Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 8.1 – நமது அடையாளங்களை மீட்டவர்

பாடம் 8.1. நமது அடையாளங்களை மீட்டவர்

12ஆம் வகுப்பு தமிழ், நமது அடையாளங்களை மீட்டவர் பாட விடைகள்

கவிதைப்பேழை > 8.1. நமது அடையாளங்களை மீட்டவர்

புதிய செய்தி காணும் ஆய்வு

சேரன் கொடிக்கு வில், சோழன் கொடிக்கு புலி, பாண்டியன் கொடிக்கு மீன் என்று மரபான
சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற சின்னங்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வுலகு அறியாதவை. சங்ககாலப் பசும்பூண்பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.

பலவுள் தெரிக.

1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  1. தனித்தமிழ்த் தந்தை – மு. வரதராசனார்
  2. ஆராய்ச்சிப் பேரறிஞர் – மயிலை சீனி. வேங்கடசாமி
  3. தமிழ்த் தென்றல் – திரு.வி.க.
  4. மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

விடை : தனித்தமிழ்த் தந்தை – மு. வரதராசனார்

2. ச.த.சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

  1. பெளத்தமும் தமிழும்
  2. இசுலாமும் தமிழும்
  3. சமணமும் தமிழும்
  4. கிறித்தவமும் தமிழும்

விடை : கிறித்தவமும் தமிழும்

குறுவினா

1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் பற்றிக் குறிப்பு வரைக.

  • அழகுக் கலைகள் பற்றி தமிழல் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.
  • தமிழக அரசின் முற்பரிசைப் பெற்ற நூல்

2. ’விரிபெரு தமிழர் மேன்மை
    ஓங்கிடச் செய்வ தொன்றே
    உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாக கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.

சிறுவினா

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கைய ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி இவர் எழுதி முடித்த புத்தகங்கள் புதையல்களாக விளங்குகின்றன.
  • சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றை புலமை பெற்றவர்.
  • தமிழில் “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதல்பரிசு பெற்ற நூல் ஆகும்.

நெடுவினா

மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.

  • மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது.
  • பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது.
  • இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்கமுடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்கிறது.
  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகம் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்கு தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது.
  • ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
  • தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும்.
  • எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன.
  • இவர் நூலகத்தைத் தன் தாயமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார்.
  • இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறை கொண்டவர்.
  • சமயம், கலை, இலக்கியம், கிறுத்தவமும் தமிழும், பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார்.
  • இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்றபோது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.

கூடுதல் வினாக்கள்…

பலவுள் தெரிக.

1. மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்

  1. கிறுத்தவமும் தமிழும்
  2. பெளத்தமும் தமிழும்
  3. சமணமும் தமிழும்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : கிறுத்தவமும் தமிழும்

2. மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?

அ) மகேந்திரவர்மன்ஆ) நரசிம்மவர்மன்இ) மூன்றாம் நந்திவர்மன்
  1. அ மட்டும் சரி
  2. ஆ, இ மட்டும் சரி
  3. அ, ஆ மட்டும் சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

3. மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துக்கள்

அ) வட்டெழுத்துஆ) கோலெழுத்துஇ) தமிழ் பிராம்மி
  1. அ, இ மட்டும் சரி
  2. ஆ, இ மட்டும் சரி
  3. அ, ஆ மட்டும் சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

4. தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்

  1. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
  2. நுண்கலைகள்
  3. இசைவாணர் கதைகள்
  4. பெளத்தமும் தமிழும்

விடை : தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

5. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு

  1. 1960
  2. 1958
  3. 1956
  4. 1962

விடை : 1962

6. தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்கான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்

  1. பழங்காலத் தமிழர் வணிகம்
  2. கொங்குநாட்டு வரலாறு
  3. தமிழ்நாட்டு வரலாறு
  4. களப்பிரர் ஆட்சியல் தமிழாம்

விடை : தமிழ்நாட்டு வரலாறு

7. ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி. வேங்கடசாமியன் நூல்

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்
  2. பழங்காலத் தமிழர் வணிகம்
  3. கொங்குநாட்டு வரலாறு
  4. களப்பிரர் ஆட்சியல் தமிழாம்

விடை : பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்

8. மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன ……………… நூல்கள் தொடர்பான குறிப்புகளை கூறியுள்ளார்.

  1. 331
  2. 332
  3. 333
  4. 334

விடை : 333

9. வேங்கடசாமி ……………….. என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

  1. குடியரசு
  2. செந்தமிழ்ச்செல்வி
  3. ஊழியன்
  4. ஆரம்பாசிரியன்

விடை : செந்தமிழ்ச்செல்வி

10. மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் …………… அதனை ஆங்கிலம் வழியாக தமிழாக்கியவர்

  1. மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
  2. நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
  3. மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
  4. இராசராசோழன், கவிமணி

விடை : மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

11. மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக

அ) தமிழ் பேரவைச் செம்மன்1) தமிழ் எழுத்தாளர் சங்கம்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர்2) சென்னை கோகலே மண்டபம்
இ) கேடயம் (1962) வழங்கல்3) மதுரைக் காமராசன் பல்கலைக் கழகம்
விடை : 3 , 2, 1

12. சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் …………. சின்னத்தைக் கொடிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி

  1. புலி
  2. சிங்கம்
  3. யானை
  4. சேவல்

விடை : யானை

13. களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

  1. உ.வே.சாமிநாதர்
  2. சி.வை.தாமோதரனார்
  3. மகாவித்துவான் சபாபதி
  4. மயிலை சீனி. வேங்கடசாமி

விடை : மயிலை சீனி. வேங்கடசாமி

14. தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்படுபவர் காலம்

  1. களப்பிரர்கள்
  2. பல்லவர்கள்
  3. சேரர்கள்
  4. சோழர்கள்

விடை : களப்பிரர்கள்

15. மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய உருவ விவரிப்பு கூறியவர்

  1. வல்லிகக்கண்ணன்
  2. நாரண துரைக்கண்ணன்
  3. மாணிக்கராசனார்
  4. சாமிநாதர்

விடை : நாரண துரைக்கண்ணன்

16. தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
என்ற பாடல் வரிகளை எழுதியவர்

  1. பாரதியார்
  2. பெருஞ்சித்திரனார்
  3. பாரதிதாசன்
  4. வண்ணதாசன்

விடை : பாரதிதாசன்

குறுவினா.

1. மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பு வரைக

  • மயிலை சீனி. வேங்கடசாமி 16.12.1900-ல் மயிலாப்பூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் சீனுவாசன் – கோவிந்தம்மாள் ஆவர்.
  • இவரது பணிகள் பள்ளி ஆசிரியர், இதழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர்

2. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு கிடைத்த கீதனங்கள் யாவை?

மகாபாரதம், இராமாயணன்

3. மயிலையார் எதன் அடிப்படையில் இன வரலாற்றை எழுதினார்?

இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு

4. மயிலையாரின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியான இதழ்களைக் குறிப்பிடுக

குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி

5. மயிலையார் ஆய்வு செய்த துறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக

சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு

6. மயிலையாரின் பன்முக அறிவினைக் குறிப்பிடுக

  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழி ஆய்வு போன்ற துறையில் சிறந்து விளங்கினார்
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி கல்வெட்டுப் போன்ற துறைகளில் பன்முக அறிவினைப் பெற்று விளங்கினார்.

7. மயிலையார் எம்மொழிகளெல்லாம் புலமையுடைவர்?

மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்

8. மயிலையாரின் மொழிபெயர்ப்பு பணியினைக் கூறுக

மகேந்திரவர்மன் இயற்றிய “மத்த விலாசம்” என்ற நாடக நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார்.

9. மயிலையாரின் சொல்லாய்வுப் பணியிகை கூறுக.

மயிலையார் செய்த சொல்லாய்வினை “செந்தமிழ்ச் செல்வி” என்ற இதழில் எழுதி “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது

10. மயிலையாரைப் பற்றி விபுலானந்தாவின் கருத்து யாது?

  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டின் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர்.
  • நல்லாழுக்கம் வாய்ந்தவர்.
  • நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னைப் போல் போற்றுபவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக

  • ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்;
  • அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை;
  • சட்டைப் பையில் மூக்கு க்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் துண்டு ; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை.
  • இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருவார்.

2. மயிலையார் எதற்காக தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலினை எழுதினார்?

  • “தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்தன.
  • தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது;
  • ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே;
  • இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவதில்லை;
  • ஏனைய அழகுக் கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர்;
  • எனவே இந்நூல் எழுதப்பட்டது”

3. மயிலையாரின் மீட்டுருவாக்க முயற்சியைச் சான்றுடன் விளக்குக

  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார்.
  • துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

4. மயிலையாரின் ஆவணப் பணியினை விளக்குக

  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார்.
  • இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் விளக்கம் அளிப்பதாக அமைந்தது.
  • இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் வைத்தார்.

5. மலையாரின் வாழ்க்கையைப் பற்றிச் சில தகவல்கள் திரட்டுக

  • திருமணம் செய்யாமல் துறவியாக வாழ்ந்த்வர்.
  • தன் வாழ்வை முழுமையாகத் தமிழின் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.
  • நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர்.
  • பெருமைகளை ஆய்வு நோக்கில் விரித்துரைத்தவர்
  • சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

6. மலையாரின் இலக்கிய பணியினை விளக்குக

  • 1962ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்.
  • இச்சொற்பொழிவுகள் மூலம் அவரது ஆய்வுப் பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் ஆகியவற்றை நோக்கி நகர்ந்தது.
  • இதன் விளைவாக, சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தார்.
  • ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.
  • சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.
  • ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ மயிலையாரின் ஆவணப் பணிகளில் ஒன்றாகும்.
  • 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் வைத்தார்.

7. மலையாரின் கலையியல் ஆய்வுகள் பற்றி விவரி

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினார்.
  • இதற்கு இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் உதவியாக அமைந்தது.
  • கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள் தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்