Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 8.2 – முகம்

பாடம் 8.2. முகம்

12ஆம் வகுப்பு தமிழ், முகம் பாட விடைகள்

கவிதைப்பேழை > 8.2. முகம்

’சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்னும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது.

தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்ரமணியன்.

கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.

தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

இவருடைய மறைவுக்குப் பிறகு இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் ’சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

பலவுள் தெரிக.

1. நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது

  1. தமது வீட்டு முகவரியை
  2. தமது குடும்பத்தை
  3. தமது அடையாளத்தை
  4. தமது படைப்புகளை

விடை : தமது அடையாளத்தை

குறுவினா

முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.

என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. முகம் என்னும் கவிதை தொகுப்பு இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

  1. சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்
  2. மீண்டெழுதலின் ரகசியம்
  3. புதையுண்ட வாழ்க்கை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்

2. சுகந்தி சுப்பிரமணியத்தின் ஊர்

  1. ஈரோட்டு புறநகரின் சிவகிரி
  2. கோவை புறநகரின் ஆலாந்துறை
  3. தஞ்சை புறநகரின் வல்லம்
  4. நெல்லை புறநகரின் புதூர்

விடை : கோவை புறநகரின் ஆலாந்துறை

3. சுகந்தி சுப்பிரமணியனின் கல்வித்தகுதி

  1. முனைவர் பட்டம்
  2. இளங்கலை பட்டம்
  3. உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்
  4. தொடக்க கல்வியை முழுமை செய்யாதவர்

விடை : உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்

4. சுகந்தி எழுத்தாளராக நம்பிக்கை தந்தவர்

  1. அவரது கணவர்
  2. அவரது தாயார்
  3. அவரது தந்தையார்
  4. அவரது தங்கை

விடை : அவரது கணவர்

5. சுகந்தி சுப்பிரமணியத்தின் படைப்புகளில் பாடுபொருள்

  1. கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சவால்கள்
  2. மணமாகாத பெண்களின் அவலம்
  3. தனித்து விடப்பட்ட பெண்களின் அவலங்கள்
  4. அறிவியல் உலகில் பெண்கள்

விடை : தனித்து விடப்பட்ட பெண்களின் அவலங்கள்

6. சுகந்தி சுப்பிரமணியன் என்பார் தமிழின் …………… பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்

  1. மரபு
  2. நவீன
  3. புதுக்கவிதை
  4. பின்நவீன

விடை : நவீன

7. நான் வெற்றுவெளியில்
   அலைந்து கொண்டிருக்கிறேன்
   எனது முகத்தைத் தேடியபடி. – என்று பாடியவர்

  1. இரா. மீனாட்சி
  2. உமா மகேஷ்வரி
  3. சாந்தி சுப்பிரமணியன்
  4. சுகந்தி சுப்பிரமணியன்

விடை : சுகந்தி சுப்பிரமணியன்

8. முகம் என்னும் கவிதையை எழுதியவர்

  1. இரா. மீனாட்சி
  2. சுகந்தி சுப்பிரமணியன்
  3. உமா மகேஷ்வரி
  4. சாந்தி சுப்பிரமணியன்

விடை : சுகந்தி சுப்பிரமணியன்

குறுவினா.

1. சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக

  • தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்படத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன்.
  • சுகந்தி சுப்பிரமணியன் கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
  • உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்.
  • புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

2. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும்போது உருவாவது எது?

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளர் காணும்போது எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.

3. அடையாளம் இழந்த ஒருவர் எதைத் தொலைக்கிறார்?

அடையாளம் இழந்த ஒருவர் தன் முகத்தைத் தொலைக்கிறார்

4. சுகந்தி சுப்பிரமணியனின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் குறிப்பிடுக

புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம்

சிறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பினை விளக்குக

  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும்போது எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.
  • அடையாளம் இழந்த ஒரு பெண் தன் அடையாளத்தைத் தேடுகிறாள்.
  • அவள் முகமும் காணவில்லை. தேடும்போது தன்னையும் தொலைத்து விடுகிறாள்.
  • முகவரியும் தொலைந்தால் உடலைக் கவனிக்கப் பிறரை நாடுகிறாள்.
  • மனதில் ஆசையை வளர்த்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு வெளியே சுற்றுகிறாள்.
  • இப்படியே மனம் இறுகி தன்னைத் தேடி ஆண்டுகள் பல ஆயின.

 

சில பயனுள்ள பக்கங்கள்