Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 8.4 – சிறுபாணாற்றுப்படை

பாடம் 8.4. சிறுபாணாற்றுப்படை

12ஆம் வகுப்பு தமிழ், சிறுபாணாற்றுப்படை பாட விடைகள்

கவிதைப்பேழை > 8.4. சிறுபாணாற்றுப்படை

நூல்வெளி

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்.இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று;

ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.

பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சொல்லும் பொருளும்

  • வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
  • கவாஅன் – மலைப்பக்கம்
  • கலிங்கம் – ஆடை
  • சுரும்பு – வண்டு
  • நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
  • பிறங்கு – விளங்கும்;
  • பறம்பு – பறம்பு மலை
  • கறங்கு – ஒலிக்கும்
  • வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  • மருள – வியக்க
  • நிழல் – ஒளி வீசும்
  • நீலம் – நீலமணி
  • ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
  • அமர்ந்தனன் – விரும்பினன்
  • சாவம் – வில்;
  • மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்);
  • கரவாது – மறைக்காது
  • துஞ்சு – தங்கு;
  • நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை);
  • போது – மலர்
  • கஞலிய – நெருங்கிய;
  • நாகு – இளமை
  • குறும்பொறை – சிறு குன்று;
  • கோடியர் – கூத்தர்
  • மலைதல் – போரிடல்
  • உறழ் – செறிவு
  • நுகம் – பாரம்.

இலக்கணக் குறிப்பு

  • வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
  • கவாஅன் – செய்யுளிசையளபெடை
  • தடக்கை – உரிச்சொல் தொடர்
  • நீீலம் – ஆகுபெயர்
  • அருந்தமிறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு – பண்புத்தொகைகள்
  • அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மலைதல் – தொழிற்பெயர்
  • விரிகடல் – வினைத்தொகை
  • கடல்தானை – உவமைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. அமர்ந்தனன் = அமர்+ த் (ந்) + த் + அன் + அன்

  • அமர்- பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2. ஈந்த = ஈ + த் (ந்) + த் + அ

  • ஈ – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

3. தாங்கிய = தாங்கு + இ(ன்) + ய் + அ

  • பழி – பகுதி
  • இ(ன்) – இறந்தகால இடைநிலை
  • ய் – உடம்படுமெய் சந்தி
  • அ – பெயரெச்ச விகுதி

4. இடிந்து = இடி + த் (ந்) + த் + உ

  • இடி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. நன்மொழி =  நன்மை + மொழி

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன்மொழி” என்றாயிற்று.

2. உரனுடை = உரன் + உடை

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உரனுடை” என்றாயிற்று.

சிறுவினா

1.கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயல்களையும் அட்டவணைப்படுத்துக

பேகன் (ஆவினன்குடி)

மழைப்பொழியும் மலைச்சாரலில் செல்லும் கருங்மேகங்கண்டு ஆடிய மயில குளிரால் நடுங்குவதாக எண்ணி தன் போர்வையை தந்தவன்.

பாரி (பறம்பு)

நாகமலை பகுதிக்கு செல்லும் போது படர்வதற்கு பற்று இல்லாமல் ஆடிய முல்லைக்கு தேர் தந்தவன்.

பார் (மலையமான்)

இவன் வாள் செந்நிறம் கொண்டு ஒளிரும், ஆனால் தன்னைத் தேடி வந்தவருக்கு அன்பு மொழி விதைத்த ஈரநிலம் போன்றவன் நீண்ட கைகளை உடையன்.

ஆய் (பொதிய மலை)

நீல நாகத்தின் உடைய ஆலின் கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்ததவன்.

நள்ளி (நெடுங்கோடு மலைமுகடு)

போர் முனையில் நீளும் கைகள் போ மக்கள் வாழ்க்கைக்கு அனைத்தும் வாரி வழங்கியவன்.

ஓரி (மலைநாடு – ஊட்டி)

மணம் வீசும் மலர்கள் உடைய மலைநாட்டைக கூத்தருக்குத் தந்தவன்.

2. கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்றி விரும்புவனவற்றை எழுதுக

  • கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும்.
  • மடம் என்பது அறியாமை என்ற பொருள்.
  • இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான கொடை.
  • இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்கு கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம்.

இதைத்தான் வள்ளுவர்

வறியார்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்பை நீர் உடைத்து

– என்கிறார் இதன்படியே நாமும் கொடை வழங்குவதை பின்பற்றலாம்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • நல்கிய, தாங்கிய, மறைந்த – பெயரெச்சங்கள்
  • பெருங்கடல், பெருமகன், பெருந்தேர், செந்நுகம் – பண்புத்தொகைகள்
  • திகழ்நீலம், கமழ்பூ – வினைத்தொகைகள்

உறுப்பிலக்கணம்

1. முட்டாது = முட்டு + ல் + ஆ + த் + உ

  • முட்டு – பகுதி
  • ல் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • த் – எழுத்துப்பேறு
  • உ – வினையெச்ச விகுதி

2. திகந்து = திகழ் + த் (ந்) + த் + உ

  • திகழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. வெள்ளருவி =  வெண்மை + அருவி

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “வெண் + அருவி” என்றாயிற்று.
  • “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “வெள் + அருவி” என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன்ஒற்றுவரின் இரட்டும்” என்ற விதிப்படி “வெள்ள் + அருவி” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெள்ளருவி” என்றாயிற்று.

2. ஆலமர் = ஆல் + அமர்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஆலமர்” என்றாயிற்று.

3. பூஞ்சாரல் = பூ + சாரல்

  • “பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூஞ்சாரல்” என்றாயிற்று.

4. தீங்கனி = தீம் + கனி

  • “மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்” என்ற விதிப்படி “தீங்கனி” என்றாயிற்று.

5. அரவக்கடல் = அரவம் + கடல்

  • “மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “அரவ + கடல்” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “அரவக்கடல்” என்றாயிற்று.

6. அருந்திறல் =  அருமை + திறல்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “அரு + திறல்” என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி “அருந்திறல்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. ஆவியர் குலத்தில் தோன்றியவன்

  1. பாரி
  2. பேகன்
  3. ஓரி
  4. காரி

விடை : பேகன்

2. தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி செல்பவன்

  1. நல்லியக்கோடன்
  2. அதிகன்
  3. பேகன்
  4. பாரி

விடை : நல்லியக்கோடன்

3. சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் ………………. முடித்த இடம் …………

  1. நல்லூர், திண்டிவனம்
  2. மரக்காணம், வேலூர்
  3. வேலூர், ஆமூர்
  4. எயிற்பட்டினம், நல்லாமூர்

விடை : நல்லூர், திண்டிவனம்

4. ஆவினன்குடி பொதினி என்றழைக்கப்பட்டு தற்போது ……………………. எனப்படுகிறது.

  1. பிரான் மலை
  2. திருக்கோவிலூர்
  3. பழனி
  4. தர்மபுரி

விடை : பழனி

5. சிவகங்கை மாவட்டம், திருப்பதூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை

  1. பொதிய மலை
  2. பிரான் மலை
  3. நளி மலை
  4. கொல்லி மலை

விடை : பிரான் மலை

6. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை

  1. தென்பண்ணை
  2. காவிரி
  3. பாலாறு
  4. வெட்டாறு

விடை : தென்பண்ணை

7. தற்போதைய அகத்தியர் மலை எனப்படுவது …………

  1. பொதிய மலை
  2. பிரான் மலை
  3. நளி மலை
  4. கொல்லி மலை

விடை : பொதிய மலை

8. கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம் ………….

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. மதுரை
  4. நாமக்கல்

விடை : நாமக்கல்

9. திண்டிவனத்தைச் சார்ந்தது …………… நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி

  1. மலையமான்
  2. தகடூர்
  3. ஓய்மா
  4. பறம்பு

விடை : ஓய்மா

10. வள்ளல் குமணனைப் பற்றிக் குறிப்பிடும் நூல்

  1. பதிற்றுப்த்து
  2. பரிபாடல்
  3. பட்டினப்பாலை
  4. புறநானூறு

விடை : புறநானூறு

11. குறுநில மன்னன் குமணால் ஆளப்பட்ட மலை

  1. பொதிய மலை
  2. பிரான் மலை
  3. நளி மலை
  4. முதிர மலை

விடை : முதிர மலை

12. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் 

  1. மாங்குடி மருதனார்
  2. வெள்ளைக்குடி நாகனார்
  3. நல்லூர் நத்தத்தனார்
  4. பூதஞ்சேந்தனார்

விடை : நல்லூர் நத்தத்தனார்

12. சிறுபாணாற்றுப்படை …………………..  நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண்கீழ்க்கணக்கு
  4. பதினெண்மேல்கணக்கு

விடை : பத்துப்பாட்டு

13. சிறுபாணாற்றுப்படையின் பாடலடிகள்

  1. 263
  2. 266
  3. 269
  4. 272

விடை : 269

14. மரக்காணம் என அழைக்கப்படும் ஊர்

  1. நல்லூர்
  2. எயிற்பட்டினம்
  3. கிடங்கில்
  4. ஆமூர்

விடை : எயிற்பட்டினம்

15. திண்டிவனம் ……………… என அழைக்கப்பட்டது

  1. நல்லூர்
  2. எயிற்பட்டினம்
  3. ஆமூர்
  4. கிடங்கில்

விடை : கிடங்கில்

16. அறிமடமும் சான்றோர்க்கு அணி என்று கூறும் நூல்

  1. ஆசாரக்கோவை
  2. நீதிநெறி விளக்கம்
  3. பழமொழி நானூறு
  4. சிறுபஞ்சமூலம்

விடை : பழமொழி நானூறு

17. முதிர மலையை ஆட்சி செய்தவன்

  1. பாரி
  2. குமணன்
  3. ஓரி
  4. காரி

விடை : குமணன்

18. ………………. மலைப் பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவையாருக்கு அதியமான் கொடுத்தான்.

  1. பிரான் மலை
  2. பொதிய மலை
  3. பொதினி மலை
  4. கொல்லி மலை

விடை : பிரான் மலை

19. குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இரவலர்களுக்கு இல்லையென கொடுத்தவன்

  1. பாரி
  2. காரி
  3. நல்லியக்கோடன்
  4. அதியமான்

விடை : காரி

20. பொருத்துக

1. பேகன்அ. மலையமான் நாடு
2. பாரிஆ. பறம்பு மலை
3. காரிஇ. பொதிய மலை
4. ஆய்ஈ. பொதின மலை
விடை : 1 – ஈ, 2 – ஆ, 3 – அ, 4 – இ

21. பொருத்துக

1. மயிலுக்கு போர்வை தந்தவன்அ. பாரி
2. முல்லைக்குத்தேர்ஆ. பேகன்
3. ஒளவைக்கு நெல்லிக்கனிஇ. ஆய்
4. கூத்தர்க்கு மலைநாடுஈ. அதிகன்
5. சிவனுக்கு நீலமணிஉ. ஓரி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – இ

16. பொருத்துக

1. வீரக் கழலை உடையவன்அ. ஆய்
2. வில் ஏந்தியவன்ஆ. காரி
3. வேலினை உடையவன்இ. நள்ளி
4. போர்த் தொழிலில் வல்லமையுடைவன்ஈ. அதிகன்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறுவினா

1. மனித இனத்தின் அடையாளம் எவை?

  • ஈகைப்பண்பு
  • கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது.

2. சிறுபாணாற்றுப்படை பாடலை பாடியவர் பாடப்பட்டோர் யார்?

  • பாடியவர் – இடைக்கழிநாட்டு நல்லூர்  நத்தத்தனார்
  • பாடப்பட்டோன் – ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக்கோடன்

3. ஆற்றுப்படை என்பது யாது?

  • ஆறு + படை = ஆற்றுப்படை வழிபடுத்தல் என்பதன் பொருளாகும்.
  • பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெற போகும் பாணனைக் கண்டு வழிபடுத்தல்.

4. இளங்குமணன் விட்ட அறிக்கை யாது?

காட்டில் மறைந்து வாழும் தன் அண்ணன் குமணனின் தலையை கொண்டு வருவோருக்கு பரிசில் தருவதாக அறிவித்தான்.

5. குமணனி கொடைத்தன்மையை விளக்குக

  • தன்னை நாடி பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார எனும் புலவருக்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால் தன் இடை வாளைத் தந்து ” தன் தலையை அறிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டான். இதுவே குமணனின் கொடை

6. கடையெழு வள்ளல்கள் ஆண்டப் பகுதியை தற்காலப் பெயர்களோடு பட்டியலிடுக

வள்ளல்கள்ஆண்டபகுதிதற்காலப் பெயர்கள்
பேகன்பொதினி மலைபழனி மலை
பாரிபறம்பு மலைபிரான் மலை
காரிமலையமான்மலாடு
ஆய்பொதிய மலைகுற்றாலம்
அதிகன்தகடூர்தருமபுரி
நள்ளிநளிமலைஊட்டி
ஓரிகொல்லி மலைகொல்லி மலை

 

சில பயனுள்ள பக்கங்கள்