பாடம் 4.5. பாதுகாப்பாய் ஒரு பயணம்
கவிதைப்பேழை > 4.5. பாதுகாப்பாய் ஒரு பயணம்
நெடுவினா
1. ‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்து நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே சாலை விபத்தில்லா தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும்
- 18 வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
- தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
- இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
- வாகனம் ஓட்டும் போது கைபேசியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருத்தல் வேண்டும்.
- காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.
வாகன ஓட்டிகளின் அலட்சியம்
அவசரம் என்று ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள்
- வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
- பயிற்சி இல்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
- தவறான தட்ப வெப்பநிலையும், தட்ப வெப்நிலைக்கு ஏற்ற வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
- இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை, சரக்குளை ஏற்றிச் செல்வது.
- தொடர்வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
- மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் அறிநது விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க
- பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளை கொடுத்தல் வேண்டும்.
- சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி செல்ல வேண்டும்.
- வேகமாகச் செல்லும் வண்யின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிரக்கப்பட வேண்டும்.
- பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.
- பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிநத்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.
இவ்வாறு வாகனம் ஓட்டும்போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையா உபயோகித்து சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோன் என்றால் “சாலை விபத்தில்லா தமிழ்நாடு” உருவாகும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. எத்தனை வயதிற்கு உட்பட்வர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை ………….
- 28
- 27
- 18
- 17
விடை : 18
2. சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
- 1317
- 1318
- 1319
- 1320
விடை : 1317
2. சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை …………
- 513
- 713
- 613
- 413
விடை : 413
4. சாலைப் போக்குவரத்து உதவிக்குரிய தொலைபேசி எண் …..
- 101
- 103
- 105
- 107
விடை : 103
5. ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
- ரூ.2000
- ரூ.4000
- ரூ.6000
- ரூ.8000
விடை : அறிவும் புகழும் உடையோர்
6. மது குடித்து விட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தணடத்தொகை
- ரூ.1,000
- ரூ.10,000
- ரூ.2,000
- ரூ.20,000
விடை : ரூ.10,000
7. முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
- பாரிஸ், 1909
- ஹாமில்டன், 1908
- மும்பை 1907
- சென்னை 1906
விடை : பாரிஸ், 1909
8. 18வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
- மோட்டார் வாகனச்சட்டம் – 1988
- மோட்டார் வாகனச்சட்டம் – 1965
- மோட்டார் வாகனச்சட்டம் – 2017
- மோட்டார் வாகனச்சட்டம் – 2016
விடை : மோட்டார் வாகனச்சட்டம் – 2017
சிறுவினா
1. மோட்டார் வாகனச் சட்டம் 2017-குறிப்பிடுவன யாவை?
- 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்பத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
- அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ. 5000 தண்டத்தொகை பெறப்படும்.
- மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
- மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ. 5000 தண்டத்தொகை கட்ட நேரும்.
- இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2000 தண்டத் தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
- தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் ரூ. 1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
- ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ. 2000 தண்டத்தொகை கட்ட நேரும்.
2. பன்னாட்டுச் சாலை அமைப்பு வடிவமைத்த சாலை விதிகளை கூறுக
பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் ’பன்னாட்டுச் சாலை அமைப்பு’ (International Road Congress) மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது. பல மொழிகளில் எழுதப்படும் அறிவிப்புப் பலகைகளை விட மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை உருவாக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவத்தைச் சுட்டும் குறியீடுகள், தடை செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் குறியீடுகள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய குறியீடுகள், சிறப்பு அறிவிப்புக் குறியீடுகள், திசை காட்டும் குறியீடுகள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன. அவையாவன:
- சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும் போக்குவரத்துக் காவலர்களின் சாலயை உத்தரவுகளுக்கும் ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
- நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையு ம் அச்சுறுத்தக் கூடாது.
- சாலைச்சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
- எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
- பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
- இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.
சில பயனுள்ள பக்கங்கள்