பாடம் 4.2. இதில் வெற்றி பெற
கவிதைப்பேழை > 4.2. இதில் வெற்றி பெற
நூல்வெளி
இப்பாடப்பகுதி, கவிஞர் சுரதாவின் ‘துறைமுகம்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் ‘சுரதா’வின் இயற்பெயர் இராசகோபாலன். அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்; முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்; தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். |
பலவுள் தெரிக.
1. சுரதா நடத்திய கவிதை இதழ்
- இலக்கியம்
- காவியம்
- ஊர்வலம்
- விண்மீன்
விடை : காவியம்
2. விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு இத்தொடர் தரும் முழுமையான பொருள்:
- விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
- விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
- வெண்மதியும் முகிலும் வேறு வேறு
- விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
விடை : விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
குறுவினா
1. வசனம், கவிதை வேறுபாடு தருக.
வசனம்
எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.
கவிதை
எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிகென்று எல்லை வைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.
நெடுவினா
1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
கவிதை
- சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்ய எதுகை, மோனை அமைத்து எழுத வேண்டும்.
- அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
- சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.
கவிதைக்குரிய உறுப்புகள்
- எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
- அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல்.
- சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
- அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
- அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.
சிறந்த கவிதை
- கவிதைக்குரிய உறுப்புகளை வைத்து கவிதை எழுதும்போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.
- தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.
- செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகள் எப்போதும் புகழ் தங்கும்.
- இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
- வெண்மதி, செங்கதிர் – பண்புத்தொகைககள்
- செங்கதிரும் முகிலும், பனித்துளியும் மழையும், தேமாவும் புளிமாவும் – எண்ணுமைகள்
- வேறுவேறு – அடுக்குத்தொடர்
- எதுகைமோனை, அறம்பொருள் – உம்மைத்தொகை
- எழுதுவோர்க்கு – வினையாலணையும் பெயர்
புணர்ச்சி விதிகள்
1. புகழெங்கே = பகழ் + எங்கே
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “புகழெங்கே” என்றாயிற்று
2. எழுத்தெண்ணி = எழுத்து + எண்ணி
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “எழுத்த் + எண்ணி” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “எழுத்தெண்ணி” என்றாயிற்று.
3. அரும்பென்று = அரும்பு + என்று
- “உயிர்வரின்….. முற்றும் அற்று” என்ற விதிப்படி “அரும்ப் + என்று” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “அரும்பென்று” என்றாயிற்று.
4. பூவென்று= பூ + என்று
- “உயிர்வரின்….. ஏனைய உயர்வழி வவ்வும்” என்ற விதிப்படி “பூவ் + என்று” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “பூவென்று” என்றாயிற்று.
5. அடியளவு = அடி + அளவு
- “உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “அடிய் + அளவு” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “அடியளவு” என்றாயிற்று.
பலவுள் தெரிக.
1. சிறந்த படைப்புகள் உருவாகப் பெருந்துணையாக இருப்பது ………….
- கவிதை எழுதும் முறை
- யாப்பிலக்கண நெறி
- உரைநடை
- கல்வி
விடை : கல்வி
2. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களா அமைவது
- கவிதை எழுதும் முறை
- யாப்பிலக்கண நெறி
- உரைநடை
- கல்வி
விடை : உரைநடை
3. அடியின் கீழே அடியிருந்தால் வருவது
- சீர்
- தொடை
- அசை
- தளை
விடை : தொடை
4. இரண்டு சீரின் இடைவெளியில் வருவது
- எதுகை
- மோனை
- அசை
- தளை
விடை : தளை
5. எதுகை, மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது
- உரைநடை
- எதுகை
- மோனை
- அசை
விடை : உரைநடை
6. வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீர் தருவது
- நாள்
- எதுகை
- மோனை
- காசு
விடை : காசு
7. சுரதாவின் இயற்பெயர்
- கேபால்
- இராசகோபாலன்
- துரைகோபாலன்
- இராசகோபால்
விடை : இராசகோபாலன்
8. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்
- சுரதா
- இராமலிங்க அடிகள்
- மு.மேத்தா
- பாரதி
விடை : சுரதா
9. சுரதா என்பதன் விரிவாக்கம்
- சுதாரகுநாததாசன்
- சுப்புரத்தினதாசன்
- சுப்பிரமணியதாசன்
- சுப்பிரமணியரத்தினம்
விடை : சுப்புரத்தினதாசன்
10. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
- சுரதா
- சுப்பிரமணிய பாரதி
- பாதிதாசன்
- மு.மேத்தா
விடை : சுரதா
11. சுரதா நடத்திய இதழ் ……………………
- எழுத்து
- தென்றல்
- குயில்
- காவியம்
விடை : காவியம்
12. பொருத்துக
1. தொடைகள் | அ. இசைகள் |
2. தளைகள் | ஆ. தொடைகள் |
3. எழுத்துக்கள் | இ. பாக்கள் |
4. அடியின் கீழ் அடிகள் | ஈ. சீரின் இடைவெளியில் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
13. பொருத்துக
1. எரு | அ. ஆராய்ச்சி |
2. கேள்வி | ஆ. குளிர் |
3. அத்தி இரவு | இ. பயிர் |
4. கற்றால் விளையும் | ஈ. அறம் பொருள் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – ஈ |
14. பொருந்தாதை தேர்க
- பழம் – சாறு
- தண்ணீர் – ஏர்
- அடி – இரண்டு சீர் இடை
- பா – தொடை நன்கு அமை
விடை : அடி – இரண்டு சீர் இடை
15. பொருந்தாதை தேர்க
- கண் வேறு ; கல்விக் கண் வேறு
- புகழ் வேறு ; செல்வாக்கு வேறு
- வெணமதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல
- மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு
விடை : வெணமதியும், செங்கதிரும் முகிலும் வேறுவேறல்ல
குறுவினா
1. புண் வேறு ; வீரர்களின் விழுப்புண் வேறு ;
புகழ் வேறு ; செல்வாக்கு வேறு ; காணும் – இப்பாடல் வரிகளில் அமைந்துள்ள நயங்களை எடுத்து எழுதுக
சீர் மோனை – புண்வேறு – புகழ்வேறு
இயைபு – “வேறு” என்ற சொல் ஓசை நயத்துடன் சீர்களில் இடம் பெற்றுள்ளது.
2. “இதில் வெற்றி பெற” என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக
செடியில் பூத்த பூமீது வண்டு வந்து தங்கும்
3. புண் வேறு ; விழுப்புண் வேறு – விளக்கம் தருக
புண்
உடலில் காயத்தால் ஏற்படுவது. இது இயல்பாகவோ, விபத்து மூலமாகவோ நோய் மூலமாகவோ ஏற்படலாம்.
விழுப்புண்
விழுப்புண்ணும் உடலில் ஏற்படுவது தான். ஆனால் இது வீரத்தினை வெளிப்படுத்தும் எதிரியுடன் போரிட்டு பெற்ற புண்ணைக் குறிக்கும்.
4. சுரதா நடத்திய இதழ்கள் யாவை?
இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்
5. கவிஞர் சுரதா பெற்றுள்ள விருதுகள் யாவை?
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- பாரதிதாசன் விருது
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தல் இராசராசன் விருது
6. உரைநடை, கவிதை – வேறுபடுத்துக
உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது
7. அறம்பொருள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?
நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில் அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.
8. விண்வெளியில் இயங்குவனாகவச் சுரதா கூறுவன யாவை?
- வெண்மதி (வெண்ணிலவு)
- செங்கதிரோன் (சூரியன்)
- முகில் (மேகம்)
9. “வேறு” என்ற சொல்லை பயன்படுத்தி கவிஞர் கவிதை புனைத்துள்ள கவித்திறமையை விளக்குக
- வானம் வேறு, ஆனால் வானத்தல் இயக்கும் நிலவும், கதிரவனும் மேகமும் வேறு.
- மண் பல வகைப்படும். செம்மண், வண்டல் மண், கரிசல் மண் எனலாம். ஆனால் மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
- பனித்துளியும் நீர்தான் உள்ளது. மழைததுளியிலும் நீர்தான் ஆனால் இரண்டும் வெவ்வேறு.
- புண் என்றால் உடம்பில் ஏற்படும் காயம் தான், ஆனால் சாதாரணமாக வருவது புண் ; போலில் பெறுவது விழுப்புண்
- புகழ் என்பது செல்வாக்கு என்பதும் எல்லோருக்கும் நம்மைத் தெரியும் என்றே கூறப்பட்டாலும், புகழ் என்பது கல்வி, நற்செயலால் வருவது, ஆனால் செல்வாக்கு என்பது பொருளால் வருவது.
- காணும் கண் ; கல்விக்கண் வேறு – பார்க்கும் கண்ணால் உலகைப் பார்த்துக் கொள்ளலாம். கல்விக் கண்ணால் அறியாமை அகன்று நாம் அக ஒளியைப் பெறுகின்றோம்.
இவ்வாறு தான் கவிதையும் உரைநடையும் எழுதப்படுவனவாக இருந்தாலும் இரண்டின் நடையழகும் வேறு வேறாகும்.
10. கவிஞர் சுரதா – குறிப்பு வரைக
- இயற்பெயர் – இராசகோபாலன்
- பாரதிதாசன் மீது கொண்டபற்றுதலால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றியமைத்து கொண்டார். பிறகு சுரதா என மாற்றிக் கொண்டார்.
- மண் பல வகைப்படும். செம்மண், வண்டல் மண், கரிசல் மண் எனலாம். ஆனால் மண்ணில் சாய்ந்திருக்கும் மணல் என்பது வேறு.
- இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம் முதலிய இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
- தேன்மழை, துறைமுகம், மங்கையர்கரசி, அழுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களை படைத்தவர்.
- தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தல் இராசராசன் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்
11. “வரும்” என்ற வார்த்தையை பன்படுத்திக் கவிஞர் சுரதா எழுதியுள்ளவை யாவை?
- பழம் பழுத்திருந்தால் அதிலிருந்து சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலை மேற்கொள்ள ஏர்கள் வரும்.
- எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து அசைகள் வரும்; செய்யுளில் இரண்டு சீர்களின் இடையிலே சரியான தளைகள் வரும்.
- தளைகள் முறையாக அமைந்து அடிகள் வரும்; அடிகளை வரிசையாக அடிக்கியிருந்தால் தொடைகள் வரும்.
- தொடைகள் சரியாக அமைந்து இருந்தால் முறையான கவிதை உருவாகும்
12. கவிஞர் சுரதா ஒரு சிறந்த சொல்லேர் உழவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “இதில் வெற்றிபெற” என்ற கவிதையில் “விளையும்” என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கவிபுனைத்த திறமையை விளக்குக.
- எருவைப் பயன்படுத்தினால் பயிர் நன்றாக விளையும்;
- சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ஆராய்ச்சிகள் புதிது புதிகாக விளையும்;
- மாலை நேரத்திலும், இரவிலும் நன்றாக குளிர் விளையும்;
- மிகவும் நுட்பமாக எழுத்துக்களை எண்ணி, சிறந்த பொருள்களைப் புரிந்து நம் முன்னோர்கள் கற்று வந்தது போல கற்று வந்தோம் என்றால், நம் உள்ளத்தில் அறம், பொருள் விளையும்;
- மதிக்கத்தகுந்த அறிவினால் ஒருவனுக்கு புகழ் விளையும்.
சில பயனுள்ள பக்கங்கள்