பாடம் 5.1. மதராசப்பட்டினம்
கவிதைப்பேழை > 5.1. மதராசப்பட்டினம்
பலவுள் தெரிக.
1) சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம் காரணம் –
- நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
- மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
- மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
- அ, ஆ, இ – அனைத்தும்
விடை :அ, ஆ, இ – அனைத்தும்
2) கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று தவறு, காரணம் தவறு
- கூற்று சரி, காரணம் சரி
விடை : கூற்று சரி, காரணம் சரி
3. பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு | 1) மாவலிபுரச் செலவு |
ஆ) பக்கிங்காம் கால்வாய் | 2) கல் கோடரி |
இ) பல்லாவரம் | 3) அருங்காட்சியகம் |
ஈ) எழும்பூர் | 4) கூவம் |
- 1, 2, 4, 3
- 4, 2, 1, 3
- 4, 1, 2, 3
- 2, 4, 3, 1
விடை : 4, 1, 2, 3
குறுவினா
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
- காலின் மெக்கனிசியின் தொகுப்புகளைக் கொண்டு 1869-ல் உருவாக்கப்பட்ட நூலகம்.
- ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.
சிறுவினா
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
- சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
- அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
- இந்திய சாரசனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
- ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
- தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
- இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.
நெடுவினா
“ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
முன்னுரை
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சென்னை
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
அவ்வகையில் இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்கின்றது. சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிந்தே வாழந்த்ததற்கான தடயங்களை கொண்டுள்ளன.
மானுட எச்சம்
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏ ற்ப டுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.(பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
பாடல் பெற்ற தலம்
திருவொற்றியூர், திருவான்மியூர் , மயிலாப்பூர், திருமுல்லைவாயில் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்களாக உள்ளன.
நீர்நிலைகளும் வடிகால்களும்
சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் மற்றும் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்னு தெரியவில்லை
நகரம் – உருவாக்கம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ (White’s Town) என்று அழைக்கப்பட்டது . வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ (Black’s Town) என அழைக்கப்பட்டது . கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின. வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையு ம் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயர்களின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.
கல்லூரிகள் – பள்ளிகள்
- 1715இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி
- 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி
- 1837இல் தொடங்கப்பட்ட கிறித்தவக் கல்லூரி
- 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி)
- 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்
- 1914இல் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி
போன்ற கல்லூரி பழமை வாய்ந்த அறிவின் நகரமாக விளங்குகிறது.
பண்பாட்டு அடையாளங்கள்
சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. அதன் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம். இநதிய சராசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்காளக தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றை விளங்குகின்றன.
நம் சென்னை (இன்றைய சென்னை)
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் இன்று சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. மின்னணுப் பொருள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.
முடிவுரை
இத்தகு பெருமை கொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் பெருமை கொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.
பலவுள் தெரிக.
1) ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
- காவிரிபூம்பட்டினம்
- புதுச்சேரி
- மதராசப்பட்டினம்
- கொற்கை
விடை : மதராசப்பட்டினம்
2) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது ……………
- திருப்பதி
- திருவனந்தபுரம்
- திருச்சி
- சென்னை
விடை : சென்னை
3) சென்னையில் ஓடக்கூடிய ………………………. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
- அடையாற்றுப்
- கொல்லையாற்றுப்
- கூவமாற்றுப்
- பாலாற்றுப்
விடை : கொல்லையாற்றுப்
4) பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை ……………… காலத்தில் அமைக்கப்பட்டது.
- முதலாம் மகேந்திரவர்மன்
- முதலாம் நரசிம்மவரம்மன்
- முதலாம் நந்திவர்மன்
- மூன்றாம் நந்திவர்மன்
விடை : முதலாம் மகேந்திரவர்மன்
5) இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய கல்கோடாரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
- திருவல்லிக்கேணி
- மயிலாப்பூர்
- பல்லாவரம்
- படவபழனி
விடை : பல்லாவரம்
6) கி.பி. 2-ம் நூற்றாண்டில் தாலமி என்பவரால்”மல்லியரபா” என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
- பல்லாவரம்
- திருவல்லிக்கேணி
- மயிலாப்பூர்
- படவபழனி
விடை : மயிலாப்பூர்
7) கூவம் ஆற்றை ……………….. என்றும் அழைத்தனர்
- திருவல்லிக்கேணி ஆறு
- மயிலாப்பூர் ஆறு
- படவபழனி ஆறு
- பல்லாவரம் ஆறு
விடை : திருவல்லிக்கேணி ஆறு
8) பொருத்துக.
1. வட சென்னை | அ. பாலாறு |
2. தென் சென்னை | ஆ. கூவம் |
3. மத்திய சென்னை | இ. அடையாறு |
4. தென் சென்னைக்கும் கீழ் | ஈ. கொல்லையாறு |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
9) பொருத்துக
அ. வட சென்னைப் பகுதிகள் | அ. மதராஸ் |
ஆ. தென் சென்னைப் பகுதிகள் | ஆ. மதசராசப்பட்டினம் |
இ. ஆங்கிலேயர்கள் | இ. சென்னைப்பட்டினம் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 -அ |
10) 1646-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சென்னை நகரின் மக்கள் தொகை
- 19,000
- 25,000
- 29,000
- 35,000
விடை : 19,000
11) சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1678
- 1668
- 1688
- 1958
விடை : 1688
12) பொருத்துக
1. சென்னை இலக்கிய சங்கம் | அ. 1869 |
2. கன்னிமாரா நூலகம் | ஆ. 1812 |
3. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் | இ. 1860 |
4. அண்ணா நூற்றாண்டு நூலகம் | ஈ. 2010 |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ, 4 – ஈ |
13) சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1678
- 1668
- 1688
- 1958
விடை : 1688
14) மயிலாப்பூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் _______ எனும் துறைமுகமாக சுட்டப்பட்டது
- மல்லியர்பா
- மயிலை
- மயிலைப்பட்டினம்
- மயிலைப்பாக்கம்
விடை : மல்லியர்பா
15) சென்னை மகாணத்தின் முதல் தலைவர்
- பிரான்சிஸ்டே
- எலி யேல்
- தாமஸ் பிட்
- சார்லஸ் மன்றோ
விடை : எலி யேல்
16) _________ ஆட்சிக் காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்
- பிரான்சிஸ்டே
- சார்லஸ் மன்றோ
- எலி யேல்
- தாமஸ் பிட்
விடை : தாமஸ் பிட்
17) சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1856
- 1857
- 1858
- 1859
விடை : 1857
17) இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் _________, மின்னணுப் பொருள்களை உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.
- கல்கத்தா
- பெங்களூர்
- சென்னை
- மும்பை
விடை : சென்னை
குறுவினா
1. சென்னை நகராட்சி, மகாணம் உருவான அமைப்பை விளக்குக.
நகராட்சி
1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 19,000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
மாகாணம்
ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர்.
‘எலி யேல்’ (Elihu Yale) அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து ‘தாமஸ் பிட்’ (Thomas Pitt) சென்னை மாகாணத்தின் தலைவரானார். இவரது ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்பர்.
2. மல்லியர்பா – விளக்குக
தொல்பழங்கால மானுட எச்சங்களை உணர்த்தும் பழமையான நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.( பொ .ஆ.) 2ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
3. சென்னை – ஓர் காட்டு மரம் விளக்கு
- இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை மதராசப்பட்டினம்.
- அது இன்று பரப்பரப்பான சென்னை மாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத காட்டு மரம் போல் தன் மனம் போன போக்கில் வளர்கிறது.
- அதனால் சென்னை ஓர் காட்டு மரம் என்பது சாலப் பொருந்தும்.
4. சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்படுக.
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.
5. சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்படுக.
- வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன.
- ஆங்கிலேயர் இரண்டையு ம் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர்.
- பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது.
- அது இன்று சென்னையாக உள்ளது.
6. மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கி மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ் சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகி்றது.
7. சென்னைக்கு இயற்கை கொடுத்த வடிகால் சிலவற்றை கூறுக
- வடசென்னை – கொற்றலையாறு
- மத்திய சென்னை – கூவம்
- தென்சென்னை – அடையாறு, பாலாறு
இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்
8. சென்னை நகரில் காணப்படும் கால்வாய்கள் சிலவற்றை கூறு
பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்
9. சென்னையில் அக்காலத்தில் எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன.
18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்;
10. பாதிதாசன் பக்கிங்காம் கால்வாயில் படகுப்பயணம் செய்தர்வர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம்
11. கூவம் நதிக்கரையில் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டவர் யார்
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்து விட்டு அருகில்
உள்ள கோவிலில் வழிபட்டவர்.
12. சென்னையில் கிழக்கிந்திய நிறுவனம் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றிருந்த கிராமங்கள் யாவை?
சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம்
13. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதியும், வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது?
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ (White’s Town) என்று அழைக்கப்பட்டது . வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ (Black’s Town) என அழைக்கப்பட்டது.
14. மதராசப்பட்டினம் என அழைக்கப்படும் பகுதி எது?
உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரமும்’ வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரமும்’ இணைந்த பகுதி மதராசப்பட்டினம் என்று அழைப்பர்.
15. கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் யாது?
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம் ஆகும்.
சிறுவினா
1. சென்னை தொன்மை வாய்ந்த நகரம் என்பதற்கு சான்று தருக.
- சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி, கொற்றலையாற்றுப் படுகை, பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி,
- கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் மானுட எச்சங்கள்
- இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.( பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு போன்றவை சென்னையின் தொன்மையை விளக்கும் சான்றாக அமைகிறது
2. சென்னை அறிவின் நகரம் என்பதற்கு சான்று தருக.
18-ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனம் தோன்றின
- 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’
- 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி
- 1837இல் தொடங்கப்பட்ட கிறித்தவக் கல்லூரி
- 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி)
- 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்
- 1914இல் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி
இவை மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரி விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி போன்ற பல்துறை சார்ந்த கல்லூரிகள் இங்குள்ளன.
3. இந்தோ – சாரசனிக் கட்டடக்கலை – விளக்குக
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்டது.
சான்று
- 1768இல் கட்டி முடிக்கப்பட்ட சேப்பாக்கம் அரண்மனை
- மத்திய தாெடர்வண்டி நிலையம்
- எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
- உயரநீதி மன்றம்
- ரிப்பன் கட்டடம்
- விக்டாேரியா அரங்கு
சில பயனுள்ள பக்கங்கள்