Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 6.1 – திரைமொழி

பாடம் 6.1. திரைமொழி

12ஆம் வகுப்பு தமிழ், திரைமொழி பாட விடைகள்

கவிதைப்பேழை > 6.1. திரைமொழி

திரைமொழி குறித்த இப்பாடம் திரு. அஜயன் பாலாவின் கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டு சுஜாதா, செழியன், அம்ஷன்குமார் முதலானோரின் திரைப்பார்வைகளை ஊடும்பாவுமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கலையும் வணிகமுமான திரைப்படத்தை அணுகுவதற்கான எளிய சூத்திரத்தைக் கற்பிப்பதாக இப்பாடம், பாடக்குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

உடல்மொழி, குறியீடுகள், கதை நகர்த்தல், திரை உரையாடல் என்று பல கூறுகளில் மரபுக் கலைகளிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த திரைக்கலையின் மொழியைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் தொடக்கம்தான் இப்பாடம்.

பலவுள் தெரிக

1. வேறுபட்டதைக் குறிப்பிடுக.

  1. அண்மைக் காட்சித் துணிப்பு
  2. சேய்மைக் காட்சித் துணிப்பு
  3. நடுக் காட்சித் துணிப்பு
  4. காட்சி மறைவு

விடை : காட்சி மறைவு

குறுவினா

1. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

  • பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக் கொணர உதவும் மற்றொரு கலை
  • பின்னணி இசைச்சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
  • இசை பாத்திரங்களின் மனக்கவலைகள், அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருக்கவேண்டும்.

சிறுவினா

திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

காட்சியின் முக்கியத்துவம்

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
  • திரைப்படத்தில் வசனம் இன்றி, காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்மூலம் கதை சொல்வார்கள்.

சான்று

  • முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீ ட்டைக் கொடுப்பாள்;
  • அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
  • “எண் 7, வீ ரையா தெரு…” என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடுவினா

திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக. 

திரைப்படத்துறை – ஒரு கலைபுதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்குமும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்க முடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.

சான்றாக கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தீர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக்கருவி, நடனகுழுக்குள் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையே நிகழ்வுகள் உள்ளன.

எல்லா கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனஙகள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர் தேவைப்படுகிறார்கள். வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக்கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும் தான் இது நடந்தேறி வருகிறது.

கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே, எனவே கலைகளின் சங்கமம் எனபது பொருத்தமானதே.

திரைப்டத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண் – பெண் நடனக்குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்து விடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை – கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையை கற்க முடியாது. பயிற்சியால் தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!

கூடுதல் வினாக்கள்…

பலவுள் தெரிக

1. சரியானக் கூற்றைக் கண்டறிக

i. 1895-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் “அதிசயம் பிறக்கிறது” என்ற தலைப்பில் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது.

ii. லூமியர் சகோதரர்களே இத்திரைப்படத்தை உருவாக்கினர்.

iii. இச்சகோதர்கள் வெளியிட்ட படங்களில் ஒன்று “இரயிலின் வருகை”

  1. i, ii சரி
  2. ii, iii சரி
  3. i, iii சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

2. அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்

  1. தாமஸ் ஆல்வா எடிசன்
  2. ஜார்ஜ் மிலி
  3. லூமியர் சகோதரர்கள்
  4. ஜார்ஜ் வெஸ்லி

விடை : தாமஸ் ஆல்வா எடிசன்

3. படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்

  1. தாமஸ் ஆல்வா எடிசன்
  2. ஜார்ஜ் மிலி
  3. லூமியர் சகோதரர்கள்
  4. ஜார்ஜ் வெஸ்லி

விடை : லூமியர் சகோதரர்கள்

4. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்

  1. தாமஸ் ஆல்வா எடிசன்
  2. லூமியர் சகோதரர்கள்
  3. ஜார்ஜ் வெஸ்லி
  4. ஜார்ஜ் மிலி

விடை : ஜார்ஜ் மிலி

5. சார்லி சாப்ளின் பிறந்த இடம்

  1. பாரிஸ்
  2. நியூயார்க்
  3. இலண்டன்
  4. தி ஹேக்

விடை : இலண்டன்

6. சார்லி சாப்ளின் தாயர் ஒரு

  1. நடிகை
  2. மேடைப்பாடகர்
  3. வழக்கறிஞர்
  4. மருத்துவர்

விடை : மேடைப்பாடகர்

7. சார்லி சாப்ளினைப் பேசாப் டநாயகனாக உருவாக்கிய தோற்றம்

  1. லிட்டில் டிராம்ப்
  2. லிட்டில் மாஸ்டர்
  3. லிட்டில் ஸ்டார்
  4. மாஸ்டர் மார்ஷல்

விடை : லிட்டில் டிராம்ப்

8. சார்லி சாப்ளின், வறுமைமிக்க தன் இளமை வாழ்வை …………… என்ற வெற்றிப் படமாக்கினார்.

  1. சிட்டி லைட்ஸ்
  2. மார்டன் டைம்ஸ்
  3. தி கிரேட் டிக்டேட்டடர்
  4. தி கிட்

விடை : தி கிட்

9. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்

  1. மார்டன் டைம்ஸ்
  2. சிட்டி லைட்ஸ்
  3. யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
  4. புனைடெட் மூவிஸ்

விடை : யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

10. சார்லி சாப்ளின் எதிரிகளின் வாய்களை அடைத்து எடுத்த பேசும் படம்

  1. மார்டன் டைம்ஸ்
  2. சிட்டி லைட்ஸ்
  3. யுனைடெட் மூவிஸ்
  4. யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

விடை : சிட்டி லைட்ஸ்

11. சார்லி சாப்ளின் மூன்று ஆண்டு உழைப்பில் வெளியிட்ட திரைப்படம்

  1. மார்டன் டைம்ஸ்
  2. புனைடெட் மூவிஸ்
  3. யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
  4. சிட்டி லைட்ஸ்

விடை : யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

12. ஹிட்லர் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்து காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்

  1. தி கிட்
  2. தி கோல்டு ரஷ்
  3. தி கிரேட் லீடர்
  4. தி கிரேட் டிக்டேட்டர்

விடை : தி கிரேட் டிக்டேட்டர்

13. சார்லி சாப்பிளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில்  வழங்கப்பட்ட விருது

  1. கோல்டன் குளோப்
  2. ஆஸ்கார்
  3. பிரவு டு ஆஃப் அமெரிக்கா
  4. கோல்டர் வேர்ல்டு

விடை : ஆஸ்கார்

14. சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுபடங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்

  1. சென்னை
  2. திருவனந்தபுரம்
  3. மதுரை
  4. திருச்சி

விடை : திருச்சி

15. 1977-ம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்

  1. கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு
  2. ஆந்திராவில் காக்கி நாடா
  3. கேரளத்தில் கோழிக்கோடு
  4. தமிழகத்தில் தென்காசி

விடை : கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

குறுவினா

1. திரைப்படத் துறையின் தோற்றம் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களைக் குறிப்பிடுக

  • தாமஸ் ஆல்வா எடிசன் (படப்பிடிப்புக்கருவி)
  • பிரான்சின் லூமியர் சகோதரர் (படப்பிடிப்புக்கருவி)
  • ஜார்ஜ் மிலி (கதை சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்)

2. திரைக்கதை – விளக்கு

  • படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைவது திரைக்கதை.
  • திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தி உருவாக்குவது.
  • இத்தகைய உழைப்பு உள்ள திரைக்கதை மக்கள் மனதில் நிற்கும்.

3. முப்பரிமாணக்கலை என்றால் என்ன?

திரைப் படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களி ல்
படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடிப்பது முப்பரிமாணக் கலை என்கிறோம்.

4. திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கும் போது நம் கண்கள்  தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வு செய்வது மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என அழைக்கிறோம்.

5. சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

பேருந்தைப் பிடிக்க , சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவு செய்வது  சேய்மைக் காட்சித்துணிப்பு எனப்படும்

6. நடுக்காட்சித்துணிப்பு என்றால் என்ன?

பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம், இங்குக் கண் ஆளை முழுதாகப் பார்த்தாலும் நம் கவனம், இடுப்புவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதை நடுக் காட்சித்துணிப்பு என்கிறோம்.

7. நடுக்காட்சித்துணிப்பு என்றால் என்ன?

வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம், அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது. இது அண்மைக் காட்சித்துணிப்பு என்கிறோம்.

8. மீ அண்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

காலிலிருந்து செருப்பைக் கழற்றி வாசலில் விடும்போது, கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்க்கிறது, இது மீ அண்மைக் காட்சித்துணிப்பு எனப்படும்

9. திரைப்படத்தின் காட்சி மொழி என்றால் என்ன?

ஒருமணி நேரப் பயணத்தை ஐந்தே காட்சித்துணிப்புகளாக இருபது நொடிகளில் நம்மால் பார்வையாளர்களிடம் உணர்த்துவது திரைப்படத்தின் காட்சிமொழி ஆகும்.

10. படத்தொகுப்பு என்றால் என்ன?

தேவையற்ற காட்சிகளை நீக்கி , தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பதே படத்தொகுப்பு எனப்படும்.

11. ஒற்றைக்கோணக் கலை என்றால் என்ன?

ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.

12. படத்தொகுப்பு என்றால் என்ன?

நேரேட்டர் என்பதன் பொருள் கதைசொல்லி என்பதாகும். திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக் கொண்டிருக்க திரைக்கு அருகே ஒருவர் ஒலி வாங்கியைப் படித்துக் கதை சொலுபவரை நேரேட்டர் என்பர். அவர் வந்து நின்றாலே அனைவரும் கைத்தட்டுவர்.

சிறுவினா

1. காட்சி ஆற்றல் என்பதை விளக்குக.

  • காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
  • திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
  • நாடகத்தில் விளக்கை அணைத்தும் திரையை இறக்கியும் காட்சிமாற்றத்தைக் காண்பிப்பார்கள்.
  • திரைப்படத்தில் வசனம் இன்றி, காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்மூலம் கதை சொல்வார்கள்.
  • முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீ ட்டைக் கொடுப்பாள்;
  • அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
  • காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுவர். இதைக் காட்சி மறைவு என்பார்கள்.
  • ஒரு காட்சி தொடங்கும்போது சிறிது சிறிதாக வெளிச்சம் கூட்டி முழுக்காட்சி வெளிப்படும். இதனைக் காட்சி உதயம் என்பர்.
  • தெரியத் தொடங்கும். இதனைக் கலவை/கூட்டு என்பார்கள்.
  • பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை அழிப்பு என்பார்கள்.

இவ்வாறு பல்வேறு உத்திகள் காட்சியில் கையாளப்படுகின்றன.

2. குலஷோவ் விளைவு விளக்குக.

  • முறையான காட்சிமொழியுடன் நல்ல கலையாக உருவாக்கும் படத்தில் பொய்களும் இருக்க முடியாது;
  • நம் மூளையை மழுங்கச் செய்யும் கவர்ச்சிகளும் இடம்பெறாது;
  •  இந்தக் கலைப்படைப்புகள் உண்மையைப் பேசும்;
  • அதன்மூலம் காண்பிக்கப்படும் வாழ்வியல், நம் அனுபவத்தை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும்.
  • அத்தகைய திரைப்படங்களைத்தான் கலைப்படங்கள் என்கிறோம்.

3. நல்ல திரைப்படம் என்பது எது – விளக்குக

  • மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன.
  • அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.
  • தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர்கள், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது.
  • காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும்.
  • இவ்வாறு காட்டுவதைக் ‘குலஷோவ் விளைவு” என்பார்கள்.

3. சாமிக்கண்ணு வின்சென்ட் சினிமாத் தொழிலில் வளர்ச்சிக்கு ஆற்றி பங்கினைக் கூறுக.

  • பிரெஞ்சுக்கார் டுபான் (Dupont) என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
  • திருச்சி, திருவனந்தபுரம், மதுரை, நகர்களில் முகாமிட்டு பட காட்டினார் .
  • பிறகு லாகூர், பெஷாவர், லக்னோ போன்றப் பகுதியில் படம் காட்டினார்.
  • 1909 இல் மதராஸ் திரும்பி அங்கே எஸ்பிளனேட்டில் கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
  • புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்