல்லையம்மா – காளியப்பனின் தாய்
- காளியப்பன் – வசதியற்றவர்
விடை : 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
6.பொருத்துக
1. முல்லையம்மா | அ. வலைபோடுபவர் |
2. நாகூர் பிச்சை | ஆ. அல்லி |
3. மாரிமுத்து | இ. காளியப்பன் |
4. மருதன் | ஈ. பிரேம் குமார் |
விடை : 1- இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
7. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பிற்கு உரியவர்
- சோலை சுந்தரப் பெருமாள்
- செல்வராஜ்
- மேலாண்மை பொன்னுசாமி
- செல்லத்துரை
விடை : சோலை சுந்தரப் பெருமாள்
8. கிழக்கு வாசல் உதயம் என்னும் இதழை நடத்தி வருபவர்
- புதுமைபித்தன்
- உத்தமசோழன்
- சுஜாதா
- ஜானகிராமன்
விடை : உத்தமசோழன்
9. உத்தமசோழன் எழுதியுள்ள புதினங்களில் பொருந்தாதது
- தொலைதூர வெளிச்சம்
- கசக்கும் இனிமை
- கனல்பூக்கள்
- இனிப்பும் கசப்பும்
விடை : இனிப்பும் கசப்பும்
சிறுவினா
உத்தசோழன் – சிறுகுறிப்பு வரைக
- உத்தம சோழன் திருத்தறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்.
- மனித்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளர்.
- தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- கடந்த 12 வருடங்களாக “கிழக்கு வாசல் உதயம்” என்ற திங்களிதழை நடத்தி வருகிறார்.