Tamil Nadu State Board 12th Standard Tamil Public Exam Question Paper 2024 is available for download.
12th Tamil Public Question Paper 2024
We have some exciting news to share with you! The question paper and answer key for the 12th Tamil Public Exam 2024 are now available for download. This essential resource includes the official question paper and a complete answer key that provides detailed solutions to all the questions in the paper.
By downloading the PDF file, you will get a sneak peek into what’s coming your way on exam day. Plus, you can access it anytime, anywhere, even without an internet connection. This valuable resource can help you prepare for your exams with confidence.
Download the 12th Tamil Question Paper PDF
You can now download the PDF for the 12th Tamil Question Paper. The exam is on 1st March 2024, so here’s a heads-up. Find the Tamil Original Question Paper and the download link below. Take a look to get an idea of what you’ll face on exam day.
Exam Date | Question Paper Details | PDF Link |
1st March 2024 | Tamil Original Question Paper | Download |
1st March 2024 | 12th Tamil Public Exam Answer Key PDF | Download |
12th English Public Exam Answer Key
12th Tamil Public Exam Answer Key 2024
Please find below the detailed solution for the 2024 12th Tamil Public Exam.
பகுதி – I: அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
1. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ் !”’
– இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.
(அ) அடிஎதுகை, சீர்மோனை
(ஆ) அடிமோனை, அடிஎதுகை
(இ) சீர்எதுகை, அடிமோனை
(ஈ) சீர்மோனை; சீர்எதுகை
விடை: (அ) அடிஎதுகை, சீர்மோனை
2. பொருத்தி விடை தேர்க.
(1). குரங்குகள் | (i) கன்றுகளைத் தவிர்த்தன |
(2) விலங்குகள் | (ii) மரங்களிலிருந்து வீழ்ந்தன |
(3) பறவைகள் | (iii) குளிரால் நடுங்கின |
(4) பசுக்கள் | (iv) மேய்ச்சலை மறந்தன |
(அ) (1) – (iii), (2) – (ii), (3) – (i), (4) – (iv)
(ஆ) (1) – (i), (2) – (iii), (3) – (iv), (4) – (ii)
(இ) (1) – Gi), (2) – (i), (3) – (iii), (4) – (iv)
ஈ) (1) – (iii), (2) – (iv), (3) – (ii), (4) – (i)
விடை: ஈ) (1) – (iii), (2) – (iv), (3) – (ii), (4) – (i)
3. ‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்’ – விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் :
(அ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
(ஆ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
(இ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
(ஈ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
விடை: ஈ) (1) – (iii), (2) – (iv), (3) – (ii), (4) – (i)
4, ‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு
(அ) நாய்
(ஆ) எருது
(இ) யாளி
(ஈ) குதிரை
விடை: (அ) நாய்
5. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) கடுக்காய்
(ஆ) வசம்பு
(இ) மாவிலைக்கரி
(ஈ) மணத்தக்காளியிலைச் சாறு
விடை: (அ) கடுக்காய்
6. சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம். காரணம் :
(அ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
(ஆ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
(இ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
(ஈ) (அ), (அ), (இ) அனைத்தும்
விடை: (ஈ) (அ), (அ), (இ) அனைத்தும்
7. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.
(1) காதை | (i) கந்தபுராணம் |
(2) சருக்கம் | (ii) சீவகசிந்தாமணி |
(3) இலம்பகம் | (iii) சூளாமணி |
(4) படலம் | (iv) சிலப்பதிகாரம் |
(அ) (1) – (iii), (2) – (iv), (3) – (ii), (4) – (i)
(ஆ) (1) – (iv), (2) – (iii), (3) – (ii), (4) – (i)
(இ) (1) – (iv), (2) – (iii), (3) – (i), (4) – (ii)
(ஈ) (1) – (iii), 2) – (iv), (3) – (i), (4) – (ii)
விடை: (ஆ) (1) – (iv), (2) – (iii), (3) – (ii), (4) – (i)
8. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்… – தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
(1) மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
(2) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்
(௮) (1) தவறு; (2) தவறு
(ஆ) (1) சரி; (2) தவறு
(இ) (1) சரி; (2) சரி
(ஈ) (1) தவறு; (2) சரி
விடை: (இ) (1) சரி; (2) சரி
9. எளியது, அரியது என்பன
(அ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
(ஆ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
(இ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
(ஈ) சொல்வது – சொல்லியபடி செய்வது
விடை: (ஈ) சொல்வது – சொல்லியபடி செய்வது
10. ‘உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில்’ – இத்தொடரில் இடம் பெற்றுள்ள பெயரெச்சம்.
(அ) வளர்ந்த
(ஆ) உண்டு
(இ) இடந்தனில்
(ஈ) பிறந்து
விடை: (அ) வளர்ந்த
11. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் :
(௮) சமணமும் தமிழும்
(ஆ) பெளத்தமும் தமிழும்
(இ) கிறித்தவமும் தமிழும்
(ஈ) இசுலாமும் தமிழும்
விடை: (இ) கிறித்தவமும் தமிழும்
12. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி
(அ) அங்கதம்
(ஆ) குறியீடு
(இ) தொன்மம்
(ஈ) படிமம்
விடை: (ஆ) குறியீடு
13. பிழையான தொடரைக் கண்டறிக.
(அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
(ஆ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
(இ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
(ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
விடை: (அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
14. தோப்பில் முகமது மீரானுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்
(அ) கூனன் தோப்பு
(ஆ) துறைமுகம்
(இ) சாய்வு நாற்காலி
(ஈ) ஒரு குட்டித் தீவின் வரைபடம்
விடை: (இ) சாய்வு நாற்காலி
பகுதி – II: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
15. ஞாலத்தின் பெரியது எது ?
Answer: உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும். |
16. நெடுநல்வாடை – பெயர்க்காரணம் தருக.
Answer: தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது. |
17. வசனம், கவிதை – வேறுபாடு தருக.
Answer: வசனம்: எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும். கவிதை: எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிகென்று எல்லை வைத்து எழுதப்படுவதே கவிதையாகும். |
18. முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer: என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார். |
பகுதி – II: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.
19. புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.
Answer: புக்கில்: சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடத்தை குறிப்பதாகும். “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு (222:6) பாடல் சான்றாகும் தன்மனை: திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து , தனியாக வாழுமிடம ‘தன்மனை’ எனவும் வழங்கப் பெறறுள்ளன. |
20. முறை வைப்பு என்றால் என்ன?
Answer: உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது “முறை வைப்பது” என்று அழைக்கப்படும். |
21. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
|
பகுதி – II: எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
22. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை ?
|
23. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
விடை:
|
24. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
விடை: ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். |
25. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
நிலத்தக் கெளறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.
விடை: நிலத்தை உழுதால்தான் உயிறு நிறையும் |
26. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்கவும்.
தின்மை – திண்மை
தின்மை – தீமை திண்மை – வலிமை |
27. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) செய்த செய்த = செய் + த் + அ செய் – பகுதி |
(ஆ) கலங்கி கலங்கி = கலங்கு + இ கலங்கு – பகுதி |
28. கலைச் சொல்லாக்கம் தருக.
(அ) Stapler கம்பி தைப்புக் கருவி (ஆ) Teller விரைவுக் காசாளர் |
குறிப்பு : செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
பின்வரும் உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்திடுக.
அச்சாணி இல்லாத தேர் போல
நாட்டை வழி நடத்த சரியான தலைவர் இல்லாத நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர் |
29. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) உரனுடை உரனுடை = உரன் + உடை “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உரனுடை” என்றாயிற்று. |
(ஆ) தலைக்கோல் தலைக்கோல் = தலை + கோல் இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் |
30. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்கவும்.
(அ) கோவில் கோவில் கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.. |
(ஆ) தாமரை தாமரை தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன. |
பகுதி – III: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.
31. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார் பொருள் மக்களால் போற்றப்பட்டு , உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார். கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு எம்மொழியும் இல்லை என்பதாகும். |
32. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
|
33. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம்:- “எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காக தேர்ந்தெடுத்தனர். மூங்கில் கொணர்தல்:- பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களை கொண்டு வந்தனர். ஆடல் ஆரங்கம் அமைந்தல்:- “நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்” நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவு கொண்டு அரங்கம் அமைத்தல். மூங்கில் அளவுகோல்:- கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கில வெட்டினார். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும், எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கபட்டது. |
34. கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப்படுத்துக.
பகுதி – III: எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக
35. பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்குக.
|
36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்கவும்.
|
37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
|
38. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
|
பகுதி – III: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
39.
(அ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும். – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி இலக்கணம் கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும். பொருள் சினம் தன்னைக் கொண்டவனை, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். அணிப்பொருத்தம் இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது |
(அல்லது)
(ஆ) உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
சான்று:- அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இக்குறட்பாவில் பயின்று வரும் அணி தொழில் உவமை அணி ஆகும். அணி விளக்கம்:- ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை அணி எனப்படும். உவமை:- தீயில் குளிர் காய்பவர் போல உவமேயம்:- அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்து கொள்ள வேண்டும். அணிப்பொருத்தம்:- அரசனைச் சார்ந்திருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொ |
40. இலக்கிய நயம் பாராட்டுக :
(மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக) முச்சங்கங் கூட்டி அச்சங்கத் துள்ளே சொற்சங்க மாகச் அற்புதங்க ளெல்லாம் – கண்ணதாசன் முன்னுரை இப்பாடலின் ஆசிரியர் கவியரசர் கண்ணதாசன் ஆவார். இவர் திரைப்பட பாடலாசரியரும், கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். திரண்ட கருத்து தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும், நல்ல அறிவும் கொண்ட புலவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிட முடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே! தொடை நயம் மோனை காட்டுக்கு யானை, பாட்டுக்கு மோனை முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும் சான்று : முச்சங்கக் – முதுபுலவர், அச்சங்கத் – அளப்பரிய, அற்புதங்க – அமைந்த எதுகை மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும் சான்று : முச்சங்கக் – அச்சங்கத், அற்புதங்க – சொற்சங்க இயைபு கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது சான்று : பெருமாட்டி – கவிகூட்டி – பொருள்கூட்டி – தமைக்கூட்டி அணி நயம் அணியற்ற பாக்ககள் பிணியுள்ள வணிதை தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்து சந்த நயம் சந்தம் தமிழுக்கு சொந்தம் ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையைத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல் சுவை நயம் நா உணரும் சுவை ஆறு, மனம் உணரும் சுவை எட்டு என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்கமாகச் சுவை மிகுந்த கவி கூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது. முடிவுரை கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது. |
41.
(அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
திணை விளக்கம் வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை. சான்று ‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் – என்ற நெடுநல்வாடைப் பாடல் பொருத்தம் வாடைக் காலத்தில் மேகம் மலைய வலப்பக்கமாக சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு அரசனும் குளிர் காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான் |
அல்லது
(ஆ) செவியறிவுறூஉ துறையைச் சான்றுடன் விளக்குக.
துறை விளக்கம்:- அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும். சான்று:- காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே; எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பொருத்தம்:- சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிகணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும். பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவில் குறைந்தது முறை தெரியாது வரி திரட்டினால் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். அரசன் தானும் பயன்பட மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர். |
42. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
(அ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது. |
அல்லது
(ஆ) ஊழி பெயரினும் தாம் பெயரார்.
நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற மாட்டார்கள். |
43. தமிழாக்கம் தருக.
(1) If you want people to understand you, speak their language.
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு |
(2) A new language is a new life.
புதிய மொழி புதிய வாழ்க்கை |
(3) The limits of my language are the limits of my world.
என் மொழியின் எல்லை உன் உலகத்தின் எல்லை |
(4) Knowledge of languages is the doorway to wisdom.
மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம் |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர் தான் ‘நாவல் ராணி’, “கதா மோகினி’, “ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி”) ஆவார்.
வினாக்கள் : (1) ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் யார் ? வை.மு.கோதைநாயகி (2) வை.மு. கோதைநாயகியின் படைப்பாற்றலை ஊக்குவித்தவர் யார்? வை.மு.கோதைநாயகியின் கணவர் (3 வை.மு. கோதைநாயகி அவர்கள் எழுதிய முதல் நாடக நூல் எது ? இந்திர மோகனா (4). “கதா மோகினி” என்று அழைக்கப்பட்ட பெண் எழுத்தாளர் யாரிடம் கல்வி கற்றார் ? தன் குடும்பத்தாரிடம் |
பகுதி – IV: அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
44.
(அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
குகனுடன் கொண்ட உறவு நிலை
சடாயுடன் கொண்ட உறவுநிலை
சுக்ரீவனிடம் கொண்ட உறவுநிலை
வீடனிடம் கொண்ட உறவுநிலை
இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமை வழங்கும் சகோதரனாய் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார். |
(அல்லது)
(ஆ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும். சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஒரு பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மையத் தன்மையை காண்பதே அறிவாகும். எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும். எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடிய அறிவு, உண்மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்கு துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம். |
45.
(அ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
முன்னுரை:- ஓரு நாட்டின் முன்னேற்றம், கல்வி மேம்பாட்டுன் தொடர்புடையது. கல்வியின் நோக்கமும், அமைப்பு முறைகளும் மாற்றமடைந்து வந்துள்ளன. இலக்கிய, இலக்கணங்கள், காலநிலை வளர்ச்சியைக் காட்டுகின்றன. கற்றலும் கற்பித்தலும்:- பண்டைக்காலத்தில் கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றமாகும். திண்ணைப் பள்ளிக்கூடங்களில், ஆசிரியரே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார். சரளமாக எழுத, பேசுகின்ற மொழித்திறன் மிக்கவராய் இருப்பார். ஆசிரியரே கற்பித்தல் தன்மையை முடிவு செய்வார். முதலில் நெடுங்கணக்கு முறைகளிலே கற்பித்தல் நிகழும். இலக்கியம், இலக்கணம், வாய்பாடு ஆகிய அனைத்தையும் முழுமையாக மனனம் செய்து, தெளிவு பெறச் செய்வார். வினாக்கள் கேட்பதன் வாயிலாக மாணவர்களிடம் மதிப்பீடும் செய்வார். மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்பப் பாடத் திட்டங்களும் மாற்றம் பெறும். மாணவர்ககளின் ஆரவத்திற்கேற்ப வியாபாரம் பற்றிய செய்திகளும், கணித முறைகளும் கற்பிக்கப்படும். கற்றல் செயல்பாடுகள்:- மாணவரது கற்றல் தன்மைக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். மொழித்திறனும், செயல்திறனும் கண்காணிக்கப்படும். மாணவர்கள் குழுவாசக் சேர்ந்து செயல்பட வாய்ப்புக்கள் அளிக்கப்படும். மாணவர்கள், வினாக்கள் கேட்கும் விடைகள் கூறியும் கற்று வருவார்கள். அடிப்படையான நூல்கள் எல்லாம், மனனமாகவே இருக்கும். நிகண்டு, வாய்ப்பாடுகளை எல்லாம் தலைகீழ்ப் பாடமாக மனனம் செய்வர். அகராதி, அந்தாதி, எதுகை, மோனை வகையில் செய்யுட்களை ஞாபகத்தில் கொள்வர். ஞாபசக்தி அதிகரிப்பதற்காகப் பூ, மிருகம், ஊர் போன்ற பெயர்களை மறுநாள் வந்து சொல்லுவர். கற்றல் என்பது பள்ளியில் மட்டுமே எனற்றில்லாமல், வாழ்நாள் முழுவது இருக்கும். “குருவை மிஞ்சிய சீடர்” என்று சொல்லும் வகையில் மாணவர்கள், புதியன படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பர். |
(அல்லது)
(ஆ) ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு”: – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
முன்னுரை ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சென்னை தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அவ்வகையில் இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்கின்றது. சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிந்தே வாழந்த்ததற்கான தடயங்களை கொண்டுள்ளன. மானுட எச்சம் பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏ ற்ப டுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.(பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. பாடல் பெற்ற தலம் திருவொற்றியூர், திருவான்மியூர் , மயிலாப்பூர், திருமுல்லைவாயில் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்களாக உள்ளன. நீர்நிலைகளும் வடிகால்களும் சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் மற்றும் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்னு தெரியவில்லை நகரம் – உருவாக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ (White’s Town) என்று அழைக்கப்பட்டது . வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ (Black’s Town) என அழைக்கப்பட்டது . கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின. வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையு ம் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயர்களின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது. கல்லூரிகள் – பள்ளிகள்
போன்ற கல்லூரி பழமை வாய்ந்த அறிவின் நகரமாக விளங்குகிறது. பண்பாட்டு அடையாளங்கள் சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. அதன் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம். இநதிய சராசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்காளக தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றை விளங்குகின்றன. நம் சென்னை (இன்றைய சென்னை) இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் இன்று சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. மின்னணுப் பொருள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது. முடிவுரை இத்தகு பெருமை கொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் பெருமை கொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது. |
46.
(அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்கவும்.
முன்னுரை:- உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மழையின் கோரம்:- ‘வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம்போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன். உபரிநீர் வெளியேற்றம்:- காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான் . உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பாரத்தாலும் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடி தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும். மருதனின் நல்யோசனை:- மருதன் பயிர்கள் மூழ்காமலும் மொத் கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியை பிடுங்கி அரித்தான். மாரி வருதல்:- மாரி இந்தச் சனியன் பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்தை எண்ணி மருதன் கோபம் அடைந்தான் மருதனின் ஆக்கம்:- இப்படியே போனல் ஊரே நாற்றம் எடுத்துவிடும் என்று ஏக்கத்தோடு செடிகளை பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளிப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான், அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான். மருதனின் புலம்பல்:- வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான் அல்லி வருதல்:- முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள். மாமா நீ சொல்றத நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள். ஊர் மக்கள் வரல்:- நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்ட வாய்க்காலிலி இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது. முடிவுரை:- “அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கம் என்பதற்கு ஏற்ப வாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராய்ந்து ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்பு நலன் பாராட்டத்தக்கது. |
அல்லது
(ஆ) ‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு”
– இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை ?
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்து நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே சாலை விபத்தில்லா தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும்:-
வாகன ஓட்டிகளின் அலட்சியம்:- அவசரம் என்று ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும். விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள்:-
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் அறிநது விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க:-
இவ்வாறு வாகனம் ஓட்டும்போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோன் என்றால் “சாலை விபத்தில்லா தமிழ்நாடு” உருவாகும் |
பகுதி – V
47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “அறிவும்’” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே; அதனால் காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. |
(ஆ) ‘பொருள்’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். |