Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 3.4 – உரிமைத் தாகம்

பாடம் 3.4. உரிமைத் தாகம்

12ஆம் வகுப்பு தமிழ், உரிமைத் தாகம் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 3.4. உரிமைத் தாகம்

நூல்வெளி

’உரிமைத்தாகம்’ என்னும் இச்சிறுகதை ‘பூமணி சிறுகதைகள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. பூமணி,

கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்.

பூ. மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகள்.

வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.

கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.

‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

கதைமாந்தர்கள்

முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்

முன்னுரை

ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அன்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி

தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல்

வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்கு பிறகு அண்ணனை விட்டுப் பிரிந்து  விடுகிறான். இந்நிலையில் ரூ.200 நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால் முத்தையன் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுிறாள். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையன் மனைவி தன் நகைகளை அடகு வைத்து கடனை அடைக்கச் சொல்கிறாள்.

முத்தையன் பங்காரு வீட்ற்கு செல்லுதல்

முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்தால் பத்திரத்தை தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறன். செயதியறிந்த பங்காரு முத்தையன் வெள்ளைச் சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியல் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதனை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.

அண்ணன் தம்பி இணையாதிருந்தால் ….

பங்காருசாமி நீதிமன்றத்திற்கு சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்கு கொடுத்த்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டுமுறை சென்று வந்தான்.  ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மனம் உடைந் வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.

மருத்துவமனையில் வெள்ளைச்சாமி

வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமான பத்திரத்தை திருப்பி கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினார்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “அஞ்ஞாடி” என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விரு பெற்றவர்

  1. பூமணி
  2. புதுமைபித்தன்
  3. பாரதியார்
  4. உத்தமசோழன்

விடை : பூமணி

2. பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு ………………

  1. அறுவடை, வரப்புகள்
  2. அறுப்பு, வயிறுகள்
  3. நொறுங்கல்கள், வாய்க்கால்
  4. அறுப்பு, வாய்க்கால்

விடை : அறுப்பு, வயிறுகள்

3. பூமணி எழுதிய புதினங்கள்

  1. வரப்புகள், வயிறுகள்
  2. அஞ்சாடி, அறுப்பு
  3. வரப்புகள், அஞ்ஞாடி
  4. பிறகு, வயிறுகள்

விடை : வரப்புகள், அஞ்ஞாடி

4. “கிரயம்” என்ற சொல்லின் பொருள்

  1. விலை
  2. ஒப்பந்தம்
  3. வாக்குறுதி
  4. வாடகை

விடை : விலை

5. உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்

  1. புதுமைபித்தன்
  2. பாரதிதாசன்
  3. பூமணி
  4. சுரதா

விடை : பூமணி

6. சரியானதை தேர்க

  1. கி.ரா. – கி.ராமராஜன்
  2. அறுப்பு – நாடகம்
  3. முத்தையன் – அல்லி
  4. கொம்மை – புதினம்

விடை : கொம்மை – புதினம்

7. பொருந்தாததை தேர்க

  1. உரிமைத்தாகம் – பூமணி
  2. மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி
  3. வாய்க்கால் – புதினம்
  4. வயிறுகள் – சிறுகதைத் தொகுப்பு

விடை : பிரிவு

8. பொருத்துக

1. பங்காருசாமிஅ. மூக்கம்மா
2. முத்தையன்ஆ. மேலூர்
3.வெள்ளைச்சாமிஇ. நம்பிக்கை கெளரவம்
4. கருவேலம்பூக்கள்ஈ. திரைப்படம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

9 பூமணி என்பாரின் இயற்பெயர்

  1. பூ, மணிரத்தினம்
  2. பூ. மாணிக்கவாசகர்
  3. பூவரசு மணிகண்டன்
  4. பூ. மணிகண்டன்

விடை : பூ. மாணிக்கவாசகர்

10. பூமணி எடுத்துள்ள திரைப்படம்

  1. கருவேலம்பூக்கள்
  2. கருத்தம்மா
  3. தண்ணீர் தண்ணீர்
  4. பொற்காலம்

விடை : கருவேலம்பூக்கள்

11. உரிமைத்தாகம் என்னும் சிறுகதை உள்ள தொகுப்பு

  1. அறுப்பு
  2. வயிறுகள்
  3. நொறுங்கல்கள்
  4. பூமணி சிறுகதைகள்

விடை : பூமணி சிறுகதைகள்

12. பொருத்துக

1. திருகைஅ. கிராம நிர்வாக அலுவலர்
2. குறுக்கம்ஆ. ஓலைப்பெட்டி
3. கடகம்இ. சிறிய நிலப்பரப்பு
4. கெராமுனுசுஈ. மாவு அரைக்கும் கல்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

சிறுவினா

1. பூமணி எழுதிய சிறுகதை தொகுப்புகள் யாவை?

அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன பூமணி எழுதிய சிறுகதை தொகுப்புகள் ஆகும்.

2. பூமணி எழுதிய புதினங்களை எழுதுக?

வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொமை ஆகியன பூமணி எழுதிய புதினங்கள் ஆகும்.

3.பூமணி – குறிப்பு வரைக

  • பூமணி கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்.
  • பூ.மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கி பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார்.
  • தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவராக பணி ஆற்றியவர்.
  • அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதை தொகுப்புகள்.
  • வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொமை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
  • கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
  • அஞ்ஞாடி என்ற புதினத்திற்காக 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்

 

சில பயனுள்ள பக்கங்கள்