3rd Std Tamil Book 1st Term Solution
You can find the solution for the Samacheer Kalvi 3rd Standard Tamil subject’s first term on this page. It has been clearly explained by a Tamil expert.
Table of Content |
|
3rd Standard Tamil Book – Download
பாடம் 1: வா வா முயலே
இவர்களைப்போல் ஒலி எழுப்பி மகிழ்வோம்
பொருத்தமானதை இணைப்பேன்
குறியீடுகளைக்கொண்டு சொற்களை உருவாக்குவோம்
குறியீடுகளைக்கொண்டு சொற்களை உருவாக்குவோம்
படிப்போம்; உரிய சொல்லை எழுதுவோம்
தீ | மணி | விசிறி | வானவில் | திமிங்கலம் | பலா |
சக்கரம் | கடல் | காகம் | நீ | அகல் | மிளகாய் |
மஞ்சள் | ஓணான் | காளான் | நாய் | மான் | மிதிவண்டி |
1. அடுப்பில் எரிவது | தீ |
2. சுவையான பழம் | பலா |
3. வானில் பறப்பது | காகம் |
4. காரமாக இருப்பபது | மிளகாய் |
5. இரு சக்கர வாகனம் | மிதிவண்டி |
6. கடலில் வாழ்வது | திமிங்கலம் |
படிப்போம்; உரிய சொல்லை வட்டமிட்டு எழுதுவோம்
- நான் நீந்துவேன் – ஆமை
- வீடு கட்ட உதவுவேன் – செங்கல்
- கூவி ஒலி எழுப்புவேன் – சேவல்
- பயணம் செய்ய உதவுவேன் – பேருந்து
- தலைகீழாகத் தொங்குவேன் – வெளவால்
- பாடல் கேட்க உதவுவேன் – வானொலி
- பயிருக்குப் பாதுகாப்பு தருவேன் – வேலி
படித்து மகிழ்வோம்
இணைத்து எழுதுவேன்
நீர்யானை | |
மயிலாட்டம் | |
இலை ஊதல் | |
மண்பானை | |
கடல் ஆமை | |
மழைமேகம் |
3rd Standard Tamil Book – Download
பாடம் 2: செய்து மகிழலாம்
தொடர்களைப் படத்துடன் பொருத்துக
தமிழ் அமுது
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றிவைக்க வில்லையம்மா!
– கவிஞர் கண்ணதாசன்
பாடல் பொருள்
தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.
பாடம் 3: கண்ணன் செய்த உதவி
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் _______
- சந்திரன்
- சூரியன்
- விண்மீன்
- நெற்கதிர்
விடை: சூரியன்
2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- மகிழ்ச்சி + அடைந்தான்
- மகிழ்ச்சி + யடைந்தான்
- மகிழ்ச்சியை + அடைந்தான்
- மகிழ்ச்சியை + யடைந்தான்
விடை: மகிழ்ச்சி + அடைந்தான்
3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- ஒலி + யெழுப்பி
- ஒலி + எழுப்பி
- ஒலியை + யெழுப்பி
- ஒலியை + எழுப்பி
விடை: ஒலி + எழுப்பி
II. சரியா? தவறா?
1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான். | சரி |
2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான். | தவறு |
3. பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார். | தவறு |
4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர் | சரி |
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. கண்ணன் எங்குப் புறப்பட்டான்?
கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.
2. பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?
பள்ளி செல்லும் வழியில் கண்ணன் பெரியவரைப் பார்த்தான்.
3. பேருந்து எதில் மோதியது?
பேருந்து மரத்தில் மோதியது.
4. பெரியவர் எந்த எண்ணிற்கு அலைபேசியில் பேசினார்?
பெரியவர் அலைபேசியில் 108 என்ற எண்ணிற்கு பேசினார்.
5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?
கண்ணன் பேருந்து விபத்தில் சிக்கியபோது அடிபட்டவர்களுக்கு உதவி செய்தான். அதனால் ஆசிரியர் கண்ணனைப் பாராட்டினார்.
யாருக்கு எது தேவை? படித்துப் பார்த்து இணைப்போம்
பொருத்தமான சொல்லால் நிரப்புவேன்
ஓடாது | சமைக்க | வளராது |
தீ இல்லாமல் சமைக்க முடியாது | |
நீர் இல்லாமல் செடி வளராது. | |
சக்கரம் இல்லாமல் வண்டி ஓடாது. |
எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
கல் | படம் |
தடி | தடம் |
நரி | நகைப்பு |
சிரி | சிரிப்பு |
சொல்லிப் பழகுவோம்
கூவுர கோழி கொக்கர கோழி கொக்கர கோழி கொழுகொழு கோழி கொழுகொழு கோழி கொத்தற கோழி |
கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை |
தோணி மேலே கோணி கோணி மேல ஏணி ஏணி மேல அணில் |
கரடி கருங்கரடி கரடி பிடரி கரும் பிடரி |
பாடம் 4: நமது நண்பர்
நிரப்புவேன்
1. ஊஞ்சல் ஆட இடம் தந்த நண்பர் மரம் .
2. இலையில் ஊதல் செய்து ஊதலாம்.
3. சிட்டைப் பார்த்து பறக்க விருப்பம் வந்தது.
4. மரத்தடியில் ஊஞ்சல், கண்ணாம்பூச்சி விளையாட ஆசை.
5. அப்பா சிறுவனாக இருந்தபோது சிலந்தியின் வலையை பார்த்துப் படம் வரைந்தார்.
நான் விளையாடிய விளையாட்டுகளை செய்வேன்
என்னைப் பற்றி எழுதுவேன்
பெயர் | அ.சங்கர லிங்கம் |
வகுப்பு | மூன்றாம் வகுப்பு |
தாய் பெயர் | காளியம்மாள் |
தந்தை பெயர் | அருணாச்சலம் |
பள்ளி பெயர் | ஞானகுரு வித்யா சாலை |
நண்பர் பெயர் | மாரி |
ஊர் பெயர் | வெங்கடேஸ்வரபுரம் |
மாவட்டம் பெயர் | தென்காசி |
மாநிலம் பெயர் | தமிழ்நாடு |
நாடு பெயர் | இந்தியா |
பெற்றோர் அலைபேசி எண் |
இரண்டெழுத்து, மூன்றெழுத்துச் சொற்களை உருவாக்குவேன்
இரண்டெழுத்து சொற்கள்
நா | டு |
ப | ல் |
க | ண் |
கா | டு |
மூன்றெழுத்துச் சொற்கள்
ச | ங் | கு |
கு | ட | ம் |
வ | ண் | டி |
ப | ட | கு |
பாடம் 5 மாட்டு வண்டியிலே…
1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ________
- தண் + ணீர்
- தண் + நீர்
- தண்மை + நீர்
- தன் + நீர்
விடை : தண்மை + நீர்
2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ________
- உயரே
- நடுவே
- கீழே
- உச்சியிலே
விடை : கீழே
3. வயல் + வெளிகள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- வயல்வெளிகள்
- வயவெளிகள்
- வயற்வெளிகள்
- வயல்வளிகள்
விடை : வயல்வெளிகள்
4. கதை + என்ன இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- கதைஎன்ன
- கதையன்ன
- கதையென்ன
- கதயென்ன
விடை : கதையென்ன
5. வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல் ________
- நிழல்
- பகல்
- வெப்பம்
- இருள்
விடை : நிழல்
சொல் கோபுரம் அமைப்பேன்
அழைக்க உதவும் சொல் | வா |
தாகத்திற்குக் குடிப்பது | நீர் |
உறவுப் பெயர் | அம்மா |
பழங்களுள் ஒன்று | ஆரஞ்சு |
கண்டுபிடித்துப் பொருத்துவோம்
சொற்களுக்குள் ஒளிந்துள்ள உணவுப்பொருளைக் கண்டுபிடித்து எழுதுவேன்
பொடி | பொங்கல் |
செங்கல் | |
வங்கி | வடை |
கடை | |
பூக்கள் | பூந்தி |
சாந்தி | |
தோகை | தோசை |
ஆசை | |
முகில் | முறுக்கு |
சறுக்கு | |
பொம்மை | பொரி |
நரி |
கண்ணாடியில் பார்ப்பப்போம்;
புதிருக்குப் பொறுத்தமான விடையை எழுதுவோம்
புத்தகம் | குடை |
பட்டாசு | கண் |
கோலம் | வாழைப்பூ |
நெற்கதிர் |
1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்ககால் தெரியும்; அது என்ன?
விடை: குடை
2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ; என்ன பூ?
விடை: வாழைப்பூ
3. கையிலே அடங்கும் பிள்ளை; கதை நூறு சொல்லும் பிள்ளை; அது என்ன?
விடை: புத்தகம்
4. அன்றாடம் மலரும்; அனைவரையும் கவரும்; அது என்ன?
விடை: கோலம்
5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது; ஆனால், உனக்குத் தெரியும்; அது என்ன?
விடை: கண்
6. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது; அது என்ன?
விடை: பட்டாசு
7. அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு; அது என்ன?
விடை: நெற்கதிர்
கண்டுபிடித்து வட்டமிடுவோம்
உரிய வடிவத்தோடு இணைப்பேன்; பிடித்த வண்ணமிடுவேன்
பாடம் 6: டும்… டும்… சின்னு
பாடலை நிரப்பிப் பாடுவேன்
பாட்டுப் பாடி தக்காளி வந்தது டும் டும் டும்
தக்ககாளி போய் எலுமிச்சை வந்தது டும் டும் டும்
எலுமிச்சை போயி பட்டம் வந்தது டும் டும் டும்
பட்டம் போயி வாத்து வந்தது டும் டும் டும்
வாத்து போயி தொப்பி வந்தது டும் டும் டும்
தொப்பி போயி வெற்றிலை வந்தது டும் டும் டும் டும்
வெற்றிலை போயி தோசை வந்தது டும் டும் டும் டும்
முடியும் சொல்லை முதலாகக் கொண்டு அடுத்த தொடரை நிரப்புவேன்
(உண்டு சென்று பசியுடன்)
ஆமினா பாடினாள்.
பாடி ஆடினாள்.
ஆடியதால் பசித்தது.
பசியுடன் நடந்ததாள்.
நடந்து சென்றாள்.
சென்று அமர்ந்தாள்.
அமர்ந்து உண்டாள்.
உண்டு மகிழ்ந்ததாள
சொல்லின் ஓர் எழுத்தைக் கொண்டு, புதிய சொல்லை உருவாக்குவோம்
1. பாதம் – தங்கம் – கதவு – தலைவர் – வள்ளல்
2. ஒட்டகம் – கல்வி – விடுதலை – தகவல் – வறுமை
3. குருவி – விற்பனை – பக்கம் – கல்கி – கிணறு
4. சிங்கம்- சிரிப்பு – புதிர் – திண்டிவனம் – வனப்பு
சொல்லில் உள்ள எழுத்தை முதல் எழுத்தாக்கி வேறு சொற்களை எழுதுவேன்
1. தண்ணீர்- தக்காளி – காலை
2. பட்டம் – பப்பாளி – பாடல்
3. பதக்கம் – கதவு – தலை
படங்களை உரிய சொல்லோடு இணைப்பேன்
பொருத்தமான சொல்லைக் கண்டறிந்து எழுதுவேன்
நீ நடனம் | ஆடு |
தழையைத் தின்னும் | |
சட்டையை நீ | தை |
தமிழ் மாதங்களில் ஒன்று | |
புத்தகத்தை நீயும் | படி |
மாடிக்கு ஏறிச்செல்ல உதவுவது | |
அரிசியை அளக்கப் பயன்படும் | |
விரைவாக நீ | ஓடு |
நத்தையின் முதுகில் இருப்பது | |
வீட்டின் கூரையாக வேய்வது |
பாடம் 7: தனித்திறமை
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ________
- நண்பர்கள்
- எதிரிகள்
- அயலவர்கள்
- சகோதரர்கள்
விடை: நண்பர்கள்
2. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் ________
- வாழை
- வேளை
- வேலை
- வாளை
விடை: வேலை
3. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- படைத் + தளபதி
- படை + தளபதி
- படையின் + தளபதி
- படைத்த + தளபதி
விடை: படை + தளபதி
4. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- எதைபார்த்தாலும்
- எதபார்த்தாலும்
- எதைப்பார்த்தாலும்
- எதைபார்தாலும்
விடை: எதைப்பார்த்தாலும்
5. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் ________
- தரம்
- மரம்
- கரம்
- வரம்
விடை: தரம்
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலி அரசர் தலைமையில் நடைபெற்றது.
2. புலி ராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?
புலி ராஜா, படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிகளுக்குக் கொடுத்தார்
3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
இரவுக்காவல் அமைச்சர்
4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
கழுதை, ஆமை, முயல்
5. இந்தக் கதையின்மூலம் நீங்கள் அறிந்து கொள்வது யாது?
யாரையும் குறைவாக எடை போடக் கூடாது. அவர்களின் திறமைகளை அடையாளம் காண வேண்டும்.
எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு? இணைப்போம்
1. நாய்கள் – நன்றியுணர்வு
2. யானைகள் – கூட்டமாக வாழ்தல்
3. எறும்புகள் – வரிசையாகச் செல்லுதல்
4. காகம் – பகிர்ந்து உண்ணல்
நிகழ்வை உரிய சொற்களால் நிரப்புவோம்
(நிறைய வர இடிக்க பெய்ய)
மேகம் கருக்க
மின்னல் மின்ன
இடி இடிக்க
மழை பெய்ய
வெள்ளம் வர
குளம் நிறைய
மீன்கள் மகிழ்ந்தன.
சூழலுக்கு ஏற்ற குறியீட்டை வரைவோம்
உரிய குறியீட்டை வரைந்து எழுதுவேன்
சிரிப்பு | மகிழ்ச்சி | வருத்தம் | வியப்பு | அச்சம் |
1. பாட்டி புத்தாடை வாங்கித் தந்தால் மகிழ்ச்சி
2. மிகப்பெரிய யானையைப் பார்த்ததால் வியப்பு
3. கோமாளி செய்யும் செயல்களைக் கண்டால் சிரிப்பு
4. நண்பர் கீழே விழுவதைக் கண்டால் வருத்தம்
5. திடீரெனப் பாம்பைக் கண்டால் அச்சம்
பாடம் 8: இறகு யாருடையது?
கூறியது யார்? படத்துடன் இணைப்பேன்
குழுவில் சேராததை வட்டமிடுவேன்
1. வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை: மென்மை
2. ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை: மலை
3. தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மிதிவண்டி
விடை: மிதிவண்டி
4. மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை: புலி
5. கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை: தென்னை
முதலெழுத்தை மாற்றி விடையை எழுதுவேன்
காகம் |
1. வானில் இருப்பது மழை தருவது அது எது? விடை: மேகம் |
வாளி |
2. பச்சை எனது நிறம் கீ .. கீ எனது ஒலி நான் யார்? விடை: கிளி |
அவல் |
3. கூரை மேல் இருப்பவன் கூவிக் கூவி அழைப்பவன் நான் யார்? விடை: சேவல் |
வீடு |
4. இலை தழை எனது உணவு மே .. மே.. எனது ஒலி நான் யார்? விடை: ஆடு |
பானை |
5. பதுங்கிப் பதுங்கி நடப்பவன் பாலை விரும்பிக் குடிப்பவன் நான் யார்? விடை: பூனை |
அரும்பு |
6. நீளமாக இருக்கும் கடித்தால் இனிக்கும் அது எது? விடை: கரும்பு |
படம் பார்த்துப் பேசி மகிழ்வோம்; விரும்பியதைப் பொருத்தமாக எழுதுவோம்
1. வண்ணத்துப்பூச்சி அழகாக உள்ளது.
2. மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் உள்ளன.
3. பறவை பறக்கிறது.
4. சிலந்தி வலையை பின்னுகிறது
யார் செய்தார்கள்? என்ன செய்தார்கள்? படித்து எழுதுவேன்
1. சேவல் ஓடுகிறது
2. தம்பி ஆடுகிறான்
3. கொடி படர்கிறது
4. அத்தை சிரிக்கிறார்
5. கெண்டை மீன் நீந்துகிறது
பெயர்: சேவல் செயல்: ஓடுகிறது | |
பெயர்: கொடி செயல்: படர்கிறது | |
பெயர்: அத்தை செயல்: சிரிக்கிறார் | |
பெயர்: கெண்டை மீன் செயல்: நீந்துகிறது | |
பெயர்: தம்பி செயல்: ஆடுகிறான் |
பெயர் எது? செயல் எது? எழுதுவேன்
1. குழலி பூ கோத்தாள்.
பெயர் | செயல் |
குழலி | கோத்தாள் |
பூ |
2. அமுதன் பந்து விளையாடினான்.
பெயர் | செயல் |
அமுதன் | விளையாடினான் |
பந்து |
3. கோழி அரிசி தின்றது.
பெயர் | செயல் |
கோழி | தின்றது |
அரிசி |
பாடம் 9: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. ஏற்றுக்கொள்கிறோம் கூறியது யார்? ________
- மரங்கள்
- விலங்குகள்
- பறவைகள்
- மனிதர்கள்
விடை: விலங்குகள்
2. வேட்டை+ ஆட இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- வேட்டையட
- வேட்டையாட
- வேட்டைஆடு
- வெட்டையாட
விடை: வேட்டையாட
3. உயர்வு இச்சொல்லின் எதிர்ச்சொல்
- பணிவு
- கனிவு
- தாழ்வு
- துணிவு
விடை: தாழ்வு
4. மரங்கள் இலஙலாமல் குளிர்ச்சியே இல்லை என்று கூறியது
- சிங்கம்
- புலி
- முயல்
- மான்
விடை: தாழ்வு
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன
2. காட்டை விட்டு எவை வெளியேறின?
விலங்குகள்
3. விலங்குகளுக்கும் மரங்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி யாது?
விலங்குகளுக்கும் மரங்களுக்கும் இடையே ஏற்பட்ட யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது.
4. கதையின்மூலம் நீ என்ன தெரிந்து கொண்டாய்?
இங்கு யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை. அனைவரும் சமமானவர்களே. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
எந்த மரத்திலிருந்து என்ன பொருள்? பொருத்துவேன்
வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுவோம்
1. பள்ளம் – அரும்பு – பார்த்திபன் – பருத்தி
2. பருந்து – வட்டம் – வண்டு – பட்டு
3. கம்பு – பம்பரம் – தக்காளி – கம்பளி
4. சக்கரம் – தட்டு – குடை – சட்டை
5. புற்று – குடம் – குடுவை – புடவை
6. வேர் – மிட்டாய் – தொட்டில் – வேட்டி
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்
எட்டிப் பார்த்தது பூனை இசை தருவது வீணை | மழை பெய்தது. மலை உயரமானது. |
மரத்தை அறுப்பது வாள் மாட்டுக்கு இருப்பது வால் | மரத்தில் காய்ப்பது புளி காட்டில் வாழ்வது புலி |
பொருத்தமான சொற்களால் நிரப்புவோம்
1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையில் இருப்பது கறை. (கரை, கறை)
2. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம். (அறம், அரம்)
3. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை. (வளை, வலை)
4. பொழுதைக் குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை. (வேலை, வேளை)
5. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம். (மரம், மறம்)
6. விடிந்த பின் வருவது காலை. வீட்டில் வளர்ப்பது காளை. (காளை, காலை)
பாடம் 10: சான்றோர் மொழி
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _________
- பாடுதல்
- வரைதல்
- சொல்லுதல்
- எழுதுதல்
விடை : சொல்லுதல்
2. ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் _________
- கொடுத்தல்
- எடுத்தல்
- தடுத்தல்
- வாங்குதல்
விடை : கொடுத்தல்
3. அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது இனிமையானது வண்ணமிட்ட சொல்லின் பொருள் _________
- அறிவிலாதார்
- மிக்கார்
- கற்றோர்
- அறிந்தோர்
விடை :
4. இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் _________
- பிறரிடம் கேட்டுப் பெறாது
- பிறரிடம் கேட்டுப் பெறுவது
- பிறருக்கு கொடுக்காது
- பிறரிடம் கொடுப்பது
விடை : பிறரிடம் கேட்டுப் பெறாது
5. சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _________
- தேடுதல்
- பிரிதல்
- இணைதல்
- களைதல்
விடை : இணைதல்
6. மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் _________
- அறிவிலாதார்
- அறிந்தோரை
- கற்றோரை
- அறிவில்மேம்பட்டவர்
விடை : அறிவிலாதார்
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துவோம்
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?
1. சினம் | 2. வியப்பு |
3. வருத்தம் | 4. சிரிப்பு |
5. அழுகை |
சொற்களை உரிய வரிசையில் எடுத்து எழுதுவோம்
(கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை)
1. காகிதத்தாள் | 1. கண்ணாடித்துண்டு |
2. சணல்பை | 2. நெகிழிப்பை |
3. இலை | 3. பீங்கான் தட்டு |
இங்கு எது பயன்படும்? எழுதுவோம்
அகர முதலி
- ஆவல் – விருப்பம்
- இரவாது – பிறரிடம் கேட்டுப் பெறாது
- ஈதல் – கொடுத்தல்
- உரைத்தல் – கூறுதல்
- ஒலி – சத்தம்
- ஒளி – வெளிச்சம்
- கதிரவன் – சூரியன்
- களிப்பு – மகிழ்ச்சி
- காலை – விடியல் பொழுது
- சேகரித்தல் – ஒன்று திரட்டுதல்
- சேர்த்தல் – இணைத்தல்
- நித்திலம் – முத்து
- பகைவகள் – எதிரிகள்
- பணி – வேலை
- மிக்கார் – அறிவில் மேம்பட்டவர்
கூடுதல் வினாக்கள்
1. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத்திசையிலும் திருப்புவேன், நான் யார்?
விடை : ஆந்தை
2. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்?
விடை: முயல்
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
1. காட்டில் | விலங்குகள் | நடந்தது | கூட்டம் |
விடை: விலங்குகள் கூட்டம் காட்டில் நடந்தது
2. இரவுக்காவல் | நீங்கள்தாம் | அமைச்சர் | ஆந்தையாரே |
விடை: ஆந்தையாரே நீங்கள்தாம் இரவுக்காவல் அமைச்சர்
3. முயல் | ஓடும் | வேகமாக | அதி |
விடை: முயல் அதி வேகமாக ஓடும்
4. கூடாது | யாரையும் | போடக் | எடை | குறைவாக |
விடை: யாரையும் குறைவாக எடை போடக் கூடாது
எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?
விலங்குகள் | பணிகள் |
சிங்கம் – படைத்தளபதி | |
ஆந்தை – இரவுக்காவல் | |
எச்சரிக்கைப் பணி | |
சமையல் வேலை | |
கழுதை – பொருள்களைச் சேகரிக்கும் வேலை |
பெயர் எது? செயல் எது?
பெயர் | செயல் | |
குழலி பாடம் படித்தாள் | குழலி, பாடம் | படித்தாள் |
அமுதன் பந்து விளையாடினான் | அமுதன், பந்து | விளையாடினான் |
மரம் செழித்து வளர்ந்தது | மரம் | செழித்து, வளர்ந்தது |
கல்யாணமாம் கல்யாணம்!
பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
- கல்யாணமாம் – கொண்டாட்டமாம்
- ஊர்கோலமாம் – நாட்டியமாம்
- பின்பாட்டாம் – சாப்பாடாம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- பூலோக + மெல்லாம்
- பூலோகம் + மெல்லாம்
- பூலோகம் + எல்லாம்
- பூலோக + எல்லாம்
விடை : பூலோகம் + எல்லாம்
2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் …………………..
- பூனை
- ஒட்டகச்சிவிங்கி
- யானை
- குரங்கு
விடை : ஒட்டகச்சிவிங்கி
3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………..
- பாலையெல்லாம்
- பாலைஎல்லாம்
- பாலைல்லாம்
- பாலெல்லாம்
விடை : பாலையெல்லாம்
கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக
கோப்பைகள் | தட்டுகள் |
காணோமாம் | காணவில்லையாம் |
வாங்கி வச்ச | வாங்கிவைத்த |
பூனைய | பூனையை |
வாறோம் | வருகிறோம் |
யய
மாணவர்கள் நினைத்தால்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. முயற்சி இச்சொல்லின் பொருள் …………………………………..
- ஆக்கம்
- ஊக்கம்
- இயக்கம்
- பக்கம்
விடை : ஊக்கம்
2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் …………………………
- பெற்றோர்
- உற்றோர்
- சுற்றோர்
- பெரியோர்
விடை : பெரியோர்
3. வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………….
- வைத்து + யிருந்தனர்
- வைத் + இருந்தனர்
- வைத்து + இருந்தனர்
- வைத் + திருந்தனர்
விடை : வைத்து + இருந்தனர்
4. வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………
- வீதி + எங்கும்
- வீதி + யெங்கும்
- வீதியெ + ங்கும்
- வீதி + அங்கும்
விடை : வீதி + எங்கும்
5. நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………………
- நெகிழிஅற்ற
- நெகிழியற்ற
- நெகிழ்அற்ற
- நெகிழ்யற்ற
விடை : நெகிழியற்ற
6. பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………….
- பாதிப்அடைகிறது
- பாதிப்புஅடைகிறது
- பாதிப்படைகிறது
- பாதிபடைகிறது
விடை : பாதிப்படைகிறது
பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக
1. நெகிழியற்ற ____________ உருவாக்குவோம். (உலகை / உளகை)
விடை : உலகை
2. நெகிழியை ஒழிப்போம் ____________ காப்போம். (மன்வளம் / மண்வளம்)
விடை : மண்வளம்
3. மேரி ____________ குதித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)
விடை : மகிழ்வோடு
4. எறும்பு ____________ கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)
விடை : ஊரக்
5. துணிப்பை என்பது ____________ (எளிதானது / எலிதானது)
விடை : எளிதானது
இணைந்து செய்வோம்
நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டியலிடுக.
- துணிப்பை
- காகிதப்பை
- சணல்பை
- இலை
- தட்டு
சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.
கண்ணாடித்துண்டு | நெகிழிப்பை |
காகிதத்தாள் | சணல்பை |
பீங்கான் தட்டு | இலை |
மட்காத குப்பைப் பெட்டி
- கண்ணாடித்துண்டு,
- நெகிழிப்பை,
- பீங்கான் தட்டு
மட்கும் குப்பைப் பெட்டி
- காகிதத்தாள்,
- சணல்பை
- இலை
ஒருமை, பன்மை அறிவோமா?
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை. |
ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை. |
ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோமா!!!
பந்து | பந்துகள் |
ஆமை | ஆமைகள் |
முயல் | முயல்கள் |
பூனை | பூனைகள் |
பூ | பூக்கள் |
விழா | விழாக்கள் |
பசு | பசுக்கள் |
வினா | வினாக்கள் |
படம் | படங்கள் |
மரம் | மரங்கள் |
சிங்கம் | சிங்கங்கள் |
காகம் | காகங்கள் |
பல் | பற்கள் |
கல் | கற்கள் |
சொல் | சொற்கள் |
புல் | புற்கள் |
முள் | முட்கள் |
தாள் | தாட்கள் |
ஆள் | ஆட்கள் |
பொருள் | பொருட்கள் |
துணிந்தவர் வெற்றி கொள்வர்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- வகுப்பு + அரை
- வகுப்பு + அறை
- வகு + அறை
- வகுப் + அறை
விடை : வகுப்பு + அறை
2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ……………………….
- மகிழ்ச்சி
- மதிப்பு
- அவமதிப்பு
- உயர்வு
விடை : அவமதிப்பு
3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ……………………………
- சிறிய
- நிறைய
- அதிகம்
- எளிய
விடை : சிறிய
4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ………………………
- சாதனை
- மகிழ்ச்சி
- நன்மை
- தோல்வி
விடை : தோல்வி
5. மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
- மண் + பிளந்து
- மண்ணைப் + பிளந்து
- மண்ணை + பிளந்து
- மன் + பிளந்து
விடை : மண்ணை + பிளந்து
பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?
1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.
2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.
3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
விடை:-
1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
2. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
3. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.
4. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்
பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?
ஆசிரியர் | பெயர் |
சிரி | சரி |
சட்டி | ஆடி |
அடி | அதிசயம் |
ஆதி | ஆசி |
பெட்டி |
பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?
- சிலர் x பலர்
- முடியாது x முடியும்
- கடினமாக x எளிதாக
- விலகினர் x சேர்ந்தனர்
- பொய் x உண்மை
மாணவர்களுக்கு வேண்டிய குணங்களை எழுதுக
- துணிச்சல்
- மகிழ்ச்சி
- சுறுசுறுப்பு
- தன்னம்பிக்கை
சான்றோர் மொழி
1. நித்திலம் இச்சொல்லின் பொருள் ………………………
- பவளம்
- முத்து
- தங்கம்
- வைரம்
விடை: முத்து
2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
- செம்மை + தமிழ்
- செந் + தமிழ்
- செ + தமிழ்
- செம் + தமிழ்
விடை: செம்மை + தமிழ்
3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
- உன்னைத் தவிர
- உனைத்தவிர
- உன்னை தவிர
- உனை தவிர
விடை: உன்னைத் தவிர
பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க
1. என க்குஇனி ப்புபி டிக்கும்
எனக்கு இனிப்பு பிடிக்கும்
2. உழை ப்புஉ யர்வுத ரும்
உழைப்பு உயர்வு தரும்
3. மர ம் வள ர்ப்போ ம்ம ழைபெ றுவோம்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
4. சுத் தம்சு கம்த ரும்
சுத்தம் சுகம் தரும்
5. இனி யதமி ழில்பே சுங்
இனிய தமிழில் பேசுங்க
நூலகம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………….
- புத்தகம்
- கட்டகம்
- ஒட்டகம்
- கோல்
விடை : புத்தகம்
2. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………
- அறிவில் சிறந்தவர்
- கவிதை எழுதுபவர்
- பாடல் பாடுபவர்
- மருத்துவம் பார்ப்பவர்
விடை : அறிவில் சிறந்தவர்
3. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….
- தேன் + அருவி
- தே + னருவி
- தே + அருவி
- தேனி + அருவி
விடை : தேன் + அருவி
4. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………………
- புதுமை + உணர்ச்சி
- புத்து + உணர்ச்சி
- புதிய + உணர்ச்சி
- புது + உணர்ச்சி
விடை : புதுமை + உணர்ச்சி
5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………………..
- உள்ளே
- தனியே
- புறம்
- சிறப்பு
விடை : புறம்
6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………………..
- தேன்இருக்கும்
- தேனிருக்கும்
- தேனிறுக்கும்
- தேனிஇருக்கும்
விடை : தேனிருக்கும்
சொற்களை உருவாக்குவோமா?
எ.கா : வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை
- பனிப்புயல் = பனி, புயல், புல், பனிப்பு, பல்
- திருநெல்வேலி = நெல், வேலி, திரு, வேல், நெல்லி, தில்லி
எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக
1. கூ க் ட ளி ம் ப ள் | பள்ளிக்கூடம் |
2. நூ க தி ல ம் ன | நூலகதினம் |
3. ள் ழ ந் கு தை க | குழந்தைகள் |
4. ம வ ன மை லி | மனவலிமை |
5. பு து ர் த் ச் ண சி | புத்துணர்ச்சி |
பொருத்தமான சொல்லால் நிரப்புக
தீ | இல்லாமல் சமைக்க முடியாது |
மண் | இல்லாமல் செடி வளராது |
சக்கரம் | இல்லாமல் வண்டி ஓடாது |
மாட்டு வண்டியிலே
இணைக்கலாமா?
1. அச்சாணி | பச்சை நிறம். |
2. பசுமை | நெற்பயிரின் உலர்ந்த தாள் |
3. வைக்கோல் | வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
சொல் கோபுரம் அமைப்போம்
1. இதனைக் ’கரம்’ என்றும் கூறலாம்
விடை : கை
2. பசு கொடுக்கும் பானம்
விடை : பால்
3. ஆறுகள் சென்று சேருமிடம்
விடை : கடல்
4. வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது
விடை : அச்சாணி
5. பாலைவனக்கப்பல்
விடை : ஒட்டகம்
பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!
1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?
விடை : குடை
2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?
விடை : வாழைப்பூ
3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
விடை : புத்தகம்
4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?
விடை : கோலம்
5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?
விடை : கண்
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?
விடை : பட்டாசு
7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?
விடை : நெல்
8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?
விடை : சூரியன்
பின்வரும் சொற்களின் பொருள் தருக
- சுரக்கின்ற – ஊறுகின்ற
- நித்திலம் – முத்து
- விரும்புகின்ற – வேண்டுகின்ற
- போற்றி – பாதுகாத்து
இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- தோண்டுகின்ற - வேண்டுகின்ற
- உன்னைத் – பொன்னோ
- காக்க – வைக்க
கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
பொ ள் ன் பொ ரு | பொன்பொருள் |
செ ழ் மி த ந் | வணங்கு |
ண வ கு ங் | நித்திலம் |
போ றி ற் | செந்தமிழ் |
தி ம் த் ல நி | போற்றி |
உ கி ல் ல | உலகில் |
அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக
1. ஒலி | சத்தம் |
2. ஒளி | வெளிச்சம் |
3. பள்ளி | கல்வி கற்கும் இடம் |
4. பல்லி | ஒரு சிறிய உயிரி |
5.காலை | சூரியன் உதிக்கும் நேரம் |
6. காளை | எருது |
சரியான சொல்லால் நிரப்பிப் படி
(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)
- ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது
- அதன் கழுத்து நீளமாக இருக்கும்.
- ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.
- ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
- ஒட்டகச்சிவிங்கி இலைதழைகளைத் தின்னும்.
அகர முதலி
- அறிஞர் – அறிவில் சிறந்தவர்
- ஆன்றோர் – பெரியோர்
- இரவாது – பிறரிடம் கேட்டுப் பெறாது
- ஈதல் – கொடுத்தல்
- உரைத்தல் – சொல்லுதல்
- ஒலி – சத்தம்
- ஒளி – வெளிச்சம்
- கதிரவன் – சூரியன்
- களிப்பு – மகிழ்ச்சி
- காலை – சூரியன் உதிக்கும் நேரம்
- காளை – எருது
- கூட்டம் – கும்பல்
- சேகரித்தல் – ஒன்று திரட்டுதல்
- சேர்த்தல் – இணைத்தல்
- தகுதி – தரம்
- தெளிவாக – விளக்கமாக
- நித்திலம் – முத்து
- நூல் – புத்தகம்
- நேர்மை – உண்மை
- பகைவர்கள் – எதிரிகள்
- பணி – வேலை
- பல்லி – ஒரு சிறிய உயிரி
- பள்ளி – கல்வி கற்கும் இடம்
- மிக்காரை – உயர்ந்தோரை
- முயற்சி – ஊக்கம்