பாடம் 3.3. கம்பராமாயணம்
கவிதைப்பேழை > 3.3. கம்பராமாயணம்
நூல்வெளி
கம்பராமாயணம் பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டிருக்கிறது. இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பகுதிகள் பாடமாக இடம்பெற்றுள்ளன. அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றிலிருந்து குகன், சடாயு, சவரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவை. இந்நூலை இயற்றியவர் கம்பர். இதற்குக் கம்பர் இராமாவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்றே அழைக்கப்படுகிறது. கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு. எழுதப்பட்ட காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம். |
சொல்லும் பொருளும்
- அமலன் – இராமன்
- இளவல் – தம்பி
- நளிர்கடல் – குளிர்ந்தகடல்
- துன்பு – துன்பம்
- உன்னேல் – எண்ணாதே
- அனகன் – இராமன்
- உவா – அமாவாசை
- உடுபதி – சந்திரன்
- செற்றார் – பகைவர்
- கிளை – உறவினர்
இலக்கணக்குறிப்பு
- உளது – இடைக்குறை
- மாதவம் – உரிச்சொற்றொடர்
- தாழ்கடல் – வினைத்தொகை
- செற்றவர் – வினையாலணையும் பெயர்
- நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
உறுப்பிலக்கணம்
தந்தனன் = தா (த) + த் (ந்) + த் + அன் + அன்
- தா – பகுதி (“த” எனக் குறுகியது)
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அன் – சாரியை
- அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
பொலிந்தான் = பொலி + த் (ந்) + த் + ஆன்
- பொலி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
அருங்கானம் = அருமை + கானம்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “அரு + கானம்” என்றாயிற்று
- “இனமிகல்” என்ற விதிப்படி “அருங்கானம்” என்றாயிற்று
பலவுள் தெரிக
1. உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார் – யார் யார்?
- சடாயு, இராமன்
- இராமன், குகன்
- இராமன், சுக்ரீவன்
- இராமன், சவரி
விடை : இராமன், சுக்ரீவன்
குறுவினா
1. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
- நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்
- “என் பொய்யான உலகப்பற்று அழிந்து; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்து கூறுகிறார்.
4. ‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ’ என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்
விளக்கம் :
குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் – என்பதே பொருத்தம்
சிறுவினா
1. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
குகன்
இராமன் காட்டிற்கு சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால் தான இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் நல்லவர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)
சுக்ரீவன்
- சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையை தேடி இலங்கை சென்றான்
- இராவணனைக் கொன்று வருவதாக கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.
- இராமன் மீது அவன் கொண்டிருந்த அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் ஐந்து பேராகும்.
- உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான்.
வீடணன்
- சீதையை கவரந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான்.
- இலங்கையை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
- இராமன் அவனை உடன் பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான்.
- குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.
2. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
இராமன் ஆற்றிய கடமைகள்
- இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு
- அவன் இராவணனோடு சண்டையிட்டு தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
- ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச்சடங்குகளை செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
- பார்ப்பவர்கள் வியக்கும் படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்தான்.
- தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
- இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தயாகக் கருதிய சடாயுவை தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.
நெடுவினா
1. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
குகனுடன் கொண்ட உறவு நிலை
- தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குன் தன்னைப் பிரிய விரும்பமின்மை என்பதனை உணர்ந்து “என் உயிர் அணையாய்” என்றான். “நீ என் உயிர் போன்றவன்” என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கிறேன்.
- குகனின் அன்பால் தன்னை அவனுடைய “பணியாளாய்” கருதும் உரிமையை இராமன் குகனுக்கு் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
சடாயுடன் கொண்ட உறவுநிலை
- தனது மனைவி சீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிரத் தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.
- தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் “மகனாய்” கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குத் கொடுத்தான்.
சுக்ரீவனிடம் கொண்ட உறவுநிலை
- தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.
- இராமனைக் கண்டதால்தான் பிறவி பயன் அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புகுரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும அன்பைக் காட்டினான் இராமன்.
வீடனிடம் கொண்ட உறவுநிலை
- தன் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாக வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.
- தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கிறான்.
- தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.
- இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெற வேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கிறானன் இராமன்.
இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமை வழங்கும் சகோதரனாய் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- தடக்கை – உரிச்சொற்றொடர்
- நளிர்கடல், இழிஅருவி – வினைத்தொகை
- நோற்கும் சவரி – வினையாலணையும் பெயர்
- தாவா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பொலிந்தான் – படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று
- வலிஅரக்கர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- நன்னுதல், இன்னுரை, அருங்கானம் – பண்புத்தொகைகள்
உறுப்பிலக்கணம்
தந்து = தா (த) + த் (ந்) + த் + உ
- தா – பகுதி (“த” எனக் குறுகியது)
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
தந்தேன் = தா (த) + த் (ந்) + த் + ஏன்
- தா – பகுதி (“த” எனக் குறுகியது)
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
1. இன்னுரை = இனிமை + உரை
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “இனி + உரை” என்றாயிற்று
- “இணையவும் பண்பிற்கு இயல்பே” என்ற விதிப்படி “இன் + உரை” என்றாயிற்று
- “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “இன்ன் + உரை” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “இன்னுரை ” என்றாயிற்று
2. நன்னுதல் = நன்மை + நுதல்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நுதல்” என்றாயிற்று
- “ணலமுன் றனவும் ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “நன்னுதல்” என்றாயிற்று
பலவுள் தெரிக
1. இளவல் உன் இளையான் இத்தொடரில் குறிப்பிடும் இளவல்
- குகன்
- இலக்குவன்
- சுக்ரீவன்
- வீடணன்
விடை : இலக்குவன்
2. சடாயு யாருடைய நண்பன்
- தயரதன்
- குகன்
- இராமன்
- அருணன்
விடை : தயரதன்
3. சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
- ஆரண்ய காண்டம்
- சுந்தரகாண்டம்
- அயோத்தியா காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
விடை : கிட்கிந்தா காண்டம்
4. ஓர் மூலம் இல்லான் யார்?
- குகன்
- இலக்குவன்
- வீடணன்
- இராமன்
விடை : இராமன்
5. நன்னுதலவள் என்னும் தொடர் ………………… எனப்பிரியும்
- நன்மை + நுதல் + அவள்
- நன் + னுதலாள்
- நல் + நுதலவள்
- நல்ல + நுதலவள்
விடை : ஆப்கானிஸ்தான்
6. துன்பு உளது எனின் அன்றோ, சுகம் உளது? யார், யாரிடம் கூறியது?
- குகன் இராமனிடம் கூறியது
- பரதன் குகனிடம் கூறியது
- இராமன் இலக்குவனிடம் கூறியது
- இராமன் குகனிடம் கூறியது
விடை : இராமன் குகனிடம் கூறியது
7. இடைமன்னும் எனக் குறிப்பிட்டது ……………
- துன்பம்
- பிரிவு
- சுகம்
- முடிவு
விடை : பிரிவு
8. ஆரண்யத்தில் இராம இலக்குவர் சந்தித்த இருவர் …………….
- குகன், சடாயு
- அனுமன், சவரி
- சடாயு, சவரி
- சவரி, சுக்ரீவன்
விடை : சடாயு, சவரி
9. தந்தனன் தாதை தன்னை இத்தொடரில் தாதை எனக் குறிப்பிடப்பட்டவன்
- குகன்
- சவரி
- சடாயு
- சுக்ரீவன்
விடை : சடாயு
10. இராமனை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்தவர் …….
- குகன்
- சவரி
- சுக்ரீவன்
- சடாயு
விடை : சவரி
11. அமலன், அனகன் என அழைக்கப்படுபவன்
- குகன்
- சவரி
- சுக்ரீவன்
- இராமன்
விடை : இராமன்
12. செற்றார் எதிர்ச்சொல் தருக
- கிளை
- பகைவர்
- எதிரி
- தொல்லை
விடை : கிளை
13. மாதவம் இலக்கணக்குறிப்பு
- இடைக்குறை
- உரிச்சொற்றொடர்
- வினையாலணையும் பெயர்
- வினைத்தொகை
விடை : உரிச்சொற்றொடர்
14. நுந்தை இலக்கணக்குறிப்பு
- இலக்கணப்போலி
- குழுஉக்குறி
- மரூஉ
- மங்கலம்
விடை : மரூஉ
குறுவினா
1. குகனிடம் இராமன் கூறியது என்ன?
- நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி
- சீதை உன் அண்ணி
- இந்நிலவுலகம் முழுவதும் உனக்குரியது
- நான் உன் ஏவலுக்கு பணிபுரியும் பணியாள்
2. குகன் இராமனுக்கு செய்த உதவி என்ன?
இராமன் கங்கையை கடந்து காட்டிற்குச்செல்ல நாவாய் கொடுத்து உதவியவன்
3. சடாயு யார்?
- கருடனின் அண்ணன் அருணனின் மகன்
- இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்து சண்டையிட்டுத் தன் உயிரத் துறந்தவன்
4. இராமாயணத்தில் சவரி செய்த செயல்கள் யாவை?
- சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்சீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள்.
- காப்பியத்தின் போக்கில் திருப்பத்தை உருவாக்கியவள்.
- இராமன், இலக்குவன் இருவருக்கும் விருந்தளித்து உபசரித்தவள்.
5. சவரியிடம் இராமன் வினவியது என்ன?
தன்னையே நினைத்து தவமிருந்த சவரியிடம் “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் வினவினாள்
6. வீடணன் ஏன் இராமனிடம் இடைக்கலமானான்?
- சீதையைக் கவரந்து தவறு என்று இராவணிடம் கூறினான் வீடணன்
- கோபம் கொண்ட இராவணன் வீடணனைக் கடிந்தான்.
எனவே இலங்கையை விட்டு வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்
7. இராமன் வீடணனுக்குக் கொடுத்த உரிமை பற்றிக் கூறியது யாது?
ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வது ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சியை பதினான்கு உலகங்களும், எனது பெயரும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமையாக” கொடுத்தேன் என்று இராமன் வீடணனிடம் கூறினான்.
8. இராமன் குறிப்பிடும் எழுவரின் பெயர்களை எழுதுக
இராம், இலக்குவனன், பரதன், சத்ருக்கன், குகன், சுக்ரீவன், வீடணன்
9. பாடப்பகுதியில் கம்பராமாயணத்தின் இடம் பெற்றுள்ள காண்டங்கள் யாவை?
- அயோத்தியா காண்டம்
- ஆரணிய காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- யுத்த காண்டம்
10. பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள காண்டங்கள் கம்பராமாயண பாத்திரங்களை குறிப்பிடுக
குகன், சடாயு, சவரி, சுக்ரீவன், வீடணன்
11. சவரி – குறிப்பு வரைக
- இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்கதியைும் கொண்டவள் சவரி
- சீதையைத் தேடி வரும் இராமனை, சக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள்
- இராமன் அன்பாளாகிய சவரிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினாள்
12. கம்பர் பற்றி குறிப்பு வரைக
- கம்பராமயணத்தை இயற்றியவர்
- இவரது கவி நலத்தின் காரணமாக “கம்பராமாயணம்” என அழைக்கப்படுகிறது.
- கம்பராமாயணத்திற்கு “இராமாவதாரம் எனப் பெயர் சூட்டினார்.
- இவரது காலம் 12-ம் நூற்றாண்டு
- கவிசக்கரவர்த்தி என மக்களால் போற்றப்படுபவர்.