Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 5.4 – அகநானூறு

பாடம் 5.4. அகநானூறு

 12ஆம் வகுப்பு தமிழ், அகநானூறு பாட விடைகள்

கவிதைப்பேழை > 5.4. அகநானூறு

பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.

களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன.

அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்;

நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

சொல்லும் பொருளும்

  • வேட்டம் – மீன் பிடித்தல்
  • கழி – உப்பங்கழி
  • செறு – வயல்
  • கொள்ளை – விலை
  • என்றூழ் – சூரியனின் வெப்பம்
  • விடர – மலைவெடிப்பு
  • கதழ் – விரைவு
  • உமணர் – உப்பு வணிகர்
  • எல்வளை– ஒளிரும் வளையல்
  • தெளிர்ப்ப – ஒலிப்ப
  • விளிஅறி – குரல்கேட்ட
  • ஞமலி – நாய்
  • வெரீஇய– அஞ்சிய
  • மதர்கயல்– அழகிய மீன்
  • புனவன் – கானவன்
  • அள்ளல் – சேறு
  • பகடு– எருது

இலக்கணக் குறிப்பு

  • பெருங்கடல் – பண்புத்தொகை
  • உழாஅது – செய்யுளிசை அளபெடை
  • வெரீஇய – சொல்லிசை அளபெடை

உறுப்பிலக்கணம்

1. செய்த = செய் + த் + அ

  • செய் – பகுதி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்சவிகுதி

2. சாற்றி =  சாற்று + இ

  • சாற்று – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

பெருங்கடல் = பெருமை + கடல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + கடல்” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “பெருங்கடல்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. விளியறி ஞமலி இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?

  1. எருது
  2. குதிரை
  3. நாய்
  4. யாழி

விடை : நாய்

சிறுவினா

நெல்லின் நேரே வெண்கல் உப்பு இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.

உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது

விளக்கம்

உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி

“உப்புக்கு மாற்றாக நெல்லை தந்து உப்பினைப்
பெற்றுக் கொள் வாரீரோ! என்று கூவினார்”.

“நெல்லின் நேரே வெண்கல உப்பு எனச்”
“சேரி விலைமாறு கூறுலின் மனைய்”

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • சிறுகுடி, வெண்கல் – பண்புத்தொகைகள்
  • மடமகள் – உரிச்சொல் தொடர்
  • மதர்கயல் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. தெளிர்ப்ப = தெளிர் + ப் + ப் +அ

  • தெளிர் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்சவிகுதி

2. வீசி =  வீசு + இ

  • வீசு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி.

3. அழுந்திய = அழுந்து + இ (ன்) + ய் +அ

  • அழுந்து– பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை; “ன்” புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படுமெய்
  • அ – பெயரெச்சவிகுதி

புணர்ச்சி விதி

1. சிறுகுடி = சிறுமை + குடி

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “சிறுகுடி” என்றாயிற்று.

2. வெண்கல் = வெண்மை + கல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “வெண்கல்” என்றாயிற்று.

3. விளியறி = விளி + அறி 

  • இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “விளிய் + அறி” என்றாயிற்று.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “விளியறி” என்றாயிற்று.

6. பகட்டின் = பகடு + இன்

  • நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் ஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “பகட்டு + இன்” என்றாயிற்று.
  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “பகட்ட் + இன்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பகட்டின்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. மதர்கயல் மலைப்பின் அன்ன – என்பதில் கயல் என்னும் சொல்லின் பொருள்

  1. மீன்
  2. விழி
  3. விண்மீன்
  4. சங்கு

விடை : மீன்

2. பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்

  1. குறவர்
  2. ஆயர்
  3. பரதவர்
  4. எயினர்

விடை : பரதவர்

3. பரதவர் வாழும் இடம் ………..

  1. பெருங்கடல்
  2. சிறுகுடி
  3. இருங்கழி
  4. சேரி

விடை : சிறுகுடி

4) உப்பு விளையும் இடம் ……….

  1. பெருங்கடல்
  2. உப்பங்குழி
  3. விடரகுன்றம்
  4. இருங்கழி செறு

விடை : உரிச்சொற்றொடர்

5. நெல்லின் நேரே வெண்கல உப்பு என்பது யாருடை கூற்று

  1. பரதவரின் கூற்று
  2. உமணர் மகள் கூவியது
  3. தலைமகன் பாங்கற்கு உரைத்தது
  4. தலைவியின் கூற்று

விடை : தலைமகன் பாங்கற்கு உரைத்தது

6. உப்பு விளையும் களத்திற்கு …………….. என்று பெயர்

  1. பாலம்
  2. அளம்
  3. நிலம்
  4. களி

விடை : அளம்

7) பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்தி பொருளாக விளங்கியது.

  1. முத்து
  2. துணி
  3. உப்பு
  4. ஏலம்

விடை : உப்பு

8) அகநானூறு ………….. நூல்களுள் ஒன்று

  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு
  3. நீதி
  4. பதினெண்கீழ்க்கணக்கு

விடை : எட்டுத்தொகை

9. அகநானூறு ………….. பிரிவுகளை உடையது

  1. 4
  2. 6
  3. 3
  4. 5

விடை : 3

10. பொருத்துக

1. வேட்டம்அ. கானவன்
2. செறுஆ. மீன் பிடித்தல்
3. உமணர்இ. வயல்
4. புனவர்ஈ. உப்பு வணிகம்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

11. பொருத்துக

ஞமலிசேறு
பகடுவிலை
அள்ளல்சேறு
கொள்ளைஎருது
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

13. பொருத்துக

களியாற்றின் நிரை100 பாடல்கள்
மணிமிடை பவளம்120 பாடல்கள்
நித்திலக்கோவை180 பாடல்கள்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

குறுவினா

1. பரதவர்கள் தொழிலான வேட்டையாடுபவை, விளைபவிப்பவை எவை?

வேட்டையாடுபவை : கடல் பரப்பிலுள்ள மீன்கள்

விளைவிப்பவை : உப்பளங்களில் உழவுசெய்யாமல் உப்பு விளைவிப்பவர்.

2. உமணப் பெண்ணின் தோற்றத்தை விவரி.

  • அழகும், இளமையும் வாய்ந்தவள்
  • அவள் தம்கைகளில் ஆழகிய வளையல்கள் ஒலிக்க தெருவில் கைவீசி நடப்பவள்.

3. தலைமகன் பாங்கற்கு உரைத்த அகநானூற்றுப் பாடல் மூலம் விளக்குக.

வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை பாேக்கியது பாேல, தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ பாேக்குவதற்கு உரியவன்’ என்று தலைவன் பாங்கனிடம்  கூறினான்.

எருதைத் தலைவனுக்கும், தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தற்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.

4. உப்பங்கழி என்றால் என்ன?

கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு உப்பங்கழி என்பர்.

5. கல் உப்பை எவ்வாறு விளைவிப்பர்?

  • உப்பங்கழியில் உள்ள கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைப்பர்.
  • இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி ஆடைபோல் படியும் இந்த உப்பைச் கூட்டிச் சேகரித்து பக்குவப்படுத்தி விற்பனை செய்வர்.

6. உப்பளம் என்றால் என்ன?

கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.

சிறுவினா

1. அகநானூறு- குறிப்பு வரைக

  • அகநானூறு = அகம் + நான்கு + நூறு
  • அகம்சார்ந்த எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் உடையது.
  • களியாற்றின் நிரை (120), மணிமிடை பவளம் (180),  நித்திலக் கோவை (100) என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • பாலை – 1, 3, 5, 7; மருதம் – 6, 16, 26; குறிஞ்சி – 2, 8, 12, 18; நெய்தல் – 10, 20, 30; முல்லை – 4, 14, 24  என்ற முறையில் திணை அமைப்பு அமைந்துள்ளது.

2. அகநானூற்று பாடலில் வரும் நெய்தல் திணைக்குரிய கருப்பொருள், முதற்பொருள், உரிப்பொருள் விளக்குக

  • திணை :  நெய்தல்
  • பெரும்பொழுது : ஆறு பெரும் பொழுதுகள்
  • சிறுபொழுது : எற்பாடு

கருப்பொருள்

தெய்வம்வருணன்
மக்கள்பரதன், பரத்தியர்
புள் (பறவை)கடற்காகம்
விலங்குசுறாமீன்
ஊர்பாக்கம், பட்டிணம்
பூநெய்தல், தாழை
மரம்புன்னை, ஞாழல்
உணவுஉப்பும் மீனும் விற்றப் பொருள்
பறைமீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
யாழ்விளரி யாழ்
பண்செல்வழிப்பண்
தொழில்உப்பு உண்டாக்கல் விற்றல், மீன் பிடித்தல்
  • உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  • சான்று : “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்” எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல்

 

சில பயனுள்ள பக்கங்கள்