பாடம் 7.4. புறநானூறு
கவிதைப்பேழை > 7.4. புறநானூறு
இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும். புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது; பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது. முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார். இதன் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி. பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார். |
சொல்லும் பொருளும்:
- காய்நெல் – விளைந்த நெல்.
- மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
- செறு – வயல்
- தமித்து – தனித்து
- புக்கு – புகுந்து.
- யாத்து – சேர்த்து
- நந்தும் – தழைக்கும்
- வரிசை – முறைமை
- கல் – ஒலிக்குறிப்பு
- பரிவு – அன்பு
- தப – கெட
- பிண்டம் – வரி
- நச்சின் – விரும்பினால்
இலக்கணக்குறிப்பு
- காய்நெல் – வினைத்தொகை
- புக்க – பெயரெச்சம்
- அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உறுப்பிலக்கணம்
1. அறிந்து = அறி + த் (ந்) + த் + உ
- அறி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த்கால இடைநிலை;
- உ – வினையெச்ச விகுதி.
2. அறுத்து = அறு + த் + த் + உ
- அறு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்த்கால இடைநிலை;
- உ – வினையெச்ச விகுதி.
பலவுள் தெரிக
யானை புக்க புலம்போல இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
- தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது
- தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
- பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
- தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
விடை : தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது
குறுவினா
1) அறிவுடை வேந்தனின்நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
- அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
- அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போ் ஆகிவிடும்
2) செவியறிவுறூஉ துறையை விளக்குக.
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
சிறுவினா
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
உவமை:-
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
பொருள்:-
அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
உவமை:-
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்
பொருள்:-
அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
கூடுதல் வினாக்கள்….
இலக்கணக்குறிப்பு
- அறிந்து, அறுத்து புக்கு – வினையெச்சம்
- செழிக்கும் – “செய்யும்” என்னும் வினைமுற்று
- உண்ணான் – படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று
உறுப்பிலக்கணம்
1. புக்கு = புகு (புக்கு) + உ
- புகு – பகுதி. புக்கு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
- உ – வினையெச்ச விகுதி.
2. புக்க = புகு (புக்கு) + அ
- புகு – பகுதி. புக்கு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
- அ – பெயரெச்ச விகுதி.
3. உண்ணான் = உண் + ண் (ஆ) + ஆன்
- உண் – பகுதி
- ண் – சந்தி
- ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
- ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
1. நாட்கு = நாள் + கு
- “ளல வல்லினம் வரட்டற வும் ஆகும்” என்ற விதிப்படி “நாட்கு” என்றாயிற்று.
2. நெறியறிந்து = நெறி + அறிந்து
- “உயிர்வரின்… இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “நெறிய் + அறிந்து” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நெறியறிந்து” என்றாயிற்று
3. நிறைவில்லதும் = நிறை + இல்லதும்
- “உயிர்வரின்…. முற்றும் அற்று” என்ற விதிப்படி “நிறைவ் + இல்லதும்” என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நிறைவில்லதும்” என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. காய்நெல் அறுத்து என வரும் புறநானூற்றும் பாடலின் பாவகை
- கலிவிருத்தம்
- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நேரிசை ஆசிரியப்பா
- சிந்தியல் வெண்பா
விடை : நேரிசை ஆசிரியப்பா
2. காய்நெல் அறுத்து எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …….. ஆவது பாடல் ஆகும்
- 184
- 204
- 224
- 244
விடை : 184
3. புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
- 1874
- 1884
- 1894
- 1904
விடை : 1894
4. ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
- கொலம்பியா
- ஆக்ஸ்போர்டு
- கலிபோர்னியா
- கேம்பிரிட்ஜ்
விடை : கேம்பிரிட்ஜ்
5. ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
- 1989
- 1999
- 1988
- 1978
விடை : 1999
6. காய்நெல் அறுத்து என்னும் புறநானூற்றுப் பாடலின் வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறித்தியவர் ………….. அறிவுறுத்தப்பட்டவர் ……………
- கபிலர், பாரி
- கோவூர்கிழார், கிள்ளிவளவன்
- பிசிராந்தையர், அறிவுடைநம்பி
- வெள்ளக்குடி நாகனார், நல்லங்கிள்ளி
விடை : பிசிராந்தையர், அறிவுடைநம்பி
7. பிசிர் என்பது
- பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
- எஞ்சிய வாழ்க்கை
- சோழநாட்டில் கிடைத்த பொருள்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
8. ஆந்தையார் என்பது
- காரணப்பெயர்
- பட்டப்பெயர்
- குலப்பெயர்
- இயற்பெயர்
விடை : இயற்பெயர்
9. அறிவுடை நம்பி ஆண்ட நாடு
- சேர நாடு
- பாண்டிய நாடு
- சோழ நாடு
- பல்லவ நாடு
விடை : பாண்டிய நாடு
10. பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின் என்னும் அடிகளில் வரும் நச்சின என்பதன் பொருள்
- விரும்பினால்
- குலைந்தால்
- இழந்தால்
- அலைந்தால்
விடை : விரும்பினால்
11. தப பொருள் தருக
- ஒலிக்குறிப்பு
- கெட
- அன்பு
- தழைக்கும்
விடை : கெட
12. காய்நெல் இலக்கணக்குறிப்பு தருக
- பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
விடை : வினைத்தொகை
13. பொருத்துக
மா | முறைமை |
கல் | வரி |
பிண்டம் | ஒலிக்குறிப்பு |
வரிசை | ஒருநில அளவு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
14. பொருத்துக
தமித்து | புகுந்து |
புக்கு | தனித்து |
யாத்து | கெட |
தப | சேர்த்து |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
குறுவினா
1. பிசிராந்தையார் குறிப்பு வரைக
- பிசிராந்தையார் பெயரில் பிசிர் என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர் ஆகும். ஆந்தையார் என்பது இயற்பெயர் ஆகும்.
- இவர் பாண்டிய மன்னர் அறிவுடை நம்பியின் அரசவைச் சான்றோர்.
2. சங்க காலத்தில் மன்னன் எவ்வாறு திழ்ந்தான்?
நல்வழிப்படுத்தும் புலவர்கள் அரசவையில் இருந்தனர். புலவர்களின் அறிவுரைகளைக் தலைமேற்கொண்டு குடிமக்களின் உள்பாங்கை அறிந்து ஆட்சி செய்தனர்.
3. பாடாண் திணை விளக்குக
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
2. புறநானூற்றூப் பாடல் வாயிலாக மன்னனின் நிருவாக சீர்மையை விளக்குக
- குடிமக்களின் உளம் அறிந்து ஆட்சி செய்பவனே சிறந்த அரசன்.
- மக்களின் விரும்பத்திற்கு மாறாக அரசன் செயல்பட்டால் நாடும் மக்களும் வீழ்வர் என்பதைப் புறநானூற்று பாடல் மூலம் பிசிராந்தையர் கூறினார்.
- ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாக யானைக்கு பல நாட்கள் கொடுக்கலாம்.
- இதைவிட நூறு மடங்கு பெரிய வயலில் யானை தனித்துச் சென்று உண்ணுமாயின் உண்ணும் அளவை விட காலில் மிதிபட்டு அழிந்ததேஅதிகமாகும்.
- அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.க்ஷ
- அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும்.
- அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
3. பாடாண் திணையை சான்றுடன் விளக்குக
திணை விளக்கம்:-
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
சான்று:-
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்
பொருத்தம்:-
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
4. செவியறிவுறூஉ துறையை சான்றுடன் விளக்குக
துறை விளக்கம்:-
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
சான்று:-
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்
பொருத்தம்:-
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
சில பயனுள்ள பக்கங்கள்